செய்திகள் :

`ராஜகுருவாக இருந்தால் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும்!' - விஜய்க்கு பிரேமலதா நேரடி கேள்வி

post image

தவெக அரசு மீது நம்பிக்கைக் கோரும் தீர்மானம் சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டசபையில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளரும், எம்எல்ஏ-வுமான பிரேமலதா விஜயகாந்த், "எதிர்கட்சிகளை எதிரிகட்சிகளாக நினைக்காமல் தலைவர்களை நேரில் சந்தித்து முதல்வர் அரசியல் மாண்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு வாழ்த்துகள்.

முதல் அறிவிப்பில் பெண்களை பாதுகாக்க சிங்கப்படை அமைப்பு மற்றும் 717 மதுக்கடைகளை மூடியிருப்பது மக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. இதனை தேமுதிகவும் வரவேற்கிறது.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

இருப்பினும் உங்களுடைய ஆட்சி வெளிப்படையாக இருக்கும். முன்னுதாரணமாக இருக்கும் என்று சொன்னீர்கள். ஆனால் இங்கு குதிரை பேரம் நடந்ததாக எதிர்கட்சிகள் அத்தனை பேரும் சொல்கிறார்கள்.

இதுவரைக்கும் இது தமிழ்நாட்டில் நடக்காத ஒரு விஷயம். இதை இந்த நாளில் சொல்வதில் நான் மனவேதனை அடைகிறேன்.

அதேபோல முதல்வர் அன்றைக்கு சொன்னார். இங்கு யாரும் முகம் மூடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அனைவருக்கும் வெளிப்படையான ஒரு ஆட்சி தான் செய்வோம் என்று சொன்னார்.

அப்படியிருக்கையில் முதல்வர் அவர்களை சந்திக்க யார் முகத்தை மூடிக்கொண்டு வாகனத்தில் சென்றார்கள் என்பதை வெளிப்படையாக மக்களுக்கு சொல்ல வேண்டும்.

அதற்கு காரணம் குதிரை பேரம் என்றால் இதைவிட ஒரு தலைக்குனிவு இந்த வரலாற்று சிறப்புமிக்க அவையில் வேறு எதுவும் இல்லை. நிச்சயம் முதல்வர் அதற்கு பதில் சொல்வார் என்று எதிர்பார்கிறேன்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதேபோல அரசு குடும்பத்தில் இருந்து நான் வந்தவன் இல்லை என்று முதல்வர் சொல்லும்பொழுது அனைவரும் வரவேற்றார்கள்.

ஆனால் இன்றைக்கு அவரின் ராஜ குருவாக இருக்கும் ரத்தன் பண்டிட் என்பவரை அரசியல் சிறப்பு அதிகாரியாக அரசு வேலையில் அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக் கண்டிக்கிறேன்.

அவர் உங்களுக்கு ராஜ குருவாக இருந்தால் அவரை நீங்கள் தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு என்ன முன்னுதாரணத்தை நீங்கள் காட்டுகிறார்கள் என்பதை நீங்கள் நிச்சயம் தெளிவுப்படுத்த வேண்டும். இந்த ஆட்சி மக்களுக்கான நேர்மையான ஆட்சியாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

பெரும்பான்மை நிரூபித்த தவெக: "ஆம் இது சிறுபான்மை அரசு தான்!" - முதல்வர் விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 'நம்பிக்கை வாக்கெடுப்பு' இன்று (மே. 13) நடைபெற்றது. இதில் 144 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று முதல்வர் விஜய்யின் தவெக பெரும்பான்மையை நிரூப... மேலும் பார்க்க

"கூவத்தூரையே மிஞ்சுகிறது உங்கள் கூத்து; புஷ்பா படப்பாணியில்.!" - தவெகவை கடுமையாக சாடிய உதயநிதி

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளும் கட்சியாக படியேறியுள்ளது. 59 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக எதிர்க்கட்சியாக பொறுப்... மேலும் பார்க்க

Vijay : '171 பேரில் 144 ஆதரவு வாக்குகள்' நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற தவெக! - அதிமுக ஆதரவு.?

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் பெரும்பாலான தொகுதிகளை வழங்கியிருந்தாலும், பெரும்பான்மையை வழங்கவில்லை. அதனால், தவெக இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை... மேலும் பார்க்க

பதவியேற்பு விழாவில் கையெழுத்து போட மறுத்த முதல்வர் ரங்கசாமி! - 120 விநாடிகள் காத்திருந்தது ஏன்?

ஜோதிடர் குறித்துக் கொடுத்த `மேஜிக்’ டைம்..!புதுச்சேரி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதியிலும், பா.ஜ.க 4 தொகுத... மேலும் பார்க்க

'I will Rethink about it..!' - பிரேமலதாவின் `ராஜகுரு' பேச்சுக்கு விஜய் சொன்ன பதில்!

தமிழக முதலமைச்சர் விஜய்யின்சிறப்பு அரசியல் செயலாளர்என்கிற பதவிக்கு த.வெ.க-வின் செய்தி தொடர்பாளரும், விஜயின் ஆஸ்தான ஜோதிடருமான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசின் முதன்ம... மேலும் பார்க்க

`முதல்வர் ஒரு தரப்பிற்கு ஆதரவளிப்பது என்ன நியாயம்?' - சட்டசபையில் பழனிசாமி vs வேலுமணி தரப்பு!

தவெக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்தது. தற்போது அதிமுகவில் பழனிசாமி அணி, வேலுமணி அணி என்... மேலும் பார்க்க