செய்திகள் :

லால்குடி: செப்டிக் டேங்க் சுத்தம் செய்தபோது நிகழ்ந்த சோகம்; இரு இளைஞர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

post image

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வடுகர்பேட்டை, அன்னை நகர் பகுதியில் உள்ள தேவனாதன் என்பவரது வீட்டில் உள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதற்காக, சகானா என்ற தனியார் கழிவு அகற்றும் வாகனத்தின் மூலம் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். 12 அடி நீளமும், 12 அடி அகலமும், 12 அடி ஆழமும் கொண்ட அந்த செப்டிக் டேங்கில் இருந்து கழிவுநீர் உறிஞ்சப்பட்ட பிறகு, அடியில் இருந்த கழிவுகளை சுத்தப்படுத்துவதற்காக கணேஷ் என்பவர் முதலில் உள்ளே இறங்கியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக தாக்கிய நச்சு வாயு காரணமாக அவர் மயக்கமடைந்தார். ​மயங்கிய கணேஷை காப்பாற்றுவதற்காக, அவருடன் வந்த முகேஷ்குமார் என்பவரும் கயிற்றைக் கட்டிக்கொண்டு ஏணி வழியாக டேங்கிற்குள் இறங்கியுள்ளார். ஆனால், அவரும் விஷவாயு தாக்கி உடனடியாக மயங்கி விழுந்தார்.

dead

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புள்ளம்பாடி தீயணைப்புத் துறையினர், ஆக்சிஜன் சுவாசக் கருவிகளை அணிந்து செப்டிக் டேங்கிற்குள் இறங்கி, மயங்கிக் கிடந்த இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அங்கு தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் பரிசோதித்ததில், இருவருமே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம், குறித்து கல்லக்குடி காவல்நிலைய ஆய்வாளர் ஜாக்குலின் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒருவர் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மற்றொரு இளைஞர் வடமாநில இளைஞர் என்றும் சொல்லப்படுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: குற்றஞ்சாட்டும் தவெக; சவால்விடும் திமுக; காத்திருக்கும் நீதி

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 2018, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில், 2 பெண்கள் உட்பட 13 பேர் போலீஸாரால் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர... மேலும் பார்க்க

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க