செய்திகள் :

விண்வெளி முதல் களரிப்பயிற்சி வரை… மாணவர்களை ஊக்கப்படுத்திய SSVM Conclave!

post image

அப்படியொரு சிந்தனையை மையமாக வைத்து, கோயம்புத்தூரில் உள்ள SSVM வேர்ல்ட் பள்ளியில் 'SSVM Transforming India Conclave 2026' எனும் நிகழ்வு மூன்று நாள்கள் நடைபெற்றது. ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற்ற இந்த ஐந்தாவது பதிப்பில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் மாணவர்களுடன் நேரடியாக உரையாடி, தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்தாண்டு மாநாட்டின் மையக்கருத்து – 'Flex Your Future'. எதிர்காலச் சவால்களைச் சந்திப்பதோடு நின்றுவிடாமல், சூழலுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை மாணவர்களிடம் வளர்ப்பதே இதன் நோக்கம்.

மன உறுதி, உடல் வலிமை, உணர்வுசார் நல்வாழ்வு, ஊட்டச்சத்து, உடல் இயக்கம், ஒழுக்கம் என மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை நோக்கி பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

'வாழ்க்கைக்கு தயாராகணும்!' – SSVM நிர்வாகம்

"கல்வி என்பது தேர்வுகளுக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் குழந்தைகளைத் தயார்படுத்துவதோடு முடிந்துவிடக் கூடாது. சவால்களை எதிர்கொள்ளும் மன உறுதியுடனும், சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் தன்னம்பிக்கையுடனும் அவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும்" என SSVM பள்ளிகளின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன் குறிப்பிட்டார்.

SSVM கல்வி நிறுவனங்களின் இயக்குநரும், Ruh Continuum School-ன் இணை நிறுவனருமான ஸ்ரீஷா மோகன்தாஸும், எதிர்காலத்துக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை எப்படித் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து உரையாடினார்.

'விண்வெளிக்குப் போகணும்னா… 3R-ஐ மறக்காதீங்க!'

விண்வெளிப் பயணம் என்றாலே குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்குமே ஆர்வம் ஏற்படுத்தும். அந்த அனுபவத்தை நேரடியாகப் பகிர்ந்துகொண்டார் இந்திய விண்வெளி வீரர் ஏர் கமாடோர் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்.

ககன்யான் திட்டத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டு, மாஸ்கோ, NASA, ஜப்பான் மற்றும் இந்தியாவில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்ட தனது பயணத்தை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

வாழ்க்கையில் வெற்றியைத் தீர்மானிப்பதில் React, Respond, Respect Yourself என்கிற 3R-கள் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

'ஒலிம்பிக் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இல்ல… தினமும்!'

இந்தியாவின் முதல் தனிநபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, வெற்றிக்கான தனது அணுகுமுறையை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

தனக்குப் பிடித்த விஷயத்தைக் கண்டுபிடித்து, அதை முழு ஈடுபாட்டுடன் செய்வதே வெற்றிக்கான முக்கிய காரணம் எனக் கூறிய அவர், முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

அவரைப் பொறுத்தவரை, ஒலிம்பிக் என்பது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் போட்டி மட்டுமல்ல… ஒவ்வொரு நாளும் நம்மை நாமே தயார்படுத்திக்கொள்ளும் ஒரு பயணம்!

'பந்தை மட்டும் பாருங்க!' – ருதுராஜ் கெய்க்வாட்

கிரிக்கெட் வீரரும் CSK அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட், வெற்றிக்கான தனது எளிய ஃபார்முலாவை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

"பேட்டை நோக்கி வரும் பந்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பிறரிடம் நம்மை நிரூபிப்பதைவிட, நமக்கு நாமே உண்மையாக இருந்து உழைப்பதே முக்கியம்" என்ற அவரது வார்த்தைகள், மாணவர்களுக்கு விளையாட்டைத் தாண்டிய வாழ்க்கைப் பாடமாகவும் அமைந்தன.

வயிறும் ஒரு 'மூளை'தான்!

'உங்கள் குடல் என்ன சொல்கிறது?' என்ற சுவாரஸ்யமான தலைப்பில் இரைப்பை குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் பால் மாணிக்கம் உரையாற்றினார்.

