செய்திகள் :

புதிய EPF திட்டம்: எதற்கெல்லாம், எத்தனை முறை பாதியில் பணம் எடுக்க முடியும்?

post image

சமூக பாதுகாப்புச் சட்டம், 2020-ன் கீழ், புதிய 'ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம், 2026'-ஐ தற்போது அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு. இது EPF திட்டம், 1952-க்கு மாற்றாகும்.

இந்தப் புதிய திட்டத்தின் படி, வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் சில முக்கிய காரணங்களுக்காக தங்களது வைப்பு நிதி கணக்கில் இருந்து பகுதிப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

பகுதி பணம் என்றால், ஊழியர்கள் தங்களக்கு தகுதியான மொத்தப் பிஎஃப் தொகையில் (Eligible Member Balance) 75 சதவிகித பணத்தை முக்கிய தேவைகளுக்காக எடுத்துகொள்ளலாம்.

பி.எஃப்
பி.எஃப்

மீதி 25 சதவிகித தொகையை கட்டாயம் பி.எஃப் கணக்கில் வைத்திருக்க வேண்டும்.

அதாவது, ஒருவருக்கு பிஎஃப் கணக்கில் தகுதியான தொகையாக ₹1 லட்சம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.

புதிய திட்டத்தின் படி, இதில் ரூ.25,000-ஐ பி.எஃப் கணக்கிலேயே எப்போதும் வைத்திருக்க வேண்டும். மீதமுள்ள ரூ.75,000 தொகையை தற்போதைய விதிகளுக்கு உட்பட்டு பகுதிப் பணமாக எடுத்துக்கொள்ள முடியும்.

சரி... என்னென்ன காரணங்களுக்காக பி.எஃப் பணத்தை பாதியில் எடுக்க முடியும்?

> தனது மற்றும் குடும்பத்தினரின் மருத்துவச் செலவுகளுக்கு,

> கல்விச் செலவுகள் (இது உறுப்பினர் காலத்தில் 10 முறை மட்டுமே எடுக்க முடியும்)

> திருமணம் (இது உறுப்பினர் காலத்தில் 5 முறை மட்டுமே எடுக்க முடியும்)

> வீடு வாங்குதல், வீடு கட்டுவது, வீடு மராமத்து, வீட்டுக் கடன் போன்றவைக்கு,

பி.எஃப்
பி.எஃப்

> முக்கிய சூழல்களுக்கு

> வேலையில் இருந்து வெளியேறினால் (இது ஒரு நிதி ஆண்டிற்கு அதிகபட்சம் 2 முறை பணம் எடுக்க முடியும்)

வேலையில் இருந்து வெளியேறுவதை தவிர, மேலே கூறியுள்ள அனைத்து காரணங்களுக்கும் வருங்கால வைப்பு நிதி உறுப்பினராக சேர்ந்து 12 மாதங்கள் ஆகியிருக்க வேண்டும்.

வேலையில் இருந்து வெளியேறினால் உறுப்பினர் ஆகி 12 மாதங்கள் முழுவதும் நிறைவடையவில்லை என்றாலும், பணம் எடுத்துக்கொள்ளலாம்.

PF: இனி ரூ.1,800-க்கு மேல் பிடித்தமாக செய்தாலும், உங்க விருப்பம் தேவை! - தெரிந்து கொள்ளுங்கள்

கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு, 'இ.பி.எஃப் திட்டம் 1952'-ஐ மாற்றி, சமூக பாதுகாப்புச் சட்டம் 2020-ன் கீழ் 'ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம் 2026'-ஐ அறிவித்துள்ளது மத்திய அரசு. புதிய திட்ட... மேலும் பார்க்க

அமெரிக்கா: `பிறப்புக் குடியுரிமை' - அதிபரின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்; ட்ரம்ப் அதிருப்தி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் அவர் கையெழுத்திட்ட முதன்மை கோப்புகளில் ஒன்று ``அமெரிக்காவில் சட்டவிரோதமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தங்கியிருக்கும் வெளிநாட்டினரின் குழந்தைகளுக்கு பிறப்புரி... மேலும் பார்க்க

சதுரகிரி: 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரோப் கார் சேவை திட்டம்! - நிறைவேற்றுமா புதிய அரசு?

தென் மாவட்டங்களில் பழனிக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள பிரசித்தி பெற்றது சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி மலைக்கோயில். மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் இந்த தலம் அமைந்துள்ளது. இத்தல... மேலும் பார்க்க

`மக்களாகிய நீங்கள் செய்ததுதான் மிகப்பெரிய ஊழல்.!' - அமைச்சர் விஜய் பாலாஜி பேசியதென்ன?

முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானியில் சம பந்தி விருந்து நடைபெற்றது.‌ மேலும், தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. பவானி நகராட்சி ம... மேலும் பார்க்க

ஆய்வுக்குப் போன இடத்தில் அரசு வாகனத்தில் ரீல்ஸ்; சர்ச்சையில் சத்தியமங்கலம் தாசில்தார்

ஈரோடு மாவட்டத்தில் அரசு அதிகாரிகளில் ஒரு சிலர் வரம்புகளை மீறி பணி நேரங்களில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் எடுப்பதும் அதனை சோசியல் மீடியாக்களிலும் பகிர்வதும் அண்மைக்காலமாகத் தொடர்ந்து வருகின்றன. அந்த வரி... மேலும் பார்க்க

'இஸ்லாம் மதத்திற்கு மாறினால் பிற்படுத்தபட்ட வகுப்பு சான்றிதழ் கிடையாது’ - நீதிமன்றம் சொல்வது என்ன?

தூத்துக்குடியைச் சேர்ந்த சமீர் அகமது என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், “என் இயற்பெயர் பரமசிவம். நான்இந்துப் பெற்றோருக்குப் பிறந்து, இஸ்லாம் மதத்தைத் தழுவி என்னுடைய ... மேலும் பார்க்க