சேலம்: `பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு அன்புமணியால் அச்சுறுத்தல்!' - ர...
வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க
இந்நேரத்திற்கு வருமான வரி ரீஃபண்ட் வந்திருக்க வேண்டும். ஆனால் பல லட்ச மக்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லை.
ஏன்... என்ன காரணம்?
இந்த ஆண்டு வருமான வரி ரீஃபண்ட் தாமதமாவதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.
ஒன்று, இந்த ஆண்டு ஐ.டி.ஆர் ஃபார்ம்கள் தாமதமாகத்தான் வெளியிடப்பட்டன. மேலும், இந்த ஆண்டு வருமான வரிக் கணக்குத் தாக்கலின் கடைசி தேதியும் மிக தாமதமாகத்தான் இருந்தது.
இன்னொன்று, வழக்கத்தைவிட, இந்த ஆண்டு மிக கவனமாக அனைத்தும் செக் செய்யப்படுகிறதாம். போலி வருமான வரிக் கணக்குத் தாக்கல், தவறான வருமான வரிக் கணக்குத் தாக்கலைத் தடுக்க இந்த நடவடிக்கை.

உங்களுக்கும் இன்னும் ரீஃபண்ட் கிடைக்கவில்லையா?
இது பெரும்பாலும் நீங்கள் வருமான வரிக் கணக்குத் தாக்கலின்போது, ஏதாவது தவறு செய்திருந்தாலோ, 'மிஸ்' செய்திருந்தாலோ நடக்கலாம்.
உங்கள் பான் அல்லது வங்கி தகவல்களில் ஏதேனும் தவறு இருக்கலாம்.
என்ன செய்ய வேண்டும்?
வருமான வரி வலைதளத்திற்குச் சென்று உங்களது ரீஃபண்ட் ஸ்டேட்டஸை செக் செய்யுங்கள்.
அடுத்ததாக, வருமான வரி ரீஃபண்ட் குறித்து உங்களுக்கு ஏதேனும் இமெயில், எஸ்.எம்.எஸ் வந்திருந்தால், அதை கவனமாக படித்து, அதற்கான விஷயங்களை உடனே செய்யுங்கள்.
தேவைப்பட்டால், வருமான வரிக் கணக்குத் தாக்கலை மீண்டும் சரியாகச் செய்யுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சீக்கிரம் முடிப்பது நல்லது.
எந்தப் பிரச்னையும் இல்லை... இமெயில், எஸ்.எம்.எஸ்ஸும் வரவில்லை என்றால், உடனே அந்த வலைதளத்திலேயே புகாரளியுங்கள். 1800 - 103 - 0025 அல்லது 1800 - 419 - 0025 உதவி எண்களிலும் புகாரளிக்கலாம்.



















