செய்திகள் :

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `தேங்காய்ப்பால் திரட்டு' - வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

post image

தேங்காய்ப்பால் திரட்டு

தேவையானவை:

தேங்காய்ப்பால் – ஒரு கப்

அரிசி மாவு – 100 கிராம்

பொடித்த கருப்பட்டி – 400 கிராம்

உப்பு – ஒரு சிட்டிகை

ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

தண்ணீர் – 350 மில்லி

தேங்காய்ப்பால் திரட்டு

செய்முறை:

பொடித்த கருப்பட்டியை 100 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை குலாப்ஜாமுன் சிரப் பதத்துக்கு வந்தவுடன் கீழே இறக்கி தனியாக வைக்கவும். ஒரு வாணலியில் அரிசி மாவு, 250 மில்லி தண்ணீர் மற்றும் அரை கப் தேங்காய்ப்பால் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்னர் அடுப்பைக் குறைவான தீயில் வைத்து இக்கலவையைக் கைவிடாமல் கிளறி கொதிக்கவிடவும். கலவையானது அல்வா பதத்துக்கு வந்தவுடன் மீதமிருக்கும் தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். பிறகு இதனுடன் கருப்பட்டி சிரப், ஏலக்காய்த்தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

உடலின் உள் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல... சரும ஆரோக்கியத் துக்கும் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் உறுதி அளிக்கும் சிறப்பு தேங்காய்ப் பாலுக்கு உண்டு.

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `தேங்காய்ப்பால் கொழுக்கட்டை' - வீட்டிலேயே செய்வது எப்படி?

தேங்காய்ப்பால் கொழுக்கட்டைதேவையானவை: அரிசி மாவு – அரை கப் + ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் – கால் கப் + ஒரு கப் தேங்காய்ப்பால் – ஒரு கப் வெல்லம் – 100 கிராம் உப்பு – சுவைக்கேற்ப ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிக... மேலும் பார்க்க

சுவைக்கத் தூண்டும் சாட் : `சைனீஸ் பேல்' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

சைனீஸ் பேல்தேவையானவை: ஹாக்கா நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்) குடமிளகாய் – ஒன்று முட்டைகோஸ் – கால் கிலோ வெங்காயத்தாள் - ஒரு கட்டு பொடியாக நறுக்கிய பூண்டு – 3 பற்கள் செஷ்வ... மேலும் பார்க்க

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `ஹாட் சில்லி பிரெட்' - வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

ஹாட் சில்லி பிரெட்தேவையானவை: சாண்ட்விச் பிரெட் – 5 பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன் சிறிய சதுரங்களாக நறுக்கிய குடமிளகாய் –... மேலும் பார்க்க

சுவைக்கத் தூண்டும் சாட் : `சோளே குல்ச்சா' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

சோளே குல்ச்சாசோளே மசாலா செய்ய தேவையானவை: வெள்ளைப்பட்டாணி - ஒரு கப் (4 மணி நேரம் ஊறவைக்கவும்) வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது) தக்காளி - இரண்டு (பொடியாக நறுக்கியது) சாட் மசாலாத்தூள் - அரை டேபிள்ஸ... மேலும் பார்க்க

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `டோஸ்டு பொட்டேட்டோஸ்' - வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

டோஸ்டு பொட்டேட்டோஸ்தேவையானவை: உருளைக்கிழங்கு – 3 பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய குடமிளகாய் – ஒரு டேபிள்ஸ்பூன் வ... மேலும் பார்க்க

விதவிதமான இட்லி ரெசி: `ராமசேரி இட்லி' செய்வது எப்படி?

ராமசேரி இட்லிதேவையானவை: பச்சரிசி - ஒரு கப் இட்லி அரிசி - ஒரு கப் உளுத்தம்பருப்பு - கால் கப் வெந்தயம் - சிறிதளவு சாதம் - அரை கப் உப்பு - தேவையான அளவுராமசேரி இட்லிசெய்முறை:பச்சரிசி, இட்லி அரிசி இரண்டையு... மேலும் பார்க்க