செய்திகள் :

திருவையாறு: சேதமடைந்த சாக்கடை - சாலை; நிலவும் சுகாதார சீர்கேடு; அலட்சியம் தவிர்ப்பார்களா அதிகாரிகள்?

post image

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு மேல வீதியில் உள்ள சாக்கடை உடைந்து 8 மாதங்களாகியும் சரி செய்யவில்லை என்று குறைபடும் பொதுமக்கள், அதை உடனடியாகச் சீரமைத்து சுகாதாரத்தை உறுதிசெய்ய கோரிக்கை விடுத்தது வருகிகின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதி மக்கள்,

``இந்தச் சாலையை ஒட்டி அமைஞ்சிருக்க சாக்கடை உடைஞ்சு மாசக்கணக்குல சுகாதார சீர்கேடு நிலவிட்டு இருக்குது. இதைப் பத்தி எட்டு மாசமா நிறைய பேர் கேட்டுட்டுப் போறாங்க. ஆனா யாருமே இதை சரி செய்ய முன் வரவே இல்ல. இங்க 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்குறோம்.

இந்தச் சாக்கடை ஆரம்பத்திலேயே திறந்த வெளியாகத்தான் இருந்துச்சு. தினமும் இந்தச் சாலையைக் கடக்கும்போது வரும் துர்நாற்றம் மயக்கமே வர்ற மாதிரி இருக்கும்.

கிட்டத்தட்ட எட்டு மாசமா இந்தச் சாக்கடை இப்படியேதான் கிடக்கு. அதைக்கூட தாங்கிக்கிட்டு இருந்துட்டோம். ஆனா... இப்போ அந்தச் சாக்கடையை ஒட்டி உள்ள சாலையும் உடைஞ்சுட்டே வருது. பாதிக்குப் பாதி உடைஞ்சு போயிருச்சு.

குழந்தைகளுக்கும் ஆபத்தான நிலை:

இந்தச் சாலை இப்படி இருக்குறதால எங்க குழந்தைகளை தனியாக விடவே பயமா இருக்கு. எங்களுக்கு இதை விட்டா வேற வழியே இல்லை.

இந்தச் சாலையைக் கடந்துதான் நாங்க பேருந்து நிலையத்திற்குப் போகணும். இப்படி உடைஞ்சு கிடக்குற சாக்கடை சாலையை கடந்துதான் பிள்ளைங்க பள்ளிக்கூடங்களுக்குப் போயிட்டு வர்றாங்க.

தொற்று ஏற்படும் அபாயம்:

அதுமட்டுமல்லாம இந்தச் சாக்கடை திறந்த வெளியில் இருக்குறதால, கொசு தொல்லையும், மழை பெய்தால் வர்ற துர்நாற்றமும் நோய் பரவல் பாதிப்பை ஏற்படுத்திடுமோன்னு பிள்ளைகளை வெச்சுட்டு பயந்துகிட்டு இருக்கோம். இது குறித்து எங்க பகுதி கவுன்சிலர் நாகராஜன் கிட்ட கோரிக்கை வெச்சுருக்கோம். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுக்குறதா சொல்லிருக்காரு. இனியும் அதிகாரிங்க அலட்சியம் காட்டாம உடனே உரிய நடவடிக்கை எடுக்கணும்" என்றனர்.

ஓமலூர்: வாடகைப் பிரச்னை; மதுப்பிரியர்கள் தொல்லை... காய்கறிச் சந்தையில் கால்வைக்காத வியாபாரிகள்!

சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் புதிதாக சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, தமிழ்நாடு நகராட்சித்துறை மற்றும் சுற்றுலாத்துறை‌ அமைச்சரால் 22.02.2025 என்று திறப்பு விழா கண்... மேலும் பார்க்க

இலங்கை சிறையில் வாடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்... மீட்கக் கோரி கண்ணீர் சிந்தும் மனைவி

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரபு. இவருக்கு பிரபா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மீனவர் பிரபு கடந்த சில வருடங்களாக மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து மதுரையில் உ... மேலும் பார்க்க

தஞ்சை: கோயில் வளாகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி; கேள்விக்குறியாகும் கல்வி! - கவனிப்பார்களா?

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பந்தநல்லூர் அருகே திருமங்கை ஊராட்சி சோழியவிளாகம் கிராமத்தில் காந்தி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஒன்று 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்த... மேலும் பார்க்க

SIR: இன்றே கடைசி நாள்... வாக்காளர் பெயர் சேர்க்க உடனே விண்ணப்பியுங்க!

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR), நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்றது. கடந்த டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், போலிப் ... மேலும் பார்க்க

சத்தியமங்கலம்: 42 தனியார் விடுதிகளுக்கு சீல்; வருவாய்த்துறையினர் நடவடிக்கை - பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தனியார் தங்கும் விடுதிகள் செயல்படுவதாகவும், இதன் காரணமாக சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகவும் ஒல... மேலும் பார்க்க