செய்திகள் :

'கரூரில எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கு, அதை முடிக்காம விட மாட்டோம்'- ஆதவ் அர்ஜுனா காட்டம்

post image

தவெக இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார். நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், "தமிழக அரசியல் 2026-க்கு முன்பு, 2026-க்கு பின்பு என்று மாறிவிட்டது. விஜய் என்ற முழக்கம் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல உலகம் எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இரு விஜயபாஸ்கர்கள் தவெகவில் இணைந்து இருக்கின்றனர். எங்கள் தலைவர் பெயரில் உங்களின் பெயர்கள் ஆரம்பிக்கிறது. உங்களின் வாழ்க்கை அவரைப்போலவே பிரகாசமாக இருக்கும்.

இணைந்து பணி செய்வோம். 75 வருட பண அரசியலை, சாதி அரசியலைத் தூக்கி எறிந்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். சில எம்.எல்.ஏக்கள் இணையும்போது 90 சதவிகித அதிமுக நிர்வாகிகள் தவெகவில் இணைய போகிறார்கள் என்று அவர்களிடம் சொன்னோம்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

அதேபோல தொண்டர்கள், முன்னாள் அமைச்சர்கள் எல்லாம் இணைகிறார்கள். நேற்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் தலைவர்கள் சொன்ன விஷயம் 'நீங்கள் ஆட்சியமைக்க என்ன நிலைபாட்டை வேண்டுமானாலும் எடுப்பீர்கள் என்று நினைத்தோம்.

அதிமுக உடன் பேசுவீர்கள் என்று நினைத்தோம். அப்படியானால் நீங்கள் எளிதாக ஆட்சி அமைத்திருக்கலாம். ஆனால், நீங்கள் ஆதரவு கேட்டது ஐந்து எம்.எல்.ஏக்கள் வைத்திருந்த காங்கிரஸ் கட்சியை...பின், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆதரவு தருமா என்று அப்போது உங்களுக்கு தெரியாது.

ஆனால், நீங்கள் காங்கிரஸை அழைத்த போது, நாங்கள் உங்களை நம்பினோம். நீங்கள் மத சார்பின்மை கொள்கையிலும், சமூக நீதி கொள்கையிலும் உறுதியாக உள்ளீர்கள் என்பதை நம்பினோம்' என்றார்கள். தேர்தல் முடிவுகள் தெரிந்த உடனேயே திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

புரட்சி தலைவர் எதற்காக கட்சி உருவாக்கினார். தீயசக்தி திமுகவை ஒழிக்க உருவாக்கப்பட்டதுதான் அதிமுக. அதை வழிநடத்தியவர் புரட்சி தலைவர் அம்மா அவர்கள். தற்போது எடப்பாடியும் அவரது மகனும் தான் கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

60 சதவிகித அதிமுக தவெகவில் இணைந்துவிட்டது. இன்னும் 30 சதவிகிதம் தான் இருக்கிறது. கூடிய விரைவில் திமுகவும், அதிமுகவும் கூட்டணி அறிவிக்கப்போகிறது. இது நடந்தால் அதிமுக வெறும் பேப்பரில் மட்டும்தான் இருக்கும்.

கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கிறது. அதை முடிக்காமல் விட மாட்டோம். எங்கள் தலைவர் மீது கை வைத்தீர்களே, மக்களை கொன்று குவித்தீர்களே அதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம்.

இன்றும் எங்கள் அமைச்சர்கள் அவர்களது துறையில் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. தமிழ்நாட்டில் மாற்றம் நடந்திருக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த சமயத்தில் தான் செந்தில் பாலாஜி பணம் கொடுத்து விலைக்கு வாங்க பார்க்கிறார்" என்று காட்டமாக பேசியிருக்கிறார்.

"ஸ்டாலின் பேச்சின் பின்னணி என்னவென்று இப்போதுதான் தெரிகிறது" - திமுகவை விமர்சித்த பெ.சண்முகம்

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்குப் பின்னணியில் செயல்பட்ட நரேஷ், தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் திம... மேலும் பார்க்க

"இது ட்ரைலர்தான்; மெயின் பிக்சரை டெல்டாவில் காட்டுவோம்" - தவெக இணைப்பு விழாவில் விஜயபாஸ்கர் 'பன்ச்'

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் சி. விஜய பாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கின்றனர். தவிர பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந... மேலும் பார்க்க

”இனி சுடு தண்ணீருக்காக அலைய வேண்டாம்” - கோரிக்கை வைத்த கர்ப்பிணிகள்; நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர்!

அரியலூர் மாவட்டம், அரசு மகப்பேறு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தாய்சேய் நல மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மகப்பேறு உயர் கண்காணிப்புப் பிரிவு, மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு, வளர் இளம் பிள்ளை கவ... மேலும் பார்க்க

"தவெக வரலாற்றில் கரூர் ஒரு கரும்புள்ளி.!"- தவெக இணைப்பு விழாவில் பேசிய எம்.ஆர் விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரபூர்வமாக இணைந்திருக்கின்றனர். தவிர பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந்திருக்... மேலும் பார்க்க

``திமுக எங்களை முதுகில் குத்தவில்லை, நெஞ்சில் குத்திவிட்டார்கள்!" - வைகோ காட்டாமான பேட்டி

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற்வுள்ள இடைத்தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடாது. அதே சமயம், முதல்வர்... மேலும் பார்க்க