செய்திகள் :

திருவாரூர்: குட்கா விற்க லஞ்சம்; 2 ஆண்டுகளாக மாதம் ரூ.5,000 வாங்கிய 2 போலீஸார் சஸ்பெண்ட்

post image

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா, அத்திக்கடை பகுதியில் பாஸ்கர் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக மேலாக பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார்.

இவர் கடையில் சட்ட விரோதமாக குட்கா,பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருவாரூர் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ,கடந்த 25 ஆம் தேதி மாவட்ட போதைப் பொருள் தடுப்பு, தனிப்பிரிவு அதிகாரிகள் பாஸ்கரின் பெட்டி கடையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, அவரது கடையில் குட்கா, பான் மசாலா, கூலிப் போன்ற போதை பொருட்கள் இருந்ததும் அதை அவர் சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்ததும், தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போதைப் பொருளை விற்பனை செய்த பாஸ்கரை கைது செய்து விசாரித்ததில், அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தனது கடையில் போதை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

கைது
கைது

மேலும், போதைப்பொருள் விற்பனையை கண்டும் காணாமல் இருப்பதற்காகவும், காவல்துறை தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்காகவும், அந்தப் பகுதியில் பணியாற்றும் நன்னிலம் தலைமை காவலர் பாரதிராஜா, குடவாசல் தலைமை காவலர் மனோகரன் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஆகிய மூவருக்கு தலா, ஐந்தாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் , மாதம் மாதம் இரண்டு ஆண்டுகளுக்கு, மேலாக லட்சக்கணக்கான பணம் Gpay மூலமாக லஞ்சமாக அளிக்கப்பட்டிருப்பது காவல்துறையின் விசாரணையில் அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமரன் விசாரணை அறிக்கையை, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் அவர்களுக்கு அளித்ததன் அடிப்படையில் லஞ்சம் பெற்ற இரண்டு காவலர்களையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இரண்டு வருடங்களுக்கு மேலாக இரு காவல் அதிகாரிகளுக்கும் போதைப் பொருள் விற்ற பாஸ்கர் மூலமாக பண பரிவர்த்தனை நடந்திருப்பதால் காவல்துறை சைபர் கிரைம், உதவியுடன் Gpay நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு, எவ்வளவு தொகை லஞ்சமாக பெறப்பட்டது, என்கிற விவரம் கேட்கப்பட்டுள்ளது.

இந்த போதை பொருள் விற்பனை விவகாரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவருக்கு பண பரிமாற்றம் நடந்திருப்பதால், அவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கச் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே, லஞ்சம் பெற்றுக்கொண்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குடவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதை பொருட்களை புழக்கத்தில் விட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது.

"காவிரிக்காக ஜெயிலுக்குப் போக நான் தயார்" - மேகதாது அணை விவகாரம் குறித்து அன்புமணி

கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடும் கர்நாடக அரசைக் கண்டித்தும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிட வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி 'மேகதாது அணை தடுப்போம், காவிரி காப்ப... மேலும் பார்க்க

அணுக்கனிம சுரங்கத் திட்டம்: ``உள்ளூர் மக்களிடம் கலந்தாலோசிக்காமல்..." - அமைச்சர் பிரபு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம (Atomic Minerals) சுரங்கத் திட்டத்திற்காக 1144.0618 ஹெக்டேர் நில ஒதுக்கீடு இந்திய அரிய மண் வளங்கள் நிறுவனத்திற்கு (IREL) அளிக்கப்பட்டிருந்தது. இந்த அனுமதி காலாவதியா... மேலும் பார்க்க

"மக்கள் பிரச்னைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்; தேவைப்பட்டால்..." - ஆளுநர் அர்லேகர் பேச்சு

"பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்" என்று ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தெரிவித்திருக்கிறார். கிண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் அர்லேகர் , "பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ... மேலும் பார்க்க

'சந்திப்புக்கு ஓகே சொன்ன முதல்வர்; பனையூரில் குவியும் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்!- விவரம் என்ன?

தவெகவில் இணையும் அதிமுகவினரை முதல்வர் விஜய் இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில்தான் அதிமுகவினர் தவெகவில் இணைந்து வந்தனர். அப்படியிருக்க தவெகவில் இணைந்த அதிம... மேலும் பார்க்க

ஆளுநர் அர்லேகரைச் சந்தித்தது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம்

தமிழிக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "சென்னை கிண்டியில் அமைந்துள்ள மக்கள... மேலும் பார்க்க

''எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல'' - கரூர் குறித்த அமைச்சர் ஆதவ் பேச்சுக்கு சிபிஐ வீரபாண்டியன் கண்டனம்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் நேற்று முன்தினம் இணைந்தனர். இந்த இணைப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ``எங்களுக்கு கரூர் கணக்கு ஒன்று உள்ள... மேலும் பார்க்க