செய்திகள் :

'ராஷ்மிகா 100 முறை கேட்ட பிறகே சம்மதித்தேன்.!'- விஜய் தேவரகொண்டாவின் பேச்சு; கொந்தளித்த நெட்டிசன்கள்

post image

தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான ஜோடியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது இவர்களது நடிப்பில் 'ரணபலி' படமும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் பாலிவுட்டின் பிரபல நிகழ்ச்சியான `காஃபி வித் கரண்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சமீபத்தில் இருவரும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

`காஃபி வித் கரண்'
`காஃபி வித் கரண்'

இந்த நிகழ்ச்சியில் இருவரும் தங்களது காதல் மற்றும் திருமணம் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் விஜய் தேவரகொண்டா திருமணம் குறித்து பகிர்ந்த கருத்து ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா, "திருமணம் செய்துகொள்ளும்படி 100 முறைக்கும் மேல் ராஷ்மிகா கேட்டார். சுமார் ஒரு வருடமாக தொடர்ந்து வலியுறுத்திய பிறகே திருமணத்திற்கு சம்மதித்தேன்" என்று கூறியிருக்கிறார்.

இந்தப் பேச்சைக் கேட்ட நெட்டிசன்கள் பலர் விஜய் தேவரகொண்டாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

``ராஷ்மிகா அவரை விட அதிக வெற்றியும் புகழும் பெற்ற ஒரு நடிகையாக இருக்கும்போது, 'அவர் என்னிடம் கெஞ்சினார்' என்பது போல் பொதுவெளியில் கூறுவது ராஷ்மிகாவை அவமானப்படுத்துவது போல் உள்ளது" எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தவிர மனைவியின் காதலை மதிப்பதை விட்டுவிட்டு, அதை ஒரு பெருமையாக தொலைக்காட்சியில் பேசுவது சரியல்ல என்றும், இந்தப் பேச்சு சிறிதும் ரசிக்கும்படியாக இல்லை என்றும் ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"இந்திய புராண கதைகளை திரையில் காட்சிப்படுத்திய விதம் எனக்கு திருப்தி அளித்ததே இல்லை!" - ராஜமெளலி

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, 'வாரணாசி' பட வேலையில் பரபரப்பாக இயங்கி வருகிறார். இப்படத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். Mahesh Ba... மேலும் பார்க்க

"திருமணம் செய்து கொள்ளலாம் என ஒரு வருடத்திற்கும் மேலாக கேட்டுக்கொண்டே இருந்தேன்!" - ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்திருக்கும் 'ரணபலி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இவர்கள் சேர்ந்து நடிக்கும் திரைப்படம் இதுதான். விஜய் தேவ... மேலும் பார்க்க

Ranabali: "என்னை பார்த்து ஓவர் ஆக்டிங் என்று சொன்னாலும் பரவாயில்லை!" - ராஷ்மிகா மந்தனா

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் 'ரணபலி' திரைப்படம், இம்மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் பல்வேறு... மேலும் பார்க்க

'கீதா கோவிந்தம் படத்தின் முதல் நாள்... விஜய் தேவரகொண்டா கோபப்பட்டு கத்திவிட்டார்; நான்.!" - ராஷ்மிகா

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் விஜய தேவரகொண்டா - நடிகை ரஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் 'ரணபலி'. இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் உருவாக... மேலும் பார்க்க

ரணபலி: ``நான் விஜய் தேவரகொண்டாவுக்கு நேரெதிரானவள்" - நடிகை ராஷ்மிகா மந்தனா

நடிகர் விஜய தேவரகொண்டா - நடிகை ரஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து ரணபலி திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் தோழன்’ ஆகிய வெற்றிகரமான படங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து ந... மேலும் பார்க்க

Janhvi Kapoor: ``பாலியல் அத்துமீறலுக்குச் சமமானது... சும்மா விடக் கூடாது" - நடிகர் விஜய் தேவரகொண்டா

AI தொழிற்நுட்பம் எந்தளவு வசதிகளைக் கொடுக்கிறதோ அதே அளவு இடைஞ்சல்களையும், மன உளைச்சலையும் கொடுக்கிறது. சமீபகாலமாக Deepfake தொழிற்நுட்பம் மூலம் நடிகளைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.சில மாதங... மேலும் பார்க்க