செய்திகள் :

விழிச்சவால்: `வாசிப்பு மகிழ்ச்சியை தொடு உணர்வின் மூலமாக கடத்துகிறோம்!' - சிறார் எழுத்தாளர் விழிஞன்

post image

சென்னை புத்தகக் காட்சியில் பல புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை என அனைத்து தரப்பினருக்குமான புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன.

அதன் ஒரு பகுதியாக விழிச்சவால் மாற்றுத்திறனாளிகளுக்கும், பிரெய்லி வடிவிலான தொடுகளில் கதை சொல்லும் புத்தகங்கள் சிறார் எழுத்தாளர் விழிஞ்சன் அவர்களின் பென்சில்களின் அட்டகாசம், கடல்ல்ல்ல், சகி வளர்த்த ஒகி ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து எழுத்தாளர் எழுத்தாளர் விழிஞன் அவர்கள் நம்மிடம் பேசுகையில், ``சிறார்களுக்கான கிட்டத்தட்ட 70 புத்தகங்களை இதுவரையில் வெளியிட்டு இருக்கிறேன். 49-வது சென்னை புத்தகக் காட்சியில் இது ஒரு சிறப்பான தருணம்.

விழி ஒளி அமைப்பின் மூலமாக எனது மூன்று புத்தகங்கள் பென்சில்களின் அட்டகாசம், கடல்ல்ல்ல், சகி வளர்த்த ஒகி தமிழ் பிரைலி முறையில் வெளியிடுகிறோம். எல்லோருக்குமான உலகத்தை நாம் ஏற்படுத்தி விட்டோமா என்றால் அது கிடையாது. இன்று பெரும்பாலானவர்கள் கதையை ஆடியோ வடிவில் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

மின்னணு வடிவில் அனைத்தும் தற்போது உருபெற்றுள்ளது. வாசிப்பு என்பது குறைந்து கொண்டு வருகிறது. பார்வை திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளும் நம்மைப் போன்று கதைகளை படித்து மகிழ, தொட்டு உணரக்கூடிய பிரெய்லி வடிவில் படிக்க வேண்டும் என்பதன் நோக்கில் சிறு தொடக்கத்தை ஆரம்பித்து வைத்துள்ளோம்.

முதல் புத்தகத்தை நான் வெளியிட்ட மகிழ்ச்சியை விட இப்போது பிரைலி வடிவில் விழிச்சவால் உடையவர்களுக்காக புத்தகம் வெளியிட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. 20 ஆண்டுகளாக எழுதுகிறேன். முதல்முறையாக இதை பிரைலி வடிவில் மாற்றி அதை விழிச்சவால் மாற்றுத்திறனாளிகள் படிக்கும்போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

விழிச்சவால் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக நடத்தப்பட்டு வரும் விழி ஒளி அமைப்பைச் சேர்ந்த ரேவதி அவர்கள் நம்மிடம் பேசுகையில், ``விழிச்சவால் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் தொடர்ந்து கதை சொல்லும் வகுப்புகளை எடுத்து வருகிறோம்.

அப்போது பார்வை குறைபாடு உடைய ஒரு மாணவர், பிரைலி வடிவில் புத்தகங்களை இதை மாற்றி தருமாறு வேண்டுகோள் விடுத்தார் அதன் அடிப்படையில், இந்த முதற்கட்ட முயற்சியை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். அதுமட்டுமில்லாமல் ஓவியங்களையும் தொடு உணர்வு கொண்ட ஓவியங்களாக மாற்ற நாங்கள் அடுத்த கட்ட பணியில் இறங்கி இருக்கிறோம். புத்தகம் படிக்கும் போது நமக்கு ஒரு உணர்வு இருக்கிறது, மகிழ்விக்கிறது.

அவர்களும் நம்மைப் போன்றே புத்தகங்களை படிக்கும் போது பெரும் மகிழ்வையும் கற்பனை திறனையும் பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என அனைத்து நடைகளையும் ப்ரெய்லி வடிவில் அவர்களுக்கான புத்தகங்களாக மாற்ற வேண்டும்.