குடல் நம் உடலின் 'இரண்டாவது மூளை' என்று குறிப்பிட்ட அவர், குடலில் உள்ள நல்ல மற்றும் தீய பாக்டீரியாக்களின் சமநிலையில் நாம் சாப்பிடும் உணவுக்கு இருக்கும் பங்கு குறித்து விளக்கினார். துரித உணவுகளை அதிகம் உட்கொள்வது குடலில் தீய பாக்டீரியாக்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் எடுத்துரைத்தார்.

வலிமை என்பது உடலில் மட்டுமல்ல!

ஐந்தாம் தலைமுறை களரிப்பயட்டு ஆசான் குருக்கள் எஸ்.மகேஷ், உடல் வலிமையோடு மன வலிமையும் அவசியம் என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

களரி போன்ற தற்காப்புக் கலைகள் மூலம் உடல் வலிமையையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள முடியும் என்பதையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

பரதநாட்டியக் கலைஞரும் நடன அமைப்பாளருமான ருக்மணி விஜயகுமார், முன்னாள் ஆரோக்கியத் துறை தொழில்முனைவோர் சர்வேஷ் சஷி உள்ளிட்டோரும் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டனர்.

ஆசிரியர்களுக்கும் ஒரு சிறப்பு அங்கீகாரம்!

ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்து ‘Inspirational Guru Awards’ வழங்கப்பட்டன.

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சிறந்த கல்வியாளர்கள் இந்த விருதைப் பெற்றனர். மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பையும் கௌரவிக்கும் விதமாக இந்த விருது நிகழ்வு அமைந்தது.

மாணவர்களே… அடுத்த தலைமுறை தொழில்முனைவோர்கள்!

படிப்போடு தொழில் சிந்தனையையும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் 'Studentpreneur Awards 2026' போட்டியும் நடைபெற்றது.

இளம் வயதிலேயே தொழில் தொடங்கும் ஆர்வத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மொத்தத்தில், மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கான்க்ளேவ், மாணவர்களுக்கு புத்தகங்களைக் கடந்து வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும் ஓர் அனுபவமாக அமைந்தது.

விண்வெளி வீரரின் அனுபவம் முதல் ஒலிம்பிக் சாம்பியனின் வெற்றிப் பயணம் வரை… கிரிக்கெட் மைதானத்தின் பாடம் முதல் களரியின் வலிமை வரை… உடல்நலம் முதல் தொழில்முனைவு வரை…

'எதிர்காலம் எப்படி மாறினாலும்… அதற்கேற்ப நாமும் மாறத் தயாராக இருக்க வேண்டும்!' என்ற சிந்தனையை மாணவர்களிடம் விதைத்திருக்கிறது இந்த SSVM Transforming India Conclave 2026.

மேலும் விவரங்களுக்கு, www.ssvmtransformingindia.com இணையதளத்தைப் பார்வையிடவும்.

`கணினிப் படிப்புக்கு இங்கு முக்கியத்துவமே கொடுப்பதில்லை'- ஆசிரியர்கள் குமுறலும் அமைச்சர் விளக்கமும்!

”தமிழ்நாட்டில் மட்டும்தான் கணினி அறிவியல் பாடமானது ஒதுக்கப்பட்ட பாடமாக இருக்கிறது” என கொந்தளிக்கிறார்கள் கணினி பட்டதாரி ஆசிரியர்கள். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்காக மத்திய அரசானது கணினி அற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்... இன்டர்ன்ஷிப்பிற்கு ‘சி.பி.டி’ புதிய கட்டுப்பாடுகள்!

அமெரிக்காவில் எஃப்-1 (F-1) விசாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் வேலைவாய்ப்பு அனுமதியான சி.பி.டி (Curricular Practical Training - CPT) விதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்த... மேலும் பார்க்க

IIT Madras: ``ஐஐடி மெட்ராஸில் மருத்துவக் கல்வி" - இயக்குநர் காமகோடி சொல்லும் திட்டம்!

புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி மெட்ராஸ் (IIT Madras), மருத்துக் கல்வியை தொடங்கவிருப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார... மேலும் பார்க்க