மோடியின் தமிழக வருகை; மேடையேறப் போகும் கட்சிகள் எவை? - என்.டி.ஏ கூட்டணிக்கு அழுத...
15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `ஹாட் சில்லி பிரெட்' - வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?
ஹாட் சில்லி பிரெட்
தேவையானவை:
சாண்ட்விச் பிரெட் – 5
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன்
சிறிய சதுரங்களாக நறுக்கிய குடமிளகாய் – ஒரு டேபிள்ஸ்பூன்
வினிகர் – ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயத்தாள் – அலங்கரிக்க
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
பிரெட்டைச் சிறிய சிறிய சதுரங்களாக நறுக்கி ஒரு ஃப்ரை செய்யும் பானில் உலர் டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பானில் எண்ணெய்விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் இதனுடன் மிளகாய்த்தூள், சோயா சாஸ், வினிகர் மற்றும் தேவையான உப்பு சேர்த்துக் கிளறவும்.
பின்னர் இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை பச்சை வாசனை போக நன்கு கொதிக்கவிடவும்.
பின்னர் இதில் உலர் டோஸ்ட் செய்த பிரெட் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வெங்காயத்தாள் தூவி சூடாகப் பரிமாறவும்.















