செய்திகள் :

ராணிப்பேட்டை: இளம்பெண் பாலியல் வன்கொடுமை; 3 இளைஞர்களுக்குக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை!

post image

ராணிப்பேட்டையில், பாலாறு - பொன்னை ஆறு சங்கமிக்கும் படுகையையொட்டி, ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது `நவ்லாக்’ அரசுப் பண்ணை (State Horticulture Farm - Navlock). நவாப் ஆட்சிக்காலத்தில், பழவகைககள் உட்பட 9 லட்சம் பயன் தரும் மரங்களுடன் இந்தப் பண்ணை உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப்பட்ட நவ்லாக் பண்ணை மேல்பண்ணை, நடுப்பண்ணை, கீழ்ப்பண்ணை என மூன்று வகையாகப் பிரித்து, பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், போதிய பாதுகாப்போ, முறையான பராமரிப்போ இல்லாத காரணத்தால், தனது அடையாளத்தையே இழந்து உருக்குலைந்து கிடக்கிறது நவ்லாக் பண்ணை. இதனால், அங்கு போதை கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்து, குற்றப் பின்னணி கொண்ட மர்ம நபர்களின் அட்டகாசமும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

சித்தரிக்கப்பட்ட படம்

இந்த நிலையில்தான் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி இரவு 10.30 மணியளவில், தென்னை ஒட்டு மையம் செயல்படும் நடுப்பண்ணை பகுதி வழியாக பைக்கில் வீடு திரும்பிய இளம் காதல் ஜோடி, புதர் ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு தனிமையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த 3 பேர் கொண்ட கும்பல், காதலனை தாக்கிவிட்டு, 19 வயது இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் ராணிப்பேட்டை அவரக்கரைப் பகுதியிலுள்ள பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் பார்த்திபன் (27), சங்கர் மகன் சிவராஜ் (27), நடராஜன் மகன் ராஜா (24) ஆகிய மூன்று பேரை ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். மேலும், அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.

குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தரும் நடவடிக்கையிலும் போலீஸார் தீவிரம் காட்டினர். அதன்படி, இந்த வழக்கு விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

பாலியல் குற்றவாளிகள்

வழக்கு விசாரணையின் முடிவில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் நிரூபனமானதால், முதல் குற்றவாளியான பார்த்திபனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறையுடன் ரூ.1.40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டாவது குற்றவாளியான சிவராஜ், மூன்றாவது குற்றவாளியான ராஜா ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறையுடன் தலா ரூ.1.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று பாலியல் குற்றவாளிகளும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க