சென்னை கள்ளச்சாராய வழக்கில் பெண்ணை சிக்கவைக்க ஸ்பெஷல் டீம் போலீஸ் போட்ட மாஸ்டர் ...
சுவைக்கத் தூண்டும் சாட் : `ஜவ்வரிசி கிச்சிடி' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?
ஜவ்வரிசி கிச்சிடி
தேவையானவை:
ஜவ்வரிசி - ஒரு கப்
உருளைக்கிழங்கு - ஒன்று (தோலுரித்து, வேகவைத்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும்)
சீரகம் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
ஒன்றிரண்டாக உடைத்த வேர்க்கடலை –
அரை கப்
சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
ஜவ்வரிசியைச் சிறிது தண்ணீர்விட்டு கால் மணி நேரம் ஊறவைத்து தண்ணீரைக் கீழே ஊற்றிவிடவும். மீண்டும் ஜவ்வரிசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அதனை ஆறு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து ஜவ்வரிசியை உதிர் உதிராக எடுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் இதில் ஜவ்வரிசி, உருளைக்கிழங்கு, உப்பு, எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, வேர்க்கடலை சேர்த்து நன்றாகக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.















