செய்திகள் :

லாரி லாரியாக இறங்கும் டிரம்கள் - கோவை தொண்டாமுத்தூரில் அடுத்த பரிசை இறக்கிய வேலுமணி!

post image

கோவை மாவட்டத்தில் எப்படியாவது வெற்றி பெற திமுக தீவிரம் காட்டுகிறது. கோவையில் தங்களின் செல்வாக்கை நிரூபிக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது. கோவையில் அதிமுகவின் வெற்றியை வேலுமணி தன்னுடைய கௌரவ பிரச்னையாகவே பார்க்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் வேலுமணி தான் சிறை செல்வார் என 2021 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் மு.க ஸ்டாலின் கூறினார். அந்தளவுக்கு கோவையில் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.

வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு பல்வேறு வியூகங்களை திமுக வகுத்தது. அது கைக் கொடுக்காததால் செந்தில் பாலாஜியை கோவை திமுக பொறுப்பாளராக களமிறக்கியது. உள்ளாட்சி தேர்தலில் பரிசு மழைகளை இறக்கி அவர் திமுகவுக்கு வெற்றியை தேடி தந்தார்.

கோவை அதிமுக பரிசு பொருள்கள்
கோவை அதிமுக பரிசு பொருள்கள்

சட்டமன்ற தேர்தலிலும் செந்தில் பாலாஜி பல்வேறு வியூகங்களை வகுத்து வந்த நிலையில், வேலுமணி அவரை ஓவர்டேக் செய்து களத்தில் வேகம் காட்டி வருகிறார். ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக பரிசுகளை இறக்கியது.

தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் வேட்டி, சட்டை, சேலை, ஹாட் பாக்ஸ், ஃபிளாஷ்க், குடை, தட்டு உள்ளிட்ட பொருள்களை பரிசாக வழங்கினார். அந்தப் பொருள்கள் கொடுத்த சில நாள்களிலேயே தொண்டாமுத்தூர் தொகுதியில் மேலும் சில பரிசுகளை கொடுத்து வேலுமணி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

டிரம்

தொண்டாமுத்தூர் மக்களுக்கு 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டிரம்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. வேலுமணியின் இந்த நகர்வு திமுக மற்றும் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிமுகவினரிடம் பேசியபோது, “தொண்டாமுத்தூர் தொகுதியில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தில் சுமார் 25,000 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு மட்டும் தான் டிரம்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இதற்காக லாரிகள் மூலமாக டிரம்கள் கொண்டு வரப்படுகின்றன.

லாரி லாரியாக டிரம்

அந்தந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து காலை 6-8 மணிக்குள் டிரம்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பட்டியலின மக்களின் வாக்குகளை பெறும் நோக்கத்தில் தான் டிரம்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேலும் பல சர்ப்ரைஸ் பரிசுகள் இறங்க வாய்ப்புள்ளது” என்றனர்.

``ஈரானிய மண்ணில் நடந்த படுகொலை: மோடி அரசின் மௌனம் நடுநிலை அல்ல" - கேள்விகளை அடுக்கும் சோனியா காந்தி!

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா கமேனி உயிரிழந்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இந்தியா எ... மேலும் பார்க்க

`` ‘கேரளா ஸ்டோரி 2’ படத்தைத் தமிழக அரசு தடை செய்யவேண்டும், இல்லையென்றால்..!" - சீமான் எச்சரிக்கை

"இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எ... மேலும் பார்க்க

`எண்ணிக்கையில் கறார் வேண்டாம்' - ராகுலை சரிகட்டிய கார்கே? - ப.சிதம்பரம் போடும் `2028' கணக்கு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய பிறகு சில தகவல்களை டெல்லி மேலிடத்திற்கு தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இன்று மாலைக்குள் தி.மு.க வுடன் எண்ணிக்கை இறுதியாகும் என்கிற... மேலும் பார்க்க

'4 மணிக்கு மகள் நிச்சயதார்த்தம்; அந்தரத்தில் கூட்டணி! சித்தரஞ்சன் சாலையில் போராடும் செல்வப்பெருந்தகை

திமுக - காங்கிரஸ் கூட்டணி இழுபறியில் நீடித்து வரும் நிலையில் ப.சிதம்பரமும் செல்வப்பெருந்தகையும் முதல்வரை சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 4 மணிக்கு ECR இல் மகளின் நிச்சயதார்த்தம் ... மேலும் பார்க்க

சிதம்பரம் கொண்டு வந்த `சீக்ரெட்' மெசேஜ்! உற்சாகத்தில் தி.மு.க - `கை'கொடுக்குமா சிதம்பர முயற்சி?

காங்கிரஸ் - தி.மு.க இடையே நிலவி வந்த சிக்கலுக்கு, சிதம்பரம் வழியாக முடிவு எடுக்கபட்டுவிட்டது என்கிற தகவலை காங்கிரஸ் வட்டாரத்தினர் சிலர் உறுதிபடுத்தியுள்ளனர். ஸ்டாலினுக்கு தான் சொல்லி விரும்பிய மெசேஜை ... மேலும் பார்க்க