செய்திகள் :

’விரைவில் தேர்தல் வரும் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தெரிகிறது!’ - பெ. சண்முகம் காட்டம்

post image

கோவை ஹோப் காலேஜ் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க அல்லாத கட்சி வேண்டும் என மக்கள் விரும்பினர். கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளில் த.வெ.க ஆட்சிக்கு வந்து இருக்கிறது.

இடதுசாரி கட்சிகளின் ஆதரவு வெளியில் இருந்து தொடர்கிறது. மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டும் என அளித்திருக்கும் தீர்ப்பை ஏற்க மறுத்துதான் இதுபோன்ற குதிரை பேரம், கழுதை பேரம் போன்றவற்றில் எல்லாம் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தி.மு.க-வால், ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை ஏற்க முடியவில்லை. எப்படியாவது இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும், தாங்கள் எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டுமென இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.

பெ.சண்முகம்

சில நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தேர்தல் வரும், ஆட்சி மாற்றம் வரும் என பேசியிருந்ததன் பின்னணி, என்ன என்பது இப்போதுதான் தெரிகிறது. அதற்காக தீவிரமான முயற்சியில் இருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடு தான் சட்டமன்ற உறுப்பினரை கோடிக்கணக்கில் விலை பேசியிருக்கும் செய்தி வந்துள்ளது.

முறையாக வழக்குப்பதிவு செய்து, அத்தகைய முயற்சியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் தானாக விரும்பி ஒரு கட்சியில் சேர்வது, ஒரு கட்சியில் மாறுவது தமிழ்நாட்டில் சகஜமான விஷயம். விரும்பி கட்சி மாறுவது, விரும்பி கட்சி சேர்வது வேறு. ஆனால் இதுபோல கோடிக்கணக்கில் விலை பேசி ஒருவரை வாங்குவது என்பது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.

இதில் யார் சம்பந்தபட்டு இருந்தாலும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

நான்கு அ.தி.மு.க எம்.எல்.ஏகள் பதவியை ராஜினாமா செய்த போதே, இது ஆரோக்கியமற்ற அரசியல் என தெரிவித்தோம். அவர்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்தால், நீங்கள் ஏன் சேர்த்து கொள்கின்றீர்கள் என த.வெ.க நிர்வாகிகளிடம் கேட்டோம்.

டெல்லி பிரதிநிதி என்பவர் முதல்வரின் தனிபட்ட  முடிவு. இதற்கு முன்பு இருந்த டெல்லி பிரதிநிதிகளும் முக்கிய முடிவுகளை எடுக்கவில்லை. இடதுசாரிகள் தனித்து செயல்படுவது என முடிவு செய்துள்ளோம். எந்த அணியிலும் இல்லை. தி.மு.க கூட்டணியில் இருந்தால் போற்றுவது, வெளியேறிவிட்டால் அவதூறு என்பது என நீண்டகாலமாக செயல்படுகின்றனர். முரசொலி கட்டுரைக்கு பதில் தீக்கதிரில் கொடுத்து இருக்கின்றோம். அதன் பின்பு முரசொலியில் எதுவும் வரவில்லை. கன்னியாகுமரி அணுகனிம சுரங்க திட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

'கரூரில எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கு, அதை முடிக்காம விட மாட்டோம்'- ஆதவ் அர்ஜுனா காட்டம்

தவெக இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார். நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், "தமிழக அரசியல் 2026-க்கு முன்பு, 2026-க்கு பின்பு என்று மாறிவிட்டது. விஜய் என்ற முழக்கம் தமிழ்நாட்டில் மட்டும... மேலும் பார்க்க

"இது ட்ரைலர்தான்; மெயின் பிக்சரை டெல்டாவில் காட்டுவோம்" - தவெக இணைப்பு விழாவில் விஜயபாஸ்கர் 'பன்ச்'

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் சி. விஜய பாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கின்றனர். தவிர பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந... மேலும் பார்க்க

”இனி சுடு தண்ணீருக்காக அலைய வேண்டாம்” - கோரிக்கை வைத்த கர்ப்பிணிகள்; நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர்!

அரியலூர் மாவட்டம், அரசு மகப்பேறு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தாய்சேய் நல மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மகப்பேறு உயர் கண்காணிப்புப் பிரிவு, மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு, வளர் இளம் பிள்ளை கவ... மேலும் பார்க்க

"தவெக வரலாற்றில் கரூர் ஒரு கரும்புள்ளி.!"- தவெக இணைப்பு விழாவில் பேசிய எம்.ஆர் விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரபூர்வமாக இணைந்திருக்கின்றனர். தவிர பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந்திருக்... மேலும் பார்க்க

``திமுக எங்களை முதுகில் குத்தவில்லை, நெஞ்சில் குத்திவிட்டார்கள்!" - வைகோ காட்டாமான பேட்டி

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற்வுள்ள இடைத்தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடாது. அதே சமயம், முதல்வர்... மேலும் பார்க்க