தாடிக்கொம்பு: தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் | Photo Album
``ரூ.1,020 கோடி ஊழல்; DGP-க்கு துல்லியமாக ஆதாரங்களை கொடுத்த ED'' - நேரு துறை குறித்து அண்ணாமலை
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, கோயம்புத்தூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 12) பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில்,
கே.என். நேரு சார்ந்த தொழில்களில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார். குறிப்பாக, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை (ED) சுட்டிக்காட்டியது போல, 88 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதைப் பொறுப்பாக DGP அவர்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் 150 விஷயங்களைத் துல்லியமாக பாயிண்ட் அவுட் செய்து முழு விவரத்துடன் கொடுத்துள்ளனர்.

அதேபோல், கே.என். நேரு இருக்கக்கூடிய துறையில், இன்ஜினியர் அதிகாரி பதவிக்கான எழுத்துத் தேர்வில் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய விவகாரம் உள்ளது. இதுவரை போலீஸ் ஒரு வழக்கு கூட தொடங்கி நடவடிக்கை எடுக்கவில்லை. இதை நான் சுட்டிக்காட்டுகிறேன்.
இப்போ மறுபடியும், டிசம்பர் 3-ம் தேதி அமலாக்கத்துறை பொறுப்பு DGP-க்கு 258 பக்கம் கொண்ட ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மட்டும் 1,020 கோடி ரூபாய் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களை இணைத்துக் கொடுத்துள்ளனர்.
குறிப்பாக, அந்தத் துறையிலுள்ள ஒப்பந்தக்காரர்கள் (contractors) ஒப்பந்தத் தொகையிலிருந்து 7.5% முதல் 10% வரை லஞ்சமாக கே.என். நேருவோடு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்க வேண்டியிருப்பதாக, முழு விவரத்துடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வளவு ஆதாரங்களையும் பொறுப்பு DGP-க்கு கொடுத்தும், போலீஸ் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதான் இன்றைய திமுக ஆட்சியின் நிலைமை.
இப்போ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஊராட்சி செயலாளர் ஆட்சேர்ப்பு நடந்து கொண்டிருக்கிறது. எழுத்துத் தேர்வு முடிந்துவிட்டு, நேர்முகத் தேர்வு நடக்க இருந்தது. நேற்று (டிசம்பர் 11) மற்றும் இன்று (டிசம்பர் 12) நேர்முகத் தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று SMS மூலம் “நேர்முகத் தேர்வு ரத்து” என்று அறிவித்தனர்.
இன்று (12.12.2025), ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் இணையதளப் பக்கத்தில் பார்த்தால், நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். எந்த அடிப்படையில் இந்த பட்டியலை தயார் செய்தனர் என்பது தெரியவில்லை.

கோயம்புத்தூர், கரூர், மதுரை மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களின் தகுதியை விட தேர்வு செய்யப்படாதவர்களின் தகுதி கூட அதிகமாக இருக்கிறது. இதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் மூன்றாவது அணி வெற்றி பெற வேண்டுமெனில், அதற்காக ரொம்ப கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஏனெனில், இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் தங்களை மட்டுமே காப்பாற்றிக் கொள்ள நினைப்பார்கள். ஆனால் பாஜக தமிழ்நாட்டில் வெற்றி பெற வேண்டுமெனில் நாங்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். நாங்கள் அதைச் செய்துகொண்டே இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.













