செய்திகள் :

வெனிசுலாவிருந்து கொண்டுவரப்பட்ட இந்திய மாலுமி உடல் - மூளை, இருதயம் உள்ளிட்ட உறுப்புகள் மாயம்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் செளகான் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சரக்கு கப்பல் வேலைக்காக வெனிசுலா சென்றார். ஆனால் கடந்த மே மாத தொடக்கத்தில், அவர் வேலைக்கு சென்ற கம்பெனி நிர்வாகம் செளகான் குடும்பத்திற்கு போன் செய்து செளகான் கப்பலில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அடுத்த நாள் அவர் 95 சதவீதம் உயிர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கூறினர். அதன் பிறகு அவர் இறந்துவிட்டதாகவும், உடலை ஒரு வாரத்தில் கொண்டு வந்து கொடுப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் ஒரு வாரம் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் கழித்த பிறகுதான் செளகான் உடல் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. செளகான் உடலை தியோரியா டாக்டர்கள் போலீஸார் முன்னிலையில் பிரேத பரிசோதனைக்காக சோதனை செய்தபோது அந்த உடல் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் முழுக்க தையல் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து முறைப்படியான உத்தரவு இல்லாமல் தங்களால் பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

செளகான் மனைவி

எனவே கோர்ட் உத்தரவு மூலம் டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். ஆனால் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக செளகான் உடம்பில் இருதயம், மூளை, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உட்பட உடலில் எந்த உறுப்பும் இல்லை. அனைத்தும் மாயமாகி இருந்தது. இதனால் செளகான் எப்படி இறந்தார் என்பதை டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து செளகான் இறந்தது எப்படி என்பது குறித்து மத்திய அரசு வெனிசுலாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் முழுமையாக விசாரணை நடத்தவேண்டும் என்று இந்திய மாலுமிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மாலுமிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''உடலில் ஏற்கனவே விரிவான தையல்கள் காணப்பட்டன (கழுத்து முதல் அந்தரங்க எலும்பு இணைப்பு வரை 22 தையல்கள் + காதுக்குக் காது 21 தையல்கள்). இறப்பதற்கு முந்தைய காயங்கள் எதுவும் காணப்படவில்லை.

உடல் ஏறக்குறைய ஒரு மாதம் வரை ஆழ்-உறைநிலையில் வைக்கப்பட்டிருந்தது. உடலில் எந்த உறுப்பும் இல்லாததால் இறப்புக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மாலுமிகள் பலிகடாக்களாக மாறுகிறார்கள். வெனிசுலா அதிகாரிகளிடம் இருந்து முழு விசாரணை அறிக்கையை பெறவேண்டும். வெனிசுலாவில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக தலையிட்டு முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை, இறப்பு சூழ்நிலைகள் மற்றும் நீதி, குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செளகானின் தந்தை ராம்தேவ் இது குறித்து கூறுகையில்,''எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆரம்பக்கட்ட பிரேத பரிசோதனை ஏற்கனவே நடத்தப்பட்டிருந்தது. ஆனால் மாவட்ட நீதிபதியின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இரண்டாவது உடற்கூராய்வில், உடலிலிருந்து சில உள்ளுறுப்புகள் காணாமல் போனதும், இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதும் தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்," என்று கூறினார். வெனிசுலா அதிகாரிகள் பிரேத பரிசோதனை அறிக்கையோ அல்லது இறந்ததற்கான காரணம் குறித்தோ எந்த வித அறிக்கையும் கொடுக்கவில்லை என்றும் செளகான் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதுச்சேரி: நாட்டை உலுக்கிய போலி மருந்து வழக்கில் `ட்விஸ்ட்’ - லஞ்சம் கேட்ட ஐ.பி.எஸ் அதிகாரி கைது!

இந்தியாவின் பிரபல மருந்து நிறுவனங்களான `சன் ஃபார்மா' மற்றும் `டாக்டர் ரெட்டிஸ்' பெயரில், இந்தியா முழுவதும்போலி மருந்துகளை சப்ளை செய்துவந்த கும்பலை அண்மையில் கண்டறிந்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார். தொடர்ந... மேலும் பார்க்க

'ரகசிய ஷேவிங், பாலியல் ஆசைக்கு மறுப்பு' - பெண் வேடமிட்டு ஆணை மணந்த நபருக்கு நடந்த விபரீதம்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பியூஷ் (20) என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பூனம் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் அடிக்கடி ஆன்லைன் மூலம் சாட்டிங் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் சேர்ந்து கணவன்... மேலும் பார்க்க

`மிகவும் குண்டாக இருக்கிறாய்; உன்னால் குழந்தை பெற முடியாது!'- மனைவியை சித்ரவதை செய்து கொன்ற கணவன்

கர்நாடகா மாநிலம், தார்வாடு மாவட்டத்தில் உள்ள ஹனாசி என்ற கிராமத்தை சேர்ந்த பசவராஜ் என்பவர் பிரியங்கா என்ற செவிலியரை கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்தார். மல்யுத்த வீரரான பசவராஜ் திருமணமான சில மாதங்களில... மேலும் பார்க்க

"ஸாரி அப்பா, அம்மா... செல்போனில் ஆதாரங்கள் உள்ளன" - போதை கணவரால் துயர முடிவை எடுத்த இளம்பெண்!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷ்(32). இவருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த நாகராஜன் - கலா தம்பதியரின் மகள் விக்னேஸ்வரி (27) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு மு... மேலும் பார்க்க

தவெக MLA இளையராஜாவிடம் பேரம் பேசியது என்ன... சிக்கும் திமுக பிரமுகர்கள்? - யார் இந்த திருநாவுக்கரசு?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியின் த.வெ.க எம்.எல்.ஏ-வாக இருப்பவர் இளையராஜா. இவர், 29-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜைச் சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் யூடியூபரும் தேர்தல் வியூ... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் சினிமா... மனைவியைக் கொன்று மூட்டைக்கட்டிய கணவன் - வேலூரில் கொடூரம்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48), கார் டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி (36). இவர்களுக்கு இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில்... மேலும் பார்க்க