செய்திகள் :

'விராட் கோலியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!' - ரஜத் பட்டிதார் வியப்பு!

post image

ஐபிஎல் தொடரில் நேற்று (மே 13) நடைபெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில், பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறது. பெங்களூரு அணியில் இருந்து இந்த சீசனில் யாரும் சதம் அடிக்காமல் இருந்த நிலையில், 105 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தது மட்டுமல்லாமல், இந்த சீசனில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார் கிங் கோலி. வெற்றிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார்

RCB vs KKR
RCB vs KKR

இது ஒரு மகிழ்ச்சியான உணர்வு. தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம். ஒவ்வொரு வீரரும் அணிக்குத் தேவையான பங்களிப்பை வழங்குகிறார்கள். நாங்கள் இப்போது ஒரு நேரத்தில் ஒரு போட்டியை மட்டுமே கவனத்தில் கொள்கிறோம். முதல் 10 ஓவர்களில் கொல்கத்தா அணியின் ரன் ரேட் 10-11 என இருந்தது.

ஆனால் அதன்பின் நாங்கள் ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களை 192 ரன்களுக்குள் முடக்கியது திருப்திகரமாக இருந்தது. கோலி எப்போதும் சிறந்த விஷயங்களையே செய்வார். அவரை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

Rajat Patidar
Rajat Patidar

அடுத்ததாக தர்மசாலாவில் நடைபெற உள்ள போட்டி இருக்கிறது. அது பேட்டிங்கிற்கு சாதகமான களம் என்பதால், அங்கேயும் வெற்றியைத் தொடர முயற்சிப்போம்," என பேசியிருந்தார்.

'கருப்பன் வரான் வழி மறிக்காதே!' - விராட் கோலியின் வெறியாட்டத்தில் வீழ்ந்த கொல்கத்தா!

இரண்டாவது முறையாக ராய்ப்பூர் ராசிப்பூராக மாற, விண்டேஜ் கோலியின் விஸ்வரூப தரிசனம் ரசிகர்களுக்குக் கிடைக்க, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓர் அற்புத வெற்றியைப் பதிவேற்றி இருக்கிறது ஆர்சிபி....RCB vs... மேலும் பார்க்க

கோலியின் கேட்ச்சை விட்டதுதான் தோல்விக்குக் காரணம்! – கேப்டன் அஜிங்க்யா ரஹானே வருத்தம்!!

ஐபிஎல் 2026-ன் நேற்றைய(மே 13) பரபரப்பான ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்தது. இந்த ... மேலும் பார்க்க

'எங்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை, ஏன்னா.!'- தொடரைவிட்டு வெளியேறியது குறித்து கலங்கிய சூர்யகுமார்

நேற்று ( மே.10) நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. mi vs rcb பெங்களூரு அணியிடம் அடைந்த படுதோல்வியால்... மேலும் பார்க்க

Cricket: கிரிக்கெட் வீரர் அமன்பிரீத் சிங் கில் மரணம்; விராட் கோலி, யுவராஜ் சிங் இரங்கல்!

இந்திய இளையோர் அணி (U-19) மற்றும் பஞ்சாப் மாநில அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அமன்பிரீத் சிங் கில் (36), சண்டிகரில் காலமானார். புதன்கிழமை அன்று அவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கான கா... மேலும் பார்க்க

SRH vs PBKS: "அதில் கோட்டை விட்டுவிட்டோம்; தோல்விக்கு அதுவே காரணம்!" - ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று (மே 6) நடைபெற்ற பஞ்சாப் vs ஹைதராபாத் போட்டியில், 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில்14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது ஹைதராபாத் அணி. SRH vs... மேலும் பார்க்க