செய்திகள் :

விளாச்சேரி டு அமெரிக்கா... களிமண்ணில் உருவாகும் ஒரு கிராமத்தின் கனவு!

post image

பண்டிகை காலங்களில் வீடுகளையும் கொலு படிகளையும் அலங்கரிக்கும் பொம்மைகளுக்குப் பின்னால் பல குடும்பங்களின் உழைப்பு இருக்கிறது.

அப்படிப்பட்ட பாரம்பர்ய பொம்மைத் தயாரிப்புக்குப் பெயர்பெற்ற ஊராகத் திகழ்கிறது மதுரை மாநகரில் உள்ள விளாச்சேரி கிராமம். இங்கு களிமண் பொம்மைகள் மட்டுமல்லாமல், எடை குறைவான பேப்பர் பொம்மைகளும் தயாரிக்கப்பட்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து பொம்மைகள் செல்கின்றன.

களிமண் பொம்மையை அச்சில் பதித்து எடுத்த பிறகு அது உடனடியாக விற்பனைக்குத் தயாராகிவிடுவதில்லை. ஒரு பொம்மை முழுமையாகத் தயாராகி கைகளுக்குக் கிடைக்க குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆகிறது. அதன் பிறகு பெயின்டிங் உள்ளிட்ட பணிகளும் நடைபெறுவதால், மொத்தமாக சுமார் 20 நாட்கள் வரை ஆகிறது. பேப்பர் பொம்மைகளைப் பொறுத்தவரை சுமார் 10 நாட்களில் தயாரித்து வழங்க முடிகிறது. குறிப்பாக பேப்பர் பொம்மைகளின் தயாரிப்பில் வெயிலும் காலநிலையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

விளாச்சேரியின் பொம்மைத் தொழில் ஒரு கிராமத்தின் வாழ்வாதாரத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. சுமார் 200 குடும்பங்கள் இந்தத் தொழிலைச் சார்ந்து இருக்கின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 400 பேர் வரை இதில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாகப் பெண்கள் இந்தத் தொழிலின் பல்வேறு கட்டங்களில் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

இங்கு தசாவதாரம், ராவணன், ராமாயணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட செட்டுகள், கல்யாண செட் உள்ளிட்ட பல்வேறு வகையான பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. கொலு வைப்பவர்களின் தேவைக்கேற்ப பழைய கதைகள் மற்றும் இதிகாசக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட செட்களும் உருவாக்கப்படுகின்றன.

வெளிநாடுகளுக்கு பொம்மைகளை அனுப்பும்போது எடை முக்கியமானதாக இருப்பதால், லைட்வெயிட் பொம்மைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகத் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். பொம்மைகள் உடையாமல், சேதமடையாமல் சென்று சேருவதற்காக Bubble பேப்பர் உள்ளிட்ட பாதுகாப்பான பேக்கிங் முறைகளைப் பயன்படுத்தி, தனிப்பட்ட கூரியர் மூலம் அனுப்புகின்றனர். இதன் மூலம் விளாச்சேரியில் உருவாகும் பொம்மைகள் கடல் கடந்தும் சென்று கொண்டிருக்கின்றன.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தற்போது கிருஷ்ணர் பொம்மைகளுக்கான தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேவையான பொம்மைகளை முன்கூட்டியே தயாரித்து பேக் செய்து வைத்துள்ள நிலையில், ஆர்டர்கள் வர வர அவற்றை அனுப்புவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. கிருஷ்ண ஜெயந்தி முடிந்ததும் விநாயகர் சதுர்த்தி, அதன் பிறகு நவராத்திரி கொலு என அடுத்தடுத்த பண்டிகைகளுக்கான பணிகள் தொடங்கிவிடுகின்றன. கொலு சீசனில் அதிகமான தேவை இருப்பதால் இரவு பகலாக வேலை செய்ய வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. அதன் பிறகு கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளுக்கான பொம்மைகள் தயாரிக்கும் பணி தொடர்கிறது.

