தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: இரு அணிகள்... ஏராள சுயேச்சைகள் - களத்த...
15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `வெல்லம் அவல் கொழுக்கட்டை' - வீட்டிலேயே செய்வது எப்படி?
வெல்லம் அவல் கொழுக்கட்டை
தேவையானவை:
வெள்ளை அவல் – ஒரு கப்
பொடித்த வெல்லம் - அரை கப்
தண்ணீர் – அரை கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
துருவிய தேங்காய் – ஒரு கப்
உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை:
அவலை கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் குறைவான தீயில் வைத்து வெல்லம் கரைந்து தண்ணீருடன் நன்கு சேரும்வரை வைத்திருந்து இறக்கவும். பின்னர் ஒரு பவுலில் கொரகொரப்பாக அரைத்த அவல், வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள், துருவிய தேங்காய் மற்றும் சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து மென்மையான மாவாகப் பிசைந்து கொள்ளவும். பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.
வெள்ளை அவலில் வைட்டமின் பி, கார்போஹைட்ரேட், கலோரி, குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன.















