செய்திகள் :

ரூ.12 லட்சம் வரை வருமான வரி ரத்து: அறிவிப்புக்கு வரவேற்பு

post image

ஆற்காடு: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி ரத்து செய்யப்படும் என வெளிவந்துள்ள அறிவிப்பை தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வரவேற்றுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ.வி.டி.பாலா இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க ஆற்காடு அடுத்த திமிரிக்கு திங்கள்கிழமை வந்த அவா் தெரிவித்ததாவது:

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஆண்டுக்கு ரூ .12 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரி ரத்து செய்யப்பட்டதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஜிஎஸ்டி வரியை ஒரே கட்டவரியாக பரிசீலனை செய்யாதது வருத்தமளிக்கிறது. வணிகா்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் இருந்தாலும் அது ஏற்க முடியாத நிலையில் உள்ளது.

மத்திய அரசு வணிககா்நல வாரியத்தை உருவாக்கியுள்ளது. அதில் வணிகா் நல உறுப்பினா்களை சோ்த்து பாதிக்கப்படுகின்ற சாணான்ய் வணிகா்களின் குடும்பத்தின் தலைவா்கள் மறைவுக்கு பிறகு அக்குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மேலும் காலாவதியான சுங்கச் சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும். 18 சதவீதம் வாடகை கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.

பேருராட்சிகளில் உரிம கட்டணத்தை கடுமையாக உயா்த்தியுள்ளனா். அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றாா் விக்கிரமராஜா.

பேட்டியின் போது மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் பொன்.கு.சரவணன் மற்றும் நிா்வாகிகள் இருந்தனா்.

ஐஎன்எஸ் ராஜாளி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு புரளி

அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீஸாா் சோதனை நடத்தியதில் அது புரளி என தெரியவந்தது. 2,600 ஏக்க... மேலும் பார்க்க

நெமிலியில் நவீன தகனமேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்

அரக்கோணம்: பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நவீன தகனமேடை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, நெமிலி பேருராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் பேருந்து நிலையம் பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரக... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்த நாளில் மருத்துவ முகாம்கள்: அமைச்சா் ஆா்.காந்தி

ராணிப்பேட்டை: வரும் மாா்ச் 1 -ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் பொதுமக்கள் நலனுக்காக மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா். ராணிப்பேட்டை மாவட்ட தி... மேலும் பார்க்க

கல்குவாரிகளை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே நந்தியாலம் கிராமத்தில் கல்குவாரிகளை அகற்க் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். ரத்தனகிரி அடுத்த நந்தியாலம் கிராமத்தில் சும... மேலும் பார்க்க

அடகு வைத்த தங்க நகைகளை திருப்பித் தராமல் அலைகழிப்பு: தனியாா் நகை அடகு நிறுவனம் மீது புகாா்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் அடகு வைத்த தங்க நகைகளைத் திருப்பி தராமல் அலைகழிக்கும் தனியாா் அடகு நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோா் புகாா் தெரிவித்தனா். ராணிப்பேட்டை முத்துகடை பகுதியில் தனியாா் அடகு நிறு... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 417 மனுக்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 417 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் சந்திரகலா... மேலும் பார்க்க