செய்திகள் :

``மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்" - `வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்ச்சியில் உறுதியளித்த ஸ்டாலின்

post image

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசில் மகளிருக்கான திட்டங்களால் பயனடைந்த, சாதனை படைத்த பெண்களை ஒருங்கிணைத்து `வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது தமிழக அரசு.

சென்னையில் இன்று (டிசம்பர் 12) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும் என்றும், வரலாற்று ஆசிரியர்கள் மகளிர் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயம் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்தான் தொடங்கியது என்று எழுதுவார்கள் என்றும் பெருமிதம் கொண்டார்.

ஸ்டாலின் - கிருஷ்ணம்மாள்
ஸ்டாலின் - கிருஷ்ணம்மாள்

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``இங்கு பேசிய எல்லோருடைய பேச்சையும் கேட்டு நெகிழ்ந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இரண்டு பேரை அழைத்திருக்கிறோம். ஒருவர் கிருஷ்ணம்மாள், நூறு வயதில் நிறை வாழ்க்கை வாழ்ந்து பொது வாழ்வில் வெற்றி பெற்றவர்.

இன்னொருவர் இளம் வெற்றியாளர் துளசிமதி முருகேசன். சிறப்பாகப் பேசினார், விளையாட்டுத்துறை மட்டுமல்லாது அரசியலுக்கு வந்தாலும் இவர்தான் நம்பர் 1-ஆக இருப்பார். இந்த வயதில் எல்லா சவால்களையும் வென்று சாதனை படைத்திருக்கிறார்.

இந்தச் சமூகம் சாதி, மத, இன, மொழி, பாலின பாகுபாடு என்றில்லாமல், எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவ சமுதாயமாக இயங்க வேண்டும் என்பதுதான் நம்முடைய லட்சியம்.

நம் லட்சியப் பயணத்தில் வரலாற்றைத் திருத்தி எழுதும் திட்டமாக அமைந்திருப்பதுதான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். திட்டங்கள் என்பது கொள்கைகளின் செயல் வடிவம்.

ஒரு திட்டத்தின் உண்மையான வெற்றி என்பது அதை பொதுமக்கள் எந்த அளவுக்கு சிறப்பாகப் பயன்படுத்தி, தங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. அந்த வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

விடியல் பயணத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மிச்சம் ஆகிறது. புதுமைப்பெண். தமிழ் புதல்வன் திட்டங்களில் தங்களுடைய பிள்ளைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைப்பதனால், ஒவ்வொரு குடும்பத்திலும் பணப்புழக்கமும், சேமிப்பும் அதிகரித்திருக்கிறது.

`வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்ச்சி
`வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்ச்சி

இப்படித் திராவிட மாடலின் முத்திரைத் திட்டங்களை முதலீடாக மாற்றி தங்களின் பொருளாதார வலிமையை தமிழ்நாட்டுப் பெண்கள் உயர்த்தியிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் வெற்றியாக இதைத்தான் நான் பார்க்கிறேன்.

பெண்களுக்கு கையில் காசு இருப்பதால் கூடுதல் சமூக மதிப்பு. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், நன்னிலம் மகளிர் நில உடமை திட்டம், விடியல் பயணம், மக்களைத் தேடி மருத்துவம், சுய உதவிக் குழுக்கள், வெற்றி நிச்சயம், நலம் காக்கும் ஸ்டாலின், பெண் தொழில் முனைவோர், தோழி விடுதிகள் என நம் திராவிட மாடல் அரசின் எண்ணற்றத் திட்டங்களால் பயனடைந்த, வெல்லும் தமிழ் பெண்களாக இங்கே தங்களின் வெற்றிகளைச் சொல்லும்போது திராவிட இயக்கத்தின் தொண்டனாக எனக்கு அளவில்லாத பெருமை உண்டாகியிருக்கிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் வெற்றியின் உச்சம் என்பது அண்டை மாநிலங்களில்கூட இந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் நலத் திட்டங்களை இலவசங்கள் என்று கொச்சைப்படுத்துகிறவர்கள்கூட அவர்களுடைய மாநிலங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கிவிட்டார்கள்.

மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஒடிசா, புதுச்சேரி, கர்நாடகா, ஜார்கண்ட், இமாச்சலப்பிரதேசம், மேற்கு வங்கம், சிக்கிம் எனப் பத்து மாநிலங்களில் உரிமைத்தொகை. மகளிர் மறுமலர்ச்சிக்கான திட்டமாக உயர்ந்து நிற்கிறது.

`வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்ச்சி
`வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்ச்சி

இந்த ஆயிரம் ரூபாய் என்பது வெறும் தொடக்க மட்டும் தான். இந்தத் திட்டத்தில் இதுவரைக்கும் 13,75,492 சகோதரிகளுக்கு மாதந்தோறும் இதுவரை 28,000 ரூபாய் வழங்கியிருக்கிறோம்.

எண்ணிக்கை அதிகரிப்பதற்காக மக்களிடம் ஸ்டாலின் முகாம்கள் மூலம் விடுபட்ட மகளிரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தேன். இன்று காலை 16,94,339 பேருக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் போட்டு விட்டோம்.

இனிமேல் தமிழ்நாட்டில் இருக்கின்ற 1,30,69,839 சகோதரிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து கிடைக்கும்.

`வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்ச்சி
`வெல்லும் தமிழ் பெண்கள்' நிகழ்ச்சி

தலைநிமிரும் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்ந்த நடை போட நிச்சயம் உரிமைத்தொகையும் உயரும், பெண்களின் உரிமையும் உயரும்.

எதிர்காலத்தில் வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றை எழுதும்போது மகளிர் முன்னேற்றத்தின் புதிய அத்தியாயம் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில்தான் தொடங்கியது என்றுதான் எழுதுவார்கள் என்று உறுதியாக சொல்கிறேன்.

இந்த உரிமைத்தொகை உங்களின் உயர்வுக்கு மட்டுமல்ல உங்களின் பிள்ளைகள் கல்விக்கும் பயன்படும். கல்விதான் சிறந்த முதலீடு யாராலும் அழிக்க முடியாத சொத்து.

தலைமுறைகள் தழைக்க பெண்கள் முன்னேற்றமும், பெண் கல்வியும் அவசியம். நீங்கள் முன்னேறி வந்து சிறகடித்து பறக்க வேண்டும். ஆணும் பெண்ணும் சரிநிகர் என்று சாதனைகள் படைக்க வேண்டும். அதற்கு உங்களின் சகோதரனாக, உங்களின் குடும்பத்தில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றைக்கும் இருப்பேன்" என்று கூறினார்.

காங்கிரஸ்: ``ராகுல் - பிரியங்கா அணியிடையே மோதல் வெட்ட வெளிச்சமானது'' - பாஜக சாடல்

"காங்கிரஸ் கட்சிக்குள் 'ராகுல் அணி' மற்றும் 'பிரியங்கா அணி' இடையே நிலவும் மோதல்கள் தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது" என சாடியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி!ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற ... மேலும் பார்க்க