செய்திகள் :

'வசந்த காலம் வரப்போகிறது!' வைகோ பேச்சு - திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக?

post image

`பனிக்காலம் முடிந்து வசந்த காலம் வரப்போவதாக' மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருக்கிறார்.

திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதேசமயம் ஜூன் 27-ம் தேதி மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தங்களது முடிவை அறிவிப்பதாக மதிமுகவும் தெரிவித்திருக்கிறது.

துரை வைகோ
துரை வைகோ

இந்நிலையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டப்போது பேசிய வைகோ, " நமது கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் கண்களுக்கு தெரிகிறது.

தொண்டர்கள் மன வருத்தத்தில் உள்ளனர். அவர்கள் மனதில் காயங்கள் உள்ளன.

கடந்த, 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்தோம். நமக்கு போதுமான சீட் வழங்கவில்லை.

தனி சின்னத்தில் போட்டியிட முடியவில்லை. கூட்டணியில் நமக்கு அங்கீகாரம் இல்லை என தொண்டர்கள் மன வேதனையில் உள்ளனர்.

பனிகாலம் முடிந்தால் வசந்தகாலம் வரப்போகிறது. நமக்கும் பனிகாலம் முடிந்து வசந்தகாலம் வர போகிறது.

நாம் முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலையில் உள்ளோம். தொண்டர்கள் கவலைபட வேண்டாம்.

வைகோ
வைகோ

இனி நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கும். தன்மானத்தையும், சுயமரியாதையையும் காப்பாற்ற பொதுக்குழுவில் நல்ல முடிவு எடுக்க உள்ளோம். நமது கட்சிக்கான சோதனையான காலம் முடிந்து விட்டது.

எங்களுக்கு வெற்றி கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் முல்லை பெரியாறு, ஸ்டெர்லைட் ஆலை, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுத்தது போன்ற அடிப்படையான பிரச்னைகளுக்கு தொடர்ந்து போராடி வருகிறோம்" என்று பேசியிருக்கிறார்.

"அந்தச் சமயத்தில் சுவேந்து அதிகாரிதான் ஆறுதல் சொன்னார்" - TMC மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மம்தாவும் அவரது கட்சியும் நாளுக்கு நாள் சரிவைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மேற்கு வங்க முதல்வர... மேலும் பார்க்க

PMK: இணைந்த தந்தை - மகன் இதயங்கள்! - இக்கட்டில் சேலம் அருள் போன்ற 2-ம் கட்ட தலைவர்கள்?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி இடையே நீடித்து வந்த 18 மாத மோதல் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. குடும்ப உறுப்பினருக்கு பா‌.ம.க- வில் பதவி வழங்குவதில் ... மேலும் பார்க்க

கல்வராயன் மலை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியரை போக்சோவில் தூக்கிய சிங்கப்பெண் போலீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் தமிழக அரசின் ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கல்வராயன்மலையின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்... மேலும் பார்க்க

‘சார்... ஆபீஸுக்கு ரெய்டு வருது!’ கசியும் தகவல் டு மாண்புமிகுவால் கொதிக்கும் மா.செ-க்கள்! | கழுகார்

முன்கூட்டியே கசியும் தகவல்‘சார்... உங்க ஆபீஸுக்கு ரெய்டு வருது!’லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள ஏ.டி.ஜி.பி அருணுக்கு, தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. அதனால் முன்னாள்... மேலும் பார்க்க

'மின்துறையின் கடன் இப்போது ரூ.2,47,130 கோடியாக உயர்ந்திருக்கிறது' - மின் வாரியத்தின் வெள்ளை அறிக்கை

கடந்த வாரம் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு,நிதி, வருவாய், செலவினம் ஆகியவை குறித்த ... மேலும் பார்க்க

மேஜர் முகுந்த் வரதராஜன் பெயரில் சாலை! யார் ஆட்சியில் ஒப்புதல்? – ஆவணங்கள் சொல்வது என்ன?

2014-ஆம் ஆண்டு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் நினைவாக, அவர் வசித்த பகுதிக்கு அருகிலுள்ள தாம்பரம்–வேளச்சேரி சாலைக்கு அவரது பெயர் சூ... மேலும் பார்க்க