உள்ளூர் வாடிக்கையாளர்களுடன் சேர்த்து வெளியூர்களில் உள்ள வழக்கமான வாடிக்கையாளர்களும் தொலைபேசி மூலம் ஆர்டர்களை வழங்குகின்றனர். ஒரு பண்டிகைக்கான வேலை முடிவதற்குள் அடுத்த பண்டிகைக்கான வேலை தொடங்கிவிடும் அளவுக்கு இந்தத் தொழில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

வீடுகளின் கொலு படிகளில் அழகாக அமரப்போகும் ஒவ்வொரு பொம்மைக்குப் பின்னாலும் பல நாள்கள் உழைக்கும் கைகளும், ஒரு கிராமத்தின் வாழ்வாதாரமும் இருக்கிறது. விளாச்சேரியில் உருவாகும் இந்தப் பொம்மைகள் பண்டிகைகளை மட்டும் அலங்கரிப்பதில்லை; தலைமுறைகள் கடந்து வரும் ஒரு பாரம்பர்யத் தொழிலையும் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

தாயின் கனவை நனவாக்கிய GenZ மகள் - அசத்தும் சீர் தட்டுகள் டெக்கரேஷன் பிசினஸ்!

தன் தாயின் கனவுகளை நனவாக்குவதற்காக, GenZ மகள் புதிதாக ஒரு பிஸினஸைத் தொடங்கியுள்ளார்.பெயர் மித்ர ப்ரத்திகா, முதுகலை இயற்பியல் படித்து வருகிறார்.தனது அம்மாவின் புதைந்த கனவுகளை மீட்டெடுத்து, கோயம்புத்தூர... மேலும் பார்க்க

"AI-ல் 'இதை' படிங்க" - 17 வயதில் மாதம் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் ஆயுஷ் சிங்-ன் அட்வைஸ்!

எங்கும், எல்லாவற்றிலும் ஏ.ஐ., என்று இப்போது உலகம் மாறி வருகிறது. ஒரு லேப்டாப், விட்டுவிட்டுக் கிடைக்கும் இன்டர்நெட் கனெக்ஷன், ‘சாதித்துவிட வேண்டும்’ என்கிற ஆர்வம் ஆகிய மூலதனத்தை வைத்து ஏ.ஐ., உலகில் தன... மேலும் பார்க்க

ஏர் இந்தியா நஷ்டம்: சிங்கப்பூரில் வெடித்த அரசியல், இனவாத சர்ச்சை... என்ன நடக்கிறது?

உலகளாவிய சூழல், எரிபொருள் செலவு, அதிகரிக்கும் விமானப் போக்குவரத்துச் செலவு, மெர்ஜரால் ஏற்பட்ட தாக்கங்கள் போன்ற காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனம் இறங்குமுகத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த... மேலும் பார்க்க

மதுரையில் GRT ஜூவல்லர்ஸ் 68-வது ஷோரூம் திறப்பு – வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகள்!

மதுரை அண்ணா நகரில் 68-வது ஷோரூமை திறந்துள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், மதுரையில் தனது இரண்டாவது ஷோரூமைத் தொடங்குவதன் மூலம், வளர்ந்து வரும் தனது பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.ஆறு தசாப்தங... மேலும் பார்க்க

Bombay Creamery: ஐஸ்க்ரீம் சந்தையில் கால் பதித்த ரிலையன்ஸ்… ₹10-ல் தொடங்கும் புதிய போட்டி

இந்தியாவின் ஐஸ்க்ரீம் சந்தையில் களமிறங்கியிருக்கிறது ரிலையன்ஸ். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் FMCG பிரிவான Reliance Consumer Products Limited (RCPL), ‘Bombay Creamery’ என்ற புதிய ... மேலும் பார்க்க

கடனால் அனைத்தையும் இழந்த பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர்: மீண்டும் வேலைக்கு செல்லும் தொழிலதிபர்

நாட்டில் பல முன்னணி நிறுவனங்கள் கடன் தொல்லையால் கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கையிக்கு செல்கிறது. ரிலையன்ஸ் மொபைல் உரிமையாளரான அனில் அம்பானிக்கு சொந்தமான பல நிறுவனங்கள் அது போன்று த... மேலும் பார்க்க