செய்திகள் :

"ஸ்டாலின் பேச்சின் பின்னணி என்னவென்று இப்போதுதான் தெரிகிறது" - திமுகவை விமர்சித்த பெ.சண்முகம்

post image

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்குப் பின்னணியில் செயல்பட்ட நரேஷ், தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இதில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலேயே திருநாவுக்கரசு இளையராஜாவைத் தொடர்புகொண்டதாக தகவல்கள் வெளியாகின்றன.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், "ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் ஏற்க முடியவில்லை.

எப்படியாவது இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும், தாங்கள் எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்ற முறையில்தான் இந்த முயற்சிகள் நடந்திருப்பதாகத் தெரிகிறது.

சில நாள்களுக்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் தேர்தல் வரும், மாற்றம் வரும் என்று பேசியதன் பின்னணி என்னவென்று இப்போதுதான் தெரிகிறது.

மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
பெ.சண்முகம்

அதற்கான தீவிர முயற்சியில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதன் வெளிப்பாடுதான் சட்டமன்ற உறுப்பினரை விலை பேசியது. சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒரு கட்சியில் இருந்து விலகி மற்றொரு கட்சியில் இணைவது தமிழ்நாட்டில் சகஜமான விஷயம்தான்.

ஆளுங்கட்சி மாறும்போது ஒரு கட்சியில் இருந்து விலகி இன்னொரு கட்சிக்கு மாறுவது நிறைய நடந்திருக்கிறது. ஆனால் ஒருவரை கோடிகணக்கான ரூபாய்க்கு விலை பேசி வாங்குவதெல்லாம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்" என்று பேசியிருக்கிறார்.

தஞ்சாவூர்: 'நேருவின் உறவினர் டெண்டரை நடத்த விடாமல் தடுக்கிறாரா?' - பேருந்து நிலைய கழிப்பறை சர்ச்சை

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் சுமார் 400க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இதன் மூலம் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லக்கூடிய இடமாக பேருந்து நிலையம் உள்... மேலும் பார்க்க

'கரூரில எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கு, அதை முடிக்காம விட மாட்டோம்'- ஆதவ் அர்ஜுனா காட்டம்

தவெக இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார். நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், "தமிழக அரசியல் 2026-க்கு முன்பு, 2026-க்கு பின்பு என்று மாறிவிட்டது. விஜய் என்ற முழக்கம் தமிழ்நாட்டில் மட்டும... மேலும் பார்க்க

"இது ட்ரைலர்தான்; மெயின் பிக்சரை டெல்டாவில் காட்டுவோம்" - தவெக இணைப்பு விழாவில் விஜயபாஸ்கர் 'பன்ச்'

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் சி. விஜய பாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கின்றனர். தவிர பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந... மேலும் பார்க்க

”இனி சுடு தண்ணீருக்காக அலைய வேண்டாம்” - கோரிக்கை வைத்த கர்ப்பிணிகள்; நெகிழ வைத்த மாவட்ட ஆட்சியர்!

அரியலூர் மாவட்டம், அரசு மகப்பேறு மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட தாய்சேய் நல மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மகப்பேறு உயர் கண்காணிப்புப் பிரிவு, மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு, வளர் இளம் பிள்ளை கவ... மேலும் பார்க்க

"தவெக வரலாற்றில் கரூர் ஒரு கரும்புள்ளி.!"- தவெக இணைப்பு விழாவில் பேசிய எம்.ஆர் விஜயபாஸ்கர்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் அதிகாரபூர்வமாக இணைந்திருக்கின்றனர். தவிர பல அதிமுக முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந்திருக்... மேலும் பார்க்க

``திமுக எங்களை முதுகில் குத்தவில்லை, நெஞ்சில் குத்திவிட்டார்கள்!" - வைகோ காட்டாமான பேட்டி

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற்வுள்ள இடைத்தேர்தலில் ம.தி.மு.க போட்டியிடாது. அதே சமயம், முதல்வர்... மேலும் பார்க்க