“Good science should end up in a glass of water!” - INTERVIEW WITH PROF. THALAPP...
ரூ.100 கோடி மோசடி வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபாய் 100 கோடிக்கு மேல் பண மோசடி செய்ததாகப் பதிவுச் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த திமுக ஆட்சியில் 1,000- க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, தன் மீது போடப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb













