செய்திகள் :

வருங்கால கணவனை கொலை செய்யும் முன்பு காதலனுடன் ஹோட்டலில் சதி: சிக்னல் கொடுத்தவுடன் தள்ளிவிட்ட காதலன்

post image

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இரண்டு நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஷியா கோயல் என்பவர் தனது வருங்கால கணவன் கேதன் அகர்வால் என்பவரை மலை உச்சியில் இருந்து 400 அடி பள்ளத்தில் காதலன் துணையோடு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இக்கொலை தொடர்பாக ஷியாவும், அவரது காதலன் சேதனும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புனே ரூரல் பகுதி டிஎஸ்பி கஜனன் டோம்பே இது குறித்து கூறுகையில், ``ஷியாவும் அவரது கூட்டாளி சேதனும் மிக நுணுக்கமாக கொலையை திட்டமிட்டு, அதை ஒரு விபத்தாக மாற்ற முயன்றனர். தம்பதியினரை சேதன் பின்தொடர்ந்து மலை முகடுக்கு அருகில் சென்று ஷியாவின் சிக்னலுக்காக காத்திருந்தார். ஷியா சிக்னல் கொடுத்தவுடன் கேதனை பின்னால் இருந்து சேதன் தள்ளிவிட்டுள்ளார்''என்று தெரிவித்தார்.

இவ்வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் தினேஷ் இது குறித்து கூறுகையில், "சேதன் காதலியிடமிருந்து தகவலுக்காக 10 நிமிடங்களுக்கும் குறைவாக கோட்டையின் உச்சியில் காத்திருந்தார். போலீஸாரிடம் பிடிபடாமல் இருக்க சேதன் தனது போனை தனது கடையில் வைத்துவிட்டு கடை ஊழியர் ஒருவரின் போனை எடுத்துச்சென்றுள்ளார்.

ஷியாவும், சேதனும் வார நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு கொலை செய்ய அந்த இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

லோஹாகாட் கோட்டையின் மற்ற பகுதிகளை விட கொலைக்கு அவர்கள் தேர்வு செய்த இடம் மிகவும் ஒதுக்குப்புறமாக இருந்தது. இருவரும் அங்கு முன்கூட்டியே சென்று பார்வையிட்டு அந்த இடத்தை தேர்வு செய்திருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக அவர்களிடம் விசாரித்து வருகிறோம். ஷியா தனது வாக்குமூலத்தை மாற்றி கூறியபோதே அவர் மீது எங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. கேதன் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் போது தவறி விழுந்து விட்டதாக முதலில் கூறினார், பின்னர் அவர் தண்ணீர் பாட்டிலை கொடுக்கும் போது அவர் விழுந்துவிட்டார் என்று கூறினார். எனினும், அன்று முதல் அவரது செல்போனில் புகைப்படங்கள் எதுவும் இல்லை. இது மேலும் சந்தேகத்தை எழுப்பியது.

பாஸ்போர்ட் கிழிப்பு

தம்பதியினர் இருவரும் திருமணத்திற்கு முந்தைய புகைப்படங்களை எடுப்பதற்காக இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால் விமான நிலையத்திற்கு சென்றபோது கேதனின் பாஸ்போர்ட்டை காணவில்லை. இதனால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு காரணம் கேதனின் பாஸ்போர்ட்டை ஷியா திருடி அதனை கிழித்துப்போட்டுள்ளார். தம்பதி பாலி தீவுக்கு செல்வதை சேதன் விரும்பவில்லை. எனவேதான் ஷியா இது போன்று செய்ததாக ஷியா விசாரணையில் தெரிவித்துள்ளார்.


238 மணி நேரம் போனில் பேசிய காதல் ஜோடி

ஷியா மற்றும் சேதனின் மொபைல் போன் அழைப்பு விபரங்களை ஆய்வு செய்தபோது நிச்சயதார்த்தம் நடந்த போதிலும் சுமார் எட்டு மாதங்களாக இருவரும் அடிக்கடி போனில் பேசிக்கொண்டுள்ளனர். ஜனவரி 1 மற்றும் ஜூன் 18 வரை அவர்கள் 2,000 முறை மொத்தம் 238 மணிநேரம் போனில் பேசியிருக்கின்றனர். ஷியா கட்டாயப்படுத்தி கேதனை கொலை நடந்த இடத்திற்கு அழைத்து சென்றதாக கேதனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்''என்றார்.

ரெஸ்டாரண்ட்டில் கடைசி நேர சதி

`சேதனிடம் ஏன் இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்திருக்கலாமே' என்று போலீஸார் கேட்டதற்கு, அத்திட்டத்திற்கு ஷியா ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அப்படி ஓடுவது குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் ஷியா தெரிவித்தார். எனவேதான் கொலை செய்யும் முடிவை தேர்வு செய்ததாக சேதன் விசாரணையில் தெரிவித்துள்ளான். அதோடு கொலை நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு சேதனை ஷியா கஃபே ஒன்றில் சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்பின் போது கொலையை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து இருவரும் இறுதிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

பிறந்தநாளை கொண்டாட 5ஸ்டார் ஹோட்டலில் 70 அறை

கேதனின் தந்தை விஷால் தனது வருங்கால மருமகள் ஷியாவின் பிறந்தநாளை கொண்டா பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் 70 அறைகளை முன்பதிவு செய்து வைத்திருந்தார். மலைநகரமான மகாபலேஷ்வரில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அந்த ஏற்பாடுகளை ரத்துசெய்ய சொல்லிவிட்டு கேதனை புனே மலைப்பகுதிக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச்சென்று ஷியா கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

மது கேட்டு தொல்லை கொடுத்த மனைவி – விஷம் கொடுத்து கொன்ற கணவர் | கோவையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கரவழி மாதாப்பூர் அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (28). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், கணவரை பிரிந்து தனியாக வசித்து வந... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; பரபரக்கும் கரூர்!

தமிழக முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரும், தி.மு.க முக்கிய புள்ளியுமான ஏ.வ.வேலு தொடர்புடைய சென்னை வீடு உள்ளிட்ட 13 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலைய... மேலும் பார்க்க

கம்பம்: கணவரை இழந்த பெண்ணிடம் அத்துமீறல்; தலைமறைவான தவெக நிர்வாகி

கம்பத்தைச் சேர்ந்த 38 வயது பெண்ணின் கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் தவெக நிர்வாகியும் ஆட்டோ டிரைவருமான ஆசிக்பாபு என்ற பாபு ... மேலும் பார்க்க

காட்பாடி: கறாராக `லஞ்சம்’ கேட்ட அரசு பெண் மருத்துவர் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை!

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அக்கிரெட்டிபுதூர் கிராமம், வீரமந்திரி தெருவைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி ரவீனா. இவர்களின் 3 பிள்ளைகள், காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பயில்கின்றனர். பள்ள... மேலும் பார்க்க

பெங்களூரு : தாய், தந்தை, சகோதரியை காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண் - அதிர்ச்சி சம்பவம்

பெற்றோர், சகோதரி உள்ளிட்ட மூன்று பேரை, மகளே கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. murderதமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டு பெங்களூருவில் வசித்து வரும் கம்ப்யூட்டர் எஞ்சினியரான சோம... மேலும் பார்க்க

கல்பாக்கம்: 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவன் உட்பட இருவர் கைது!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்சியில் உள்ள காரைத்திட்டு கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டை விட்டு வெளியேச் சென்றிருந்தார். வெளியே சென்ற மகள் நீண்ட நேரம் வீடு திரும... மேலும் பார்க்க