செய்திகள் :

"வதந்தி வேண்டாம்" - மாற்றம் தேவையில்லை என அஜித் சொன்னதாக பரவும் தகவலுக்கு சுரேஷ் சந்திரா விளக்கம்

post image

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நேற்றிரவு முதல் வாக்களிக்க மக்கள் பலரும் சொந்த ஊருக்கு கிளம்பியிருக்கிறார்கள்.

TN Assembly Elections 2026
TN Assembly Elections 2026

அப்படி நேற்று போதுமான பேருந்துகள் கிடைக்காததனால், சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். கூட்ட நெரிசலோடு கிடைக்கும் பேருந்துகளில் மக்கள், அவர்களின் சொந்த் ஊர்களுக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காலை 9 மணி நிலவரப்படி, 17.69 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

நடிகர்கள், அரசியல் கட்சியினர் பலரும் காலையிலேயே வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கத் தொடங்கிவிட்டனர். நடிகர் அஜித்தும் வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்தார்.

அப்போது, செய்தியாளர்கள் அவரிடம் "மாற்றம் தேவைப்படுகிறதா?" எனக் கேள்வி கேட்டதாகவும், அதற்கு அஜித் "மாற்றம் தேவையில்லை" எனப் பதிலளித்ததாகவும் இணையத்தில் தகவல்கள் பரவின.

அஜித்
அஜித்

இந்நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அந்தத் தகவலுக்கு விளக்கமளித்திருக்கிறார். அவர், "வதந்தியைப் பரப்ப வேண்டாம். 'மாற்றம் தேவை' என்றோ அல்லது 'தேவையில்லை' என்றோ அஜித்குமார் எந்தத் தகவலையும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கவில்லை" என விளக்கமளித்திருக்கிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் வாக்களித்த முதல்வர் ஸ்டாலினிடம், "அஜித் மாற்றம் தேவையில்லை எனச் சொல்லியிருக்கிறாரே, அது பற்றிய உங்களின் கருத்து என்ன?" எனச் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அது நல்ல விஷயம் தானே" எனப் பதிலளித்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

TN Assembly Elections 2026: "யார் வந்தாலும் டாஸ்மாக்கை மூடணும்" - சிவகுமார் வேண்டுகோள்

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்றிரவு முதல் வாக்களிக்க மக்கள் பலரும் சொந்த ஊருக்குக் கிளம்பியிருக்கிறார்கள். TN Assembly Elections 2026அப்படி நேற்று ப... மேலும் பார்க்க

"அப்போது நான் அழவில்லை; ஆனால்..." - தனிமை பற்றி மாளவிகா மோகனன்

கார்த்தியுடன் 'சர்தார் 2', விஜய் சேதுபதியுடன் 'பாக்கெட் நாவல்' எனத் தமிழில் இப்போது பயங்கர ஆக்டிவ்வாக இருக்கிறார் மாளவிகா மோகனன். இன்று பேன் இந்தியா நடிகைகளில் ஒருவராக இருக்கும் மாளவிகா மோகனன், 'பேட்ட... மேலும் பார்க்க

ko 15: "உங்களின் முதல் தொலைபேசி அழைப்பு இன்னும் நினைவில் இருக்கிறது..!"- கே.வி.ஆனந்த் குறித்து ஜீவா

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'கோ'. கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. படம் ரிலீஸாகி இன்றுடன் 15... மேலும் பார்க்க

"அவர் பாடகர்னுகூட தெரியாது; அதனால என் பசங்க படிப்பும் நின்னுடுச்சு!" - கலங்கும் ரிச்சர்ட் மனைவி

பின்னணிப் பாடகர் ரிச்சர்ட் அலிசன் நாதன் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டுச் சிரமங்களைச் சந்தித்து வரும் அவருடைய குடும்பத்தினருக்குச் சமீபத்தில் கே.பி.ஒய் பாலா உதவி செய்... மேலும் பார்க்க