செய்திகள் :

"விஜய்யுடன் பேசி NDA கூட்டணி ஆட்சி அமைக்கும்.!"- மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சொல்வதென்ன?

post image

பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தவெக தலைவர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் நேற்று (மார்ச்.31) இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

தவெக விஜய்
தவெக விஜய்

இதில் அக்கட்சியின் தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கலந்துகொண்டிருக்கிறார்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கும் அவர், " புதுச்சேரி மற்றும் அசாமில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஆட்சி இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வராது.

தேர்தலுக்கு பிறகு அங்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடிகர் விஜய்யுடன் பேசி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதேபோல் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை வீழ்த்திவிட்டு ஆட்சி அமைக்கும்.

ராம்தாஸ் அத்வாலே
ராம்தாஸ் அத்வாலே

கேரளத்தில் இப்போது ஆளும் மார்க்சிஸ்ட் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அங்கும் பாஜக ஆட்சி அமைக்கும். அதனால் தேர்தலுக்குப் பிறகு 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.

நாட்டின் வலிமையான பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியில் இருக்கிறார். நாட்டின் வளர்ச்சிதான் அவரின் குறிக்கோள்" என்று பேசியிருக்கிறார்.

'கூட்டமே இல்லாத ஸ்டாலினின் ரோடு ஷோவுக்கு 2000 போலீஸ் பாதுகாப்பா?' - கொந்தளிக்கும் ஆதவ்!

தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்துக்கு தமிழக காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு ஒன்றை அ... மேலும் பார்க்க

'தனிச் சின்னம் வேண்டாம்!'- ஒதுக்கபட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியனில் போட்டியிடும் மதிமுக

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிக 10, விசிக 8, கம்யூனிஸ்ட்கள் தலா 5, கொமதேக 2, மதிமுக 4, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக-வுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் எஸ்டிபிஐ உட்பட சில சி... மேலும் பார்க்க

விசிக: ``யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது.!" - ஆளூர் ஷா நவாஸ் விளக்கம்!

நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்ப்படவில்லை. இதற்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்படு வந்தத... மேலும் பார்க்க

'விஜய்யை பற்றியும் அவருடைய வேட்பாளரை பற்றியும் பேச மாட்டேன்' – இயக்குநர் சுந்தர்.சி

அதிமுக கூட்டணியிலுள்ள புதிய நீதிகட்சி சார்பாக மதுரை மத்திய தொகுதி வேட்பளாராக இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக இன்று மதுரைக்கு வந்திருந்த சுந்தர்.சி செய்தியாளர்களை சந... மேலும் பார்க்க

கூட்டணி ஃபார்முலாவில் எம்ஜிஆர் கில்லியாக இருந்தது எப்படி தெரியுமா? | ‘வாவ்’ வியூகம் 11

‘வாவ்’ வியூகம் 11கூட்டணி ஃபார்முலாவில் எம்ஜிஆர் கில்லிதேர்தல் அரசியலில் கட்சிகள் ஆட்சிக்கு வருவதும், ஆட்சியை இழப்பதும் கூட்டணியால்தான். சரியான கூட்டணி என்பது மக்கள் விரும்பும் கூட்டணியாகவும் இருக்க வே... மேலும் பார்க்க