செய்திகள் :

"லட்சியமும் செயலும் சேர்ந்தால் எதுவும் சாத்தியம்..." - முதல்வரை வாழ்த்திய `முதல்வன்' பட இயக்குநர்!

post image

தமிழக முதல்வராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாகத் தவெக-வை மக்கள் உருவெடுக்கச் செய்திருக்கிறார்கள். பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் பதவியை ஏற்றுக் கொண்டார் விஜய்.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

அதனைத் தொடர்ந்து இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுப் பெரும்பான்மையை நிரூபித்திருக்கிறது.

முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் விஜய்-க்குச் சினிமா துறை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கரும் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவில், "இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் விஜய்-க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

மக்களின் விருப்பம் நிறைவேறியிருக்கிறது. ஒரு மாஸ் தொடக்கத்தோடு உங்கள் பயணம் ஆரம்பித்திருக்கிறது. இன்னும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள் பிரதர்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் விஜய் 'நண்பன்' படத்தில் நடித்திருக்கிறார். ஷங்கர் இயக்கிய 'முதல்வன்' படத்தில் விஜய்யைத்தான் முதலில் கதாநாயகனாக நடிக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அப்போது அது நடக்கவில்லை.

தாத்தா ஆனார் நடிகர் பிரபு; ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.'திரிஷா இல்லனா நயந்தாரா', 'மார்க் ஆண்டனி', 'குட் பேட் அக்லி'... மேலும் பார்க்க

Karuppu: 'ஒரு அண்ணனா சொல்றேன், இந்த வயசை மிஸ் பண்ணாதீங்க.!' - சூர்யா

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்... மேலும் பார்க்க

குழந்தை ரசிகர்கள் அதிகம்னால, பேயை டிரெண்ட் ஆக்கிட்டாங்க! - ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4' பரபர அப்டேட்

ராகவா லாரன்ஸின் ஹிட் பாகங்களான 'காஞ்சனா' சீரீஸ், நாலாவது பாகத்துடன் நிறைவடைகிறது என்ற தகவல் பரவி வருகிறது. இப்போது அவர் இயக்கி வரும் `காஞ்சனா 4' படம் 'முனி' பட வரிசையில் 5வது பாகமாகும். இதற்கிடையே 'பெ... மேலும் பார்க்க

"ஒரே கட்சியில இருந்து நிறைய பேர் முதல்வராக முயற்சி பண்றாங்க!" - கேரளா அரசியல் பற்றி ஆர்.ஜே. பாலாஜி

சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ச... மேலும் பார்க்க

Rajinikanth: "அந்த அனுபவம் என் ஈகோவை உடைத்துவிட்டது!; அதுவே சுப்ரீம் ஸ்டார்டம்!" - ரஜினி கலகல

நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டார். அவர் நடிக்கவிருக்கும் படங்களும் அடுத்தடுத்து லைன் அப்பில் இருக்கின்றன. கூடிய விரைவில் அப்படங்களும் படப்பிடிப்பிற்கு டேக் ஆஃப் ஆ... மேலும் பார்க்க

Preethi Asrani: ``நதியில் நடக்கும் நிலவின் நகலே..."- ப்ரீத்தி அஸ்ரானி லேட்டஸ்ட் க்ளிக்ஸ்|Photo Album

Manju warrier: `பறக்கும் ராசாளியே...' - மஞ்சு வாரியார் ஸ்டைலிஷ் போட்டோஸ்| Photo Album மேலும் பார்க்க