செய்திகள் :

வரி சீர்திருத்தங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கட்டும்!

post image

ஒரு தேசத்தின் தொழில் வளர்ச்சியைத் தீர்மானிப்பது விற்பனை மட்டுமல்ல; ஆரோக்கியமான பணப்புழக்கமும், அதைத் தடையின்றி வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் சுதந்திரமும்தான். குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு இந்த இரண்டும் மிக முக்கியம். இந்தப் பின்னணியில், கடந்த அக்டோபர் 8-ம் தேதி நடைபெற்ற 57-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைச் சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

கடந்த காலங்களில், ஜி.எஸ்.டி சீர்திருத்தங்கள் என்றாலே வரி விகிதக் குறைப்பு, புதிய வரி அடுக்குகள் போன்ற அறிவிப்புகளே முன்னிலைப்படுத்தப்பட்டன. ஆனால், இந்த முறை வரிப் பதிவு, ரீஃபண்ட், உள்ளீட்டு வரி வரவு, வரி தொடர்பான மேல்முறையீடுகள் உள்ளிட்ட நடைமுறைகளை எளிமைப் படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது, வரி நிர்வாகத்தைத் தொழில்களுக்கு உகந்ததாக மாற்றுவதற்கான முக்கியமான நகர்வு எனலாம்.

சிறு தொழில்களுக்கு வரி விகிதத்தைவிடப் பெரிய பிரச்னை, வரிப் பணத்தைத் திரும்பப் பெறுவதில் ஏற்படும் தாமதம்தான். ஒரு நிறுவனம் பொருள்களை உற்பத்தி செய்யவும், ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கவும், வாடகை மற்றும் மூலப்பொருள் செலவுகளைச் சமாளிக்கவும் தொடர்ந்து பணம் தேவைப்படுகிறது. ஆனால், ரீஃபண்ட் கிடைக்காமல் பணம் முடங்கினால் புதிய கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகலாம். வட்டிச் செலவு அதிகரிப்பு, நிறுவனத்தின் லாபத்தைக் குறைக்கும். இதற்குத் தீர்வாக, குறிப்பிட்ட தகுதிகளுக்கு உட்பட்டு ரீஃபண்ட் கோரிக்கைகளைத் தானியங்கி முறையில் பரிசீலிப்பது, சில வகைக் கோரிக்கைகளுக்கு 90% தொகையை இடைக்காலமாக வழங்குவது, ஆவண நடைமுறைகளைக் குறைப்பது போன்ற பரிந்துரைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இவையெல்லாம் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே பலன். ஏனெனில், பெரும்பாலும் அறிவிப்புகளுக்கும் நடைமுறைக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பது வழக்கம். தகுதியான ரீஃபண்டுகள் விரைவில் கிடைக்க வேண்டும்; தவறுதலாக ஏற்படும் கணக்குப் பிழைகளுக்கும், திட்டமிட்ட வரி ஏய்ப்புக்கும் இடையே தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில், சீர்திருத்தங்களின் நோக்கம் முழுமையடையாது. அதே நேரத்தில், வரி ஏய்ப்பைத் தடுப்பதும் அரசின் வருவாயைப் பாதுகாப்பதும் அவசியம். எனவே, எளிமையான நடைமுறைகளுடன் வலுவான தொழில்நுட்பக் கண்காணிப்பும், வெளிப்படையான மேல்முறையீட்டு முறையும் இணைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஜி.எஸ்.டி-யின் வெற்றி, அரசு எவ்வளவு வரி வசூலிக்கிறது என்பதில் மட்டுமல்ல. நேர்மையாக வரி செலுத்தும் தொழில்கள் எவ்வளவு தடையின்றி வளர்கின்றன என்பதிலும் இருக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 10 கோடி எம்.எம்.எஸ்.இ நிறுவனங்களும், அதை நம்பி 40 கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே, வரி நிர்வாகம் தொழில்முனைவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் அமைப்பாக அல்லாமல், அவர்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அமைப்பாக மாறும்போதுதான் உண்மையான சீர்திருத்தம் சாத்தியமாகும்.

- ஆசிரியர்

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: ``அரசின் நிலைப்பாடு தவறான முன்னுதாரணம்" - பூவுலகின் நண்பர்கள் விமர்சனம்

தமிழ்நாட்டின் முக்கிய ராம்சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களில் ஒன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலம். இந்த சதுப்பு நிலங்கள் பாதிக்கும் வகையில் தவெக அரசு முடிவெடுத்திருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ... மேலும் பார்க்க

ECI: ஜனநாயகத்தின் மீதான மரண அடி! - ஞானேஷ் குமார் விவகாரமும், சீரழியும் தேர்தல் அமைப்பும்!

டெல்லி பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான குரல்கள் இந்தியா முழுவதும் ஒலிக்கின்றன. ஜனநாயகத்தின் குரல்களுக்கு காது கொடுக்க வேண்டிய ஆளும் அரசு, காவலர்களின் கைய... மேலும் பார்க்க

'உதயநிதி களமிறக்கிய 750 பேர்.!' - இடைத்தேர்தலில் திமுக புது பார்முலா!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்ததோடு கூட்டணி இல்லாமலும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பெருவாரியான வாக்குகளை பெற்றிருக்கிறது தி.மு.க. இடைத்தேர்தல் களத்தில் அக்கட்சி பயன்படுத்தி... மேலும் பார்க்க

டெல்லி போராட்டம்: "நான் கைது செய்யப்படவில்லை; கடத்தப்பட்டேன்" - துருவ் ராட்டி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனச் சி.ஜே.பி-யினர், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் சி.... மேலும் பார்க்க

`சென்னையில் ஆஸ்திரேலிய பல்கலை: இப்போது தேவைதானா?' - உயர் கல்வித்துறையின் சிக்கல்கள்| ஓர் அலசல்

University of Western Australiaதமிழ்நாட்டில் முதல் வெளிநாட்டு பல்கலைக் கழகமாக மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்துக்கு, UGC ஒப்புதல் அளித்திருக்கிறது. அதன் அடிப்படையில், ஆஸ்திரேலியாவின், 'குரூப் ஆப் எய்... மேலும் பார்க்க

அலங்காநல்லூரில் சட்டவிரோதமாக செயல்படுகிறதா குவாரி? எஸ்பி ஆய்வு!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி பகுதியில் உள்ள வகுத்து மலை அடிவாரத்தில் உள்ள வண்ணாத்திகரடு பகுதியில் 5 கல்குவாரிகள் முறைகேடாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்தக் கல்குவாரியில் இர... மேலும் பார்க்க