செய்திகள் :

"இது RSS-ன் வெறுப்பரசியல்" - விஸ்வநாதன் மீதான புகாருக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்

post image

தமிழிக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை இன்று (ஜுலை.4) தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று புகார் அளித்திருந்தார்.

அந்தப் புகாரில், "கடந்த ஜூன் 21-ஆம் தேதி, மதுரையில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிறுமிகளிடம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பி. விஸ்வநாதன் அவர்கள் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதனைக் குறித்து உடனடியாக முறையான விசாரணை நடத்த உத்தரவிடவும், மேலும் விசாரணை நிறைவடையும் வரை அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்து, தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அமைச்சர் விஸ்வநாதன்
அமைச்சர் விஸ்வநாதன்

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தமிழ்நாடு அரசின் மாண்புமிகு உயர்கல்வி அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் உண்மைக்குப் புறம்பாகத் தமிழக ஆளுநரிடம் புகார் அளித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி ஆகியோரின் பிறந்தநாளினை முன்னிட்டு திரு. பெ.விஸ்வநாதன் அவரது சொந்தத் தொகுதியில் விளையாட்டு நிகழ்ச்சிகளையும், குழந்தைகளுக்குான யோகா நிகழ்ச்சியையும், தன்னுடைய குழந்தைகளாகக் கருதி வாஞ்சையோடு விழா நடத்தியதைக் குறை கூறுவது, "காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்" என்கிற கதையாக இருக்கிறது.

ஆளுநரை சந்தித்த நயினார் நாகேந்திரன்
ஆளுநரை சந்தித்த நயினார் நாகேந்திரன்

மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்கல்வி அமைச்சராக இருக்கக் கூடாது என்கிற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தத் துடிக்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் போதகர் திரு கேசவநாயகம் எழுதிக் கொடுத்ததை எடுத்துக்கொண்டுபோய் ஆளுநரிடம் அளித்த குற்றச்சாட்டினால் உயர்கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதிக்கமே மேலோங்க வேண்டும் என்கிற சித்தாந்தத்தையே இக்குற்றச்சாட்டு நிரூபிக்கிறது.

திரு பெ. விஸ்வநாதன் மீது ஆளுநரிடம் அளிக்கப்பட்ட அறிக்கை ஆர்.எஸ்.எஸ்.ஸின் வெறுப்பரசியலையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்பதே உண்மையாகும்" என்று தெரிவித்திருக்கிறார்.

``லஞ்சம் வாங்கி நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள்; இதுதான் தூய சக்தி ஆட்சியா?" - டிடிவி தினகரன்

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், அதன் ஆட்சி நிர்வாகம் மற்றும் அமைச்சர்கள் மீதான புகார்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தங்களது விமர்சனக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கியுள்ளன... மேலும் பார்க்க

திருவாரூர்: குட்கா விற்க லஞ்சம்; 2 ஆண்டுகளாக மாதம் ரூ.5,000 வாங்கிய 2 போலீஸார் சஸ்பெண்ட்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா, அத்திக்கடை பகுதியில் பாஸ்கர் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக மேலாக பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார்.இவர் கடையில் சட்ட விரோதமாக குட்கா,பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போ... மேலும் பார்க்க

"காவிரிக்காக ஜெயிலுக்குப் போக நான் தயார்" - மேகதாது அணை விவகாரம் குறித்து அன்புமணி

கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசைக் கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிட வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி 'மேகதாது அணை தடுப்போம், காவிரி காப்ப... மேலும் பார்க்க

அணுக்கனிம சுரங்கத் திட்டம்: ``உள்ளூர் மக்களிடம் கலந்தாலோசிக்காமல்..." - அமைச்சர் பிரபு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம (Atomic Minerals) சுரங்கத் திட்டத்திற்காக 1144.0618 ஹெக்டேர் நில ஒதுக்கீடு இந்திய அரிய மண் வளங்கள் நிறுவனத்திற்கு (IREL) அளிக்கப்பட்டிருந்தது. இந்த அனுமதி காலாவதியா... மேலும் பார்க்க

"மக்கள் பிரச்னைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்; தேவைப்பட்டால்..." - ஆளுநர் அர்லேகர் பேச்சு

"பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்" என்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தெரிவித்திருக்கிறார். கிண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் அர்லேகர் , "பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ... மேலும் பார்க்க

'சந்திப்புக்கு ஓகே சொன்ன முதல்வர்; பனையூரில் குவியும் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்!- விவரம் என்ன?

தவெகவில் இணையும் அதிமுகவினரை முதல்வர் விஜய் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில்தான் அதிமுகவினர் தவெகவில் இணைந்து வந்தனர். அப்படியிருக்க தவெகவில் இணைந்த அதிம... மேலும் பார்க்க