செய்திகள் :

`விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் அடக்கி பார்க்கும் அரசு.!' - எம்.எல்.ஏ கைதுக்கு கனிமொழி காட்டம்

post image

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக விமர்சித்தார் என்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...

"விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.மார்க்கண்டேயன் அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்.

உடனடியாக, மார்க்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்".

மார்க்கண்டேயன்
மார்க்கண்டேயன்

மார்க்கண்டேயனின் சர்ச்சைப் பேச்சு:

"சட்டமன்றத்தைப் பூட்டுவேன் என்று விஜய் கூறுவது வேடிக்கையானது. சட்டமன்றத்தைப் பூட்டினால் எலும்பு இருக்காது. அதை உடைத்துவிட்டுத்தான் அடிப்பார்கள்.

கைது செய்துவிடுவார்கள் என்று பயந்து நள்ளிரவில் கேரவனில் கரூரிலிருந்து ஓடியது நீ தான்.

நாங்கள் உன்னைப் பார்த்துப் பயந்து ஓடவில்லை. சட்டமன்றத்தில் முதலமைச்சர் கம்பீரமாக அமர்ந்திருக்கும் போது, நீ கொத்து புரோட்டா போடுவதைப் பற்றிப் பேசுகிறாய். உன்னைப் போன்ற ஆயிரக்கணக்கான புரோட்டாக்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்". என பேசிய குறிப்பிடத்தக்கது.

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மண... மேலும் பார்க்க

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்திய... மேலும் பார்க்க

உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு - பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சக... மேலும் பார்க்க

பழநி கோயில் நில மோசடி: `அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் உடன்பாடில்லை' - பெ.சண்முகம்

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை. 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழ... மேலும் பார்க்க

'அமைச்சருக்கும் எங்களுக்கு தொடர்பில்லை' - அறக்கட்டளை நிர்​வாகி முரு​க​தாஸின் மனைவி லீலா பேட்டி

பழநி​யில் உள்ள மடத்​துக்குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள நிலத்​தை, முறை​கே​டாக தனிநபர்​களுக்கு பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்... மேலும் பார்க்க

`சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில்தான்.!' - ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து ஜெயராம் ரமேஷ்

முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்து ஓராண்டு ஆகிறது என்பதை நினைவுகூர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ். இது குறித்து அவர் வெளியிட்டு... மேலும் பார்க்க