தாடிக்கொம்பு: தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் | Photo Album
காங்கிரஸ்: ``ராகுல் - பிரியங்கா அணியிடையே மோதல் வெட்ட வெளிச்சமானது'' - பாஜக சாடல்
"காங்கிரஸ் கட்சிக்குள் 'ராகுல் அணி' மற்றும் 'பிரியங்கா அணி' இடையே நிலவும் மோதல்கள் தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது" என சாடியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி!
ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது மொக்குயிம், `ட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை நீக்கக் கோரி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதமே இதற்கு காரணம்.
அந்த கடிதத்தில், பிரியங்கா காந்தி வதேரா உட்பட இளைய தலைவர்களுக்குக் கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
#WATCH | Odisha: Cuttack Congress MLA Mohammed Moquim says, "... I have written a letter to Sonia Gandhi stating that the party is going through a difficult phase and needs her advice and new leadership... Age is not on AICC President Mallikarjun Kharge's side... We should bring… pic.twitter.com/AcFPMEwpvG
— ANI (@ANI) December 11, 2025
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, எக்ஸ் சமூக வலைதளத்தில்,
"காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பூசல் அம்பலமாகியுள்ளது! பிரியங்கா அணிக்கும், ராகுல் அணிக்கும் இடையேயான மோதல் இப்போது வெளிப்படையாகத் தெரிகிறது.
ஒடிசாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார்: 'கார்கேவை நீக்குங்கள், பிரியங்காவைக் கொண்டு வாருங்கள்' என்று வலியுறுத்தியுள்ளார்; மாநில மற்றும் மத்தியத் தலைமைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.
83 வயதான மல்லிகார்ஜுன கார்கேயின் தலைமையின் கீழ், காங்கிரஸ் இந்திய இளைஞர்களுடன் இணைய முடியாமல் போனதால், காங்கிரஸ் தலைமைக்கும் இந்திய இளைஞர்களுக்கும் இடையேயான ஒரு 'ஆழமான மற்றும் வளர்ந்து வரும் துண்டிப்பு' நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்" என்று விமர்சித்துள்ளார்.
முன்னதாக, ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், "கட்சி ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து வருகிறது. அதற்கு பிரியங்காவின் ஆலோசனையும் புதிய தலைமையும் தேவை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வயது சாதகமாக இல்லை.
நாம் இளம் தலைவர்களை முன்னுக்குக் கொண்டு வர வேண்டும். சோனியாஜியும் காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC) உறுப்பினர்களும் இதைப் பற்றி நிச்சயம் விவாதிப்பார்கள் என்று எனக்குத் தெரியும்" என்று தெரிவித்திருந்தார்.
காங்கிரஸின் நிலை
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கட்சி படுதோல்வி அடைந்த பிறகு ராகுல் காந்தி பதவி விலகியதால், சோனியா காந்தி இடைக்காலத் தலைவராகச் செயல்பட்டு வந்த நிலையில், அவருக்குப் பின் மூத்த அரசியல்வாதியான கார்கே, 2022 அக்டோபரில் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரைத் தோற்கடித்துக் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார்.
மறுபுறம், பிரியங்கா காந்தி வதேரா ஜனவரி 2019-ல்தான் முறையாக அரசியலில் நுழைந்தார். தற்போது அவர் பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.













