Bigg Boss tamil 8: வெளியேறிய இரண்டு ஆண் போட்டியாளர்கள்! கடைசிக் கட்ட பரபரப்பில் ...
விகடன் கருத்துக்கணிப்பு : `எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை முடக்குகிறதா திமுக?' - முடிவுகள் என்ன?
சென்னையின் பிரபல அண்ணா பல்கலைக் கழகத்தின் மாணவி ஒருவர் கடந்த மாதம் 24-ம் தேதி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான விவகாரம், தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 'யார் அந்த சார்?' என்ற கேள்வியுடன் அரசியல் களத்தில் குதித்தது அ.தி.மு.க. 'எங்கள் வீட்டு மகள்களுக்கு அண்ணனாக இருந்து காப்போம்' என்றது தமிழக வெற்றிக் கழகம். பா.ஜ.க மாநில தலைவர் ஒருபடி மேலே சென்று, சாட்டையால் அடித்துக்கொண்டதெல்லால் அரசியல் வரலாறு.
இந்த நிலையில், 'பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்' என தொடர்ந்து மாணவர்கள் அமைப்பும், எதிர்க்கட்சிகளும் போராட்டத்தை முன்னெடுத்தன.
ஆனால், ஆளும் தி.மு.க தரப்போ, ``பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்தவுடன் நடவடிக்கை தொடங்கப்பட்டுவிட்டது. குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகர் கைது செய்யப்பட்டார். இவருக்குப் பின்னால் யாரும் இல்லை" என்றெல்லாம் சமாளித்து ஒருகட்டத்தில், சட்டமன்றத்தில் சட்ட திருத்த மசோதாவையும் அறிமுகப்படுத்தியது.
அதன் அடிப்படையில், 'இனி பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை' வரை வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இன்னொருபுறம், 'மாணவி விவகாரத்தில் அரசியல் செய்யாமல், பாதிக்கப்பட்ட மாணவிக்காக பேசுங்கள்' என நீதிமன்றம் எதிர்க்கட்சித் தரப்பினருக்கு அறிவுரை வழங்கியது.
இப்படி இந்த விவகாரம் அரசியல் களத்தில் தீவிரமாகிக்கொண்டிருக்கும் போது, அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் போராட்டத்தை முன்னெடுத்தால் அது அரசு தரப்பிலிருந்து ஒடுக்கப்படுகிறது என்றக் குற்றச்சாட்டும் வலுவாக முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக நமது விகடன் வாசகர்களிடம் கருத்து கேட்கலாம் என முடிவு செய்தோம். அதன் அடிப்படையில், ``அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை முடக்குகிறதா தி.மு.க அரசு?" என்றக் கேள்வியுடன், 'ஆம் - இல்லை - கருத்து இல்லை' என மூன்று விருப்பத் தேர்வுகளையும் வழங்கியிருந்தோம்.
இதில் ஏராளமான வாசகர்கள் பங்கெடுத்து தங்கள் கருத்துகளை பதிவு செய்திருக்கின்றனர். அதன் அடிப்படையில், `அண்ணா பல்கலைக் கழக விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை முடக்குகிறதா தி.மு.க அரசு' என்ற கேள்விக்கு ''ஆம்' என 70 சதவிகித வாசகர்களும்', 'இல்லை' என 25 சதவிகித வாசகர்களும்', 'கருத்து இல்லை என்ற விருப்பத்தை 5 சதவிகித வாசகர்களும் தேர்வு செய்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs