செய்திகள் :

ராமநாதபுரம்: தங்கள் வாக்கினைத் தங்களுக்கே செலுத்த முடியாத பிரதான கட்சி வேட்பாளர்கள்!

post image

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் என 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் தி.மு.க கூட்டணியில் தி.மு.க 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

இதேபோல் அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க 3 தொகுதிகளிலும் பா.ஜ.க ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் சிலர் தங்கள் சொந்த தொகுதியை விட்டுவிட்டு மாற்று தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கம்
காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கம்

திருவாடானை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பரமக்குடியில் வசிக்கிறார். இதனால் இவர் தனது வாக்கை தனக்கு செலுத்த முடியாது.

இவரை எதிர்த்து போட்டியிடும் காங். வேட்பாளர் கருமாணிக்கத்திற்கு காரைக்குடி தொகுதிக்குட்பட்ட கப்பலூரில் வாக்கு உள்ளது. இதனால் இவரும் தனது வாக்கை தனக்கு செலுத்த முடியாது.

பிரசாரத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம்
பிரசாரத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கம்

ராமநாதபுரத்தில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் வாக்கு மேல ராமநதி கிராமத்தில் உள்ளது. இந்தக் கிராமம் முதுகுளத்தூர் தொகுதியில் உள்ளதால் முத்துராமலிங்கமும் தனது வாக்கினைத் தனக்கு செலுத்த முடியாது.

முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் வாக்கு உள்ளது. இதனால் ராஜகண்ணப்பனும் தனது வாக்கினைத் தனக்கு போட முடியாது.

அமைச்சர் ராஜகண்ணப்பன்
அமைச்சர் ராஜகண்ணப்பன்

தேர்தல் பிரசாரம் துவங்கிய நாள் முதல் கொழுத்தும் வெயிலில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் உள்ள குக்கிராமங்கள் தொடங்கி நகர்புறங்கள் வரையில் உள்ள சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து சென்று தங்களுக்கு வாக்கு கேட்டனர் இந்த வேட்பாளர்கள்.

இவர்களுக்கு ஆதரவாக அவர்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைவர்களும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கூட இந்த வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இவை எல்லாம் வெற்றியைத் தராது எனக் கருதி பண்ட பாத்திர அன்பளிப்புகள் தொடங்கி பண பட்டுவாடா வரை செய்து வாக்கு திரட்டினர்.

தங்களுக்கு வாக்காளர்கள் வாக்கு போட வேண்டும் என்பதற்காக தேர்தல் களத்தில் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்த இந்த வேட்பாளர்களும், அவரது குடும்பத்தினரும் கூட அவர்களுக்குத் தேவையான வாக்கினைச் செலுத்திக்கொள்ள முடியாத நிலை தொகுதி மாறி போட்டியிட்ட காரணத்தினால் உருவாகி போனதை என்னவென்று சொல்வது.

"சினிமா என்பது வேறு, அரசியல் என்பது வேறு" – வானதி சீனிவாசன் காட்டம்

கோவை சிவானந்த காலனி பகுதியில் உள்ள காமராஜர் பள்ளியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் வாக்களித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதி... மேலும் பார்க்க

"வாக்களிக்க வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் அணிந்து வந்தது குறியீடா?" – அண்ணாமலை விளக்கம்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பி.எஸ்.ஜி. கலை கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவ... மேலும் பார்க்க

‘வணக்கம் தமிழ்நாடு மக்களே’ – கோவையில் வாக்காளர்களை வரவேற்ற ‘டினா’ ரோபோ!

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 27 லட்சத்து 44 ஆயிரத்து 472 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 1,065 இடங்களில் 3,540 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 182... மேலும் பார்க்க

தேனி: பழங்குடி மக்கள் வாக்களிக்க குதிரையில் பயணம் போன EVM இயந்திரங்கள்! | Photo Album

பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் பழங்குடி மக்கள் தேனி, அல்லிநகரம் சுயம்பு ஐயனார் கோயில்: ... மேலும் பார்க்க

நெல்லை: வாழைமரம், மாவிலைத் தோரணங்கள்!பிங்க், ஊதா நிற வாக்குசாவடிகள்! வாக்குபதிவு முன்னேற்பாடுகள்!

நெல்லை: வாழைமரம், மாவிலைத் தோரணங்கள்!பிங்க், ஊதா நிற வாக்குசாவடிகள்! வாக்குபதிவு முன்னேற்பாடுகள்! மேலும் பார்க்க

TN Assembly Elections 2026: தேர்தல் பெருவிழாவின் க்ளைமாக்ஸ்; வாக்குப்பதிவுக்குத் தயார் நிலையில் தமிழ்நாடு!

2026 சட்டமன்றத் தேர்தல்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்குத் தொடங்கவிருக்கிறது. வழக்கம்போல் இல்லாமல் இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. திமுக இதுவரை தொடர்ந்து... மேலும் பார்க்க