AI யுகம் - சீனாவில் 12,000 பட்டப்படிப்புகள் நீக்கம்: மறுசீரமைக்கப்படும் கல்விமுற...
'ரூ10 லட்சம் கோடி கடன்; திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு'- வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழக அரசு
தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

அந்தவகையில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று மாலை 5.30 மணிக்கு வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். தற்போது தமிழகத்தின் நிதிநிலையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.
வெள்ளை அறிக்கையில்...
* கடந்த திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்வு.
* வருவாய் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சம்.
* 2021-26-ல் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி.
* வருவாய் பற்றாக்குறை 78,234 கோடியாக உயர்ந்திருக்கிறது.
* மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலுவை கடன் 28.3% ஆக இருக்கிறது.
* 10 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகை
* மொத்த வருவாயில் 22.8% தொகை வட்டிக்காக மட்டுமே செலவிடப்படுகிறது.
* அரசுப் பொதுத்துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் 13.8 லட்சம் கோடியாக அரசின் கடன் சுமை அதிகரிக்கிறது.

* 1,28,934 ரூபாய் - தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு நபரின் மேலும் உள்ள கடன் சுமை.
* ஒரு காலத்தில் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது சராசரிக்கும் கீழே சரிவு.
* 2025-26 நிதியாண்டில் மட்டும் 67,050 கோடியை கடனுக்கான வட்டியாக மட்டுமே செலவளித்திருக்கிறோம்.
* அரசுப் பொதுத்துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் 13.8 லட்சம் கோடியாக அரசின் கடன் சுமை அதிகரிக்கிறது.
* சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளில் பெற்ற கடனை விட இரட்டிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் கடன் வாங்கியிருக்கின்றனர்.
* சொந்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வட்டிகே செலவாகிறது.
* மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ஜிஎஸ்பிடியில் 5.45 % ஆக குறைவு.
தகவல்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும்...













