செய்திகள் :

`ரெளடி வெள்ளைக்காளி மீது வெடிகுண்டு வீசிய ரௌடி என்கவுண்டர்' - பெரம்பலூர் பரபரப்பு

post image

கடந்த 24-ம் தேதி ரௌடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் உணவு சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது, பாதுகாப்புக்காக சென்ற போலீஸார் மற்றும் ரௌடி வெள்ளைக்காளி ஆகியோர், உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென இரண்டு கார்களில் அங்கு வந்த மர்மம் கும்பல், போலீஸாரின் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது.

வெள்ளைக்காளி

இதில், மூன்று போலீஸார் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி, பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ம.க அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டனர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட திருச்சி சரக ஐ.ஜி பாலகிருஷ்ணன், "திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளைக்காளி என்ற குற்றவாளியை அழைத்துச் சென்று கொண்டிருந்தோம். வாகனங்களில் ஏற்கனவே ஆயுதம் தாங்கிய போலீஸார் இருந்தனர். இடையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, மர்ம நபர்கள் வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்றனர். அப்போது, பாதுகாப்புக்காக இருந்த போலீஸ் உடனடியாக குற்றவாளியை பாதுகாத்தார்.

போலீஸ் எஸ்கார்டு எஸ்.ஐ, உடனடியாக துப்பாக்கியால் குற்றவாளிகளை நோக்கி சுட்டபோது, அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தப்பி சென்றவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்று தெரிவித்திருந்தார்.

balakirushnan

இந்நிலையில், இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக ரௌடி அழகுராஜா என்பவரை போலீஸார் கைது செய்ததாக சொல்லப்பட்டது. இந்த சூழலில்தான், கைதான அழகுராஜா அவன் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை தேடுவதற்காக வனப்பகுதிக்கு அழைத்து சென்றபோது, போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது சுடப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அழகுராஜா தாக்கியதில் ஒரு போலீஸூக்கு அரிவாள் வெட்டுக் காயம் ஏற்பட்டதாகவும் சொல்கிறார்கள். பிரபல ரௌடி மீது நாட்டுவெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவத்தில் இடுப்பட்டதாக சொல்லப்பட்ட ரௌடி ஒருவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுநகர்: உரிமைத்தொகையை செலவு செய்ததால் கோபித்த மனைவி; விபரீத முடிவெடுத்த கணவரால் சோகம்!

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரின் மனைவி ராமு. இவரது வங்கிக் கணக்கில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம் ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: ஒரு தலை காதல் தொல்லை; உயிரை மாய்த்த மாணவி; மாணவரை கைதுசெய்ய குடும்பத்தினர் கோரிக்கை!

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கோகுல் நகரைச் சேர்ந்த தம்பதியின் மகள், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவர் ஒருவ... மேலும் பார்க்க

`மகனிடம் சேரப் போகிறோம்' - பெற்றோரின் உருக்கமான கடிதம் - சோகத்தில் ஆழ்ந்த கிராமம்!

சத்தீஸ்கர் மாநிலம், ஜான்ஜ்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ளது தார்தேய் (Dhardei) கிராமம். இங்கு கிருஷ்ணா படேல் (48), அவர் மனைவி ரமா பாய் (47) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டு முற்ற... மேலும் பார்க்க

Taapsee Pannu: ``தினமும் 80 பாலியல் குற்றங்கள்... நாம் பழகிவிட்டோம்" - நடிகை டாப்ஸி பண்ணு ஆவேசம்!

பீகார் மாநிலம், பாட்னாவில் நீட் தேர்வுக்காகத் தயாராகி வந்த 17 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த ம... மேலும் பார்க்க

நடத்தையில் சந்தேகம்: காதலர் தின விருந்தில் மனைவியைக் கொன்றுவிட்டு நாடகம் - கணவன் சிக்கியது எப்படி?

ஹரியானா மாநிலம், குருகிராம் பஹதுர்கர் பகுதியைச் சேர்ந்த மஹக் என்ற பெண் இரண்டு நாள்களுக்கு முன்பு காதலர் தின இரவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். மஹக் பிரபல தனியார் வங்கியில் பணியாற்றி வந்தா... மேலும் பார்க்க

சென்னை: கணவன், மனைவியைக் கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் - திருமணம் மீறிய உறவால் விபரீதம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற பார்த்தசாரதி(42). இவரின் மனைவி ஜமுனா(35). இவர்களது எதிர் வீட்டில் சுசில் (32), அவரின் மனைவி கிரிஜா(29) ஆகி... மேலும் பார்க்க