செய்திகள் :

ராமேஸ்வரம்: கொடியேற்றத்துடன் துவங்கிய ராமநாதசுவாமி கோயில் ஆடிதிருவிழா; ஆகஸ்ட் 16-ல் திருக்கல்யாணம்!

post image

பிரசித்திபெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றதுடன் துவங்கியது.

முதலாம் நாள் திருவிழாவான நேற்று அம்மன் சன்னிதியில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஶ்ரீ பர்வதவர்த்தினி அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் நாசர்கான், திருக்கோயில் இணை ஆணையர் சுரேஷ், பா.ஜ.க மாவட்ட தலைவர் முரளிதரன், மீனவர் சங்க தலைவர் தேவதாஸ், த.வெ.க நகர் செயலாளர் கோவிந்தன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பர்வதவர்த்தினி அம்மன்
ஆடி திருவிழா கொடியேற்றம்

இதனை தொடர்ந்து பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆடி அமாவாசை தினம் வரும் 12-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், காலை 11 மணி அளவில் ஶ்ரீ ராமர் அக்னிதீர்த்த கடற்கரைக்கு தங்க கருட வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு தீர்த்த வாரி வழங்குகிறார். அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு வெள்ளி ரதத்தில் அம்பாள் வீதி உலா நடக்கிறது. மறுநாள் காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறதுதி

15-ம் தேதி காலை 6 மணிக்கு அம்பாள் தபசு மண்டபத்தில் எழுந்தருளி, மாலை 3 மணிக்கு மேல் சுவாமி - அம்பாள் மாலை மாற்று வைபவமும் நள்ளிரவு 2 மணிக்கு பூ பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. 16-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் விமர்சையாக நடக்கிறது. இதை முன்னிட்டு தினசரி அம்பாள் வீதி உலாவும், அதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளாக பட்டிமன்றம், நாட்டிய நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் கோயில் `முக்தி’ துவாரம்; உடல் பருமனான பக்தர்கள் நுழைய தடை!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இடுக்குப் பிள்ளையார் கோயில் இருக்கிறது. இங்குள்ள விநாயகரை வணங்கி குறுகிய துவாரம் வழியாக வெளியில் வந்தால் `முக்தி’ கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த துவாரம் மிகவும் குறுகலாக ... மேலும் பார்க்க

மும்மத பக்தர்கள் பங்கேற்ற தீவின் பெருவிழா... விடிய விடிய நடந்த புனித சந்தியாகபர் ஆலய திருவிழா!

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் வேர்க்காடு பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் திருத்தலம். தீவு மக்களின் பாதுகாவலராக கருதப்படும் இந்த திருத்தலம் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த திருத்தலத்தின்... மேலும் பார்க்க

மழை வேண்டியும் காவிரி ஆற்றின் நீர்வளம் பெருகவும் வேள்வி யாகம்; முக்கொம்பில் குவிந்த விவசாயிகள்

திருச்சி மாவட்டம், முக்கொம்பு காவிரி ஆற்றங்கரையில் இந்த யாகம் நடைபெற்றது. கோ பூஜை செய்து, ஏழு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலச பூஜை மற்றும் வேள்வி யாகத்தை நடத்தினர். தொடர்ந்து, காவிரி அன்ன... மேலும் பார்க்க

பழனி: ரூ.100 கோடியைக் கடந்த திருக்கோயில் வருமானம்... பஞ்சாமிர்தம் விற்பனையிலும் சாதனை!

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக சிறப்புக் கட்டண தரிசனம், பூஜை பொருள்கள், பஞ்சாமிர்தம், பிரசாதம் வ... மேலும் பார்க்க