நம்மைப் போன்றே அவர்களுக்கும் கதையாடல்களை கடத்த வேண்டும் என்று நோக்கில் அவர்களுக்கு ஏற்ற வகையில் தற்போது விழிஞன் அவர்களின் புத்தகங்களான பென்சில்களின் அட்டகாசம், கடல்ல்ல்ல், சகி வளர்த்த ஒகி ஆகிய புத்தகங்களை தமிழில் பிரெய்லி வடிவில் மாற்றி உள்ளோம். அது மட்டும் இன்றி இன்னும் பல கதை புத்தகங்களை தமிழ் மற்றும் ஆங்கில வடிவங்களில் மாற்ற இருக்கிறோம்.

இந்த புத்தக வெளியீட்டு நிகழ்வில் விழிச்சவால் உடைய மாற்றுத்திறனாளி சென்னை ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திரன், நந்தனம் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ரகுராமன், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி திவ்யதர்ஷினி ஆகியோர் இணைந்து ப்ரெய்லி வடிவிலான புத்தகத்தை வெளியிட்டனர்.

இதுகுறித்து பேசிய பேராசிரியர் ரகுராமன், ``மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் எங்களின் பாட புத்தகங்களை தான் பெரும்பாலும் பிரெய்லி வடிவில் படிக்கிறோம். அதைத் தாண்டி பலவற்றையும் படிக்க ஆர்வமாக இருக்கிறோம். பெரும்பாலும் தற்போது புத்தகங்கள் ஆடியோ வடிவில் தான் எங்களால் கேட்க முடிகிறது. இதைப் போன்று நிறைய புத்தகங்களை பிரெய்லி வடிவில் எங்களுக்காக மாற்ற இதுபோன்ற அரசு முயற்சி எடுக்க வேண்டும்." என கோரிக்கை வைத்தார்.

`போதிய தொகை இல்லை; உள்அரங்கில் இடம் கிடைப்பதில்லை; ஆனா.!" - சாலையோர புத்தக கடைகள் ரவுண்ட்அப்

49-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. புத்தகங்களின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. புதிய புத்தக வெளியீடுகளும், எழுத்தாளர்களையும் வாசகர்களையு... மேலும் பார்க்க

Book Fair: "சாதி, நிலம், பொருளாதாரம் போன்றவற்றையும் பேசுவதுதான் தலித் பெண்ணியம்"- எழுத்தாளர் சிவகாமி

வாசகர்களின் அமோக வரவேற்பால் களைகட்டியுள்ள 49 ஆவது சென்னை புத்தகக் காட்சியில் புத்தகங்களின் விற்பனையும், எழுத்தாளர்களின் அறிவுச் செறிவு மிக்க பேச்சுக்களும், வாசகர்களின் புத்தக நுகர்வும் வெகு விமர்சையாக... மேலும் பார்க்க

Book Fair: ``எழுத்தின் பலம் அதன் எளிமையில் தான் இருக்கிறது!" - எழுத்தாளர் கீதா இளங்கோவன்

எல்லா நாள்களிலும் வாசகர் கூட்டம் சென்னை 49ஆவது புத்தகக் கண்காட்சியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. புத்தக வாசிப்பின் மீது பற்று கொண்ட பலரும் தொடர்ந்து புத்தகக் கண்காட்சிக்கு வருகை தருவதை காண முடிகிறது.... மேலும் பார்க்க

Chennai Book Fair: 100 நூல்கள்;16,000 பக்கங்கள்; 100 ஆண்டுகால திராவிட வரலாறு-அசத்தும் ஆழி பதிப்பகம்!

சென்னை புத்தகக் கண்காட்சி ஒய்.எம். சி. ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 1000 க்கும் மேற்பட்ட அரங்குகள், லட்சக்கணக்கான புத்தகங்கள் என மாபெரும் அறிவுத் திருவிழாவாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் ... மேலும் பார்க்க