செய்திகள் :

லால்குடி: ஸ்டேஷனில் கத்தியைக் காட்டி போலீஸுக்குக் கொலை மிரட்டல் - இளைஞர் கைது!

post image

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கல்லக்குடி அருகே உள்ள மால்வாய் சாலையில், கல்லக்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சோபியா தலைமையிலான போலீஸார் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சாலையில் தாறுமாறாக இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்துள்ளார். வந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். ​விசாரணையில் அவர் கோவண்டாகுறிச்சி, செம்பிய தெருவைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் ராஜ் (வயது: 25) என்பதும், அவர் அதிகளவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவரது இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தினர். பின்னர், சாவியை காவல் நிலையத்தில் வைத்துவிட்டு மீண்டும் வாகனத் தணிக்கைப் பணிக்குச் சென்றனர். அச்சமயத்தில் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலர் சிலம்புச்செல்வி மட்டுமே பாரா காவல் பணியில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ராஜ், பெண் காவலரிடம் தனது வாகனத்தைத் தருமாறு கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.​

ராஜ்

இதனால், அதிர்ச்சியடைந்த பெண் காவலர் அச்சத்தில் வெளியேறவே, ராஜ் காவல் நிலையத்தில் இருந்த சாவியை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து பெண் தலைமைக் காவலர் சிலம்புச்செல்வி அளித்த புகாரின் பேரில், கல்லக்குடி போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து ராஜைக் கைதுசெய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் காவல் நிலையத்திலேயே பெண் காவலருக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாபநாசம்: மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற எஸ்.எஸ்.ஐ; டிராக்டர் மோதியதில் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர், கோடுகிழி பகுதியில் விதியை மீறி இரவு நேரத்தில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மெலட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு... மேலும் பார்க்க

குடியாத்தம்: யானை தந்தங்களைக் கடத்திய 3 பேர் கைது - வனத்துறையினர் தீவிர விசாரணை!

ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டம், குடியாத்தம் வழியாக சட்டத்துக்குப் புறம்பாக யானை தந்தங்கள் கடத்தி வரப்படுவதாக குடியாத்தம் வனச்சரக அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துற... மேலும் பார்க்க

வயதை மறைத்து ஆன்லைனில் நட்பு: உண்மை தெரிந்ததும் பிளாக் செய்த சிறுமி... தேடி அமெரிக்கா சென்றவர் கைது!

மும்பையைச் சேர்ந்த பிரீத் பங்கஜ் ஜெயின்(31) என்பவருக்கு மைனர் பெண் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. சமீபத்தில் அப்பெண்ணுக்கு பிரீத் பங்கஜ் ஜெயின் வயது குறித்த உண்மை தெரிய வந்தது. உடனே... மேலும் பார்க்க

தலைக்கேறிய மது போதை... சொந்த வீட்டையே எரித்த இளைஞர்! - குளித்தலை அதிர்ச்சி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சிவாயம் ஊராட்சி, குப்பாச்சிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி மற்றும் அவரது மனைவி சிறும்பாயி. இவர்கள், அப்பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்... மேலும் பார்க்க

புதுச்சேரியை உலுக்கிய 9 வயது சிறுமியின் கொலை - தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது ஏன்?

புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கடந்த 2024 மார்ச் மாதம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலை... மேலும் பார்க்க

ஊட்டி: ரத்த தான முகாமில் சாதி கேட்கப்பட்ட அதிர்ச்சி - ரத்தம் தர மறுத்து வெளியேறிய‌ மாணவர்கள்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரியில் சுகாதாரத்துறை சார்பில் ரத்த தான முகாம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவ, மாணவி்கள் பங்கேற்று ரத்த தானம் செய்துள்ளனர். இந்த ரத்த த... மேலும் பார்க்க