செய்திகள் :

இலங்கை சிறையில் வாடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்... மீட்கக் கோரி கண்ணீர் சிந்தும் மனைவி

post image

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரபு. இவருக்கு பிரபா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மீனவர் பிரபு கடந்த சில வருடங்களாக மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மதுரையில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் நாள்களில் மருந்து மாத்திரைகளுடனும் சென்றுள்ளார். மேலும் தினமும் தூக்க மாத்திரை உட்கொண்டால்தான் தூங்க கூடிய நிலையிலும் இருந்து வந்துள்ளார்.

ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்பிடி படகுகள்
ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்பிடி படகுகள்

இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க விசைப்படகில் சென்றுள்ளார் பிரபு.

அன்று இரவு இவர்களது படகு பாரம்பர்ய பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் பிரபு உள்ளிட்ட மீனவர்களைச் சிறைப்பிடித்துச் சென்றனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 13-ம் தேதி நீதிமன்றத்திற்கு பிரபு அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போது மனைவி பிரபாவை செல்போனில் தொடர்பு கொண்ட பிரபு, வழக்கமாக தான் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் கிடைக்காமல் சிறையில் அவதியுற்று வருவதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து நம்மிடம் பேசிய பிரபா, ''கடந்த 20 நாள்களாக எனது கணவர் பிரபு இலங்கை சிறையில் இருந்து வருகிறார். மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்ட அவரை மாதந்தோறும் மதுரையில் உள்ள மனநல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்வது வழக்கம்.

மருத்துவர்களின் அறிவுரைப்படி எனது கணவருக்கு தினமும் மருந்து மாத்திரை கொடுக்க வேண்டும். இந்நிலையில் கடந்த 20 நாள்களாக அவர் மருந்து மாத்திரை சாப்பிட முடியாமல் சிறையில் வாடி வருகிறார். இதனால் தன்னால் தூங்க முடியவில்லை எனவும், தூக்கம் இல்லாததால் மன அழுத்தம் அதிகமாகி வருவதாகவும் கூறினார்.

மீனவர் பிரபு
மீனவர் பிரபு

மருந்து மாத்திரை இல்லாததால் சரியான உணவு உட்கொள்ள முடியாமல் தவித்து வரும் அவரது நிலை தற்போது எப்படி உள்ளது என்பதைக் கூட எங்களால் அறிய முடியவில்லை. இந்நிலையில் வரும் 27-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்திற்கு அவரை அழைத்து வரும் போது அவரது நிலையினை இந்திய தூதரக அதிகாரிகள் நீதிமன்றத்தில் எடுத்துச் சொல்லி அவரை சிறையில் இருந்து மீட்டுத் தர வேண்டும்.

எனது கணவரின் நிலை குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளேன். எனது கணவரின் உடல்நிலை மேலும் பாதிப்புக்குள்ளாகி அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன் அவரை மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கண்ணீர் சிந்தினார்.

தஞ்சை: கோயில் வளாகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி; கேள்விக்குறியாகும் கல்வி! - கவனிப்பார்களா?

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பந்தநல்லூர் அருகே திருமங்கை ஊராட்சி சோழியவிளாகம் கிராமத்தில் காந்தி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஒன்று 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்த... மேலும் பார்க்க

SIR: இன்றே கடைசி நாள்... வாக்காளர் பெயர் சேர்க்க உடனே விண்ணப்பியுங்க!

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR), நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை நடைபெற்றது. கடந்த டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், போலிப் ... மேலும் பார்க்க

சத்தியமங்கலம்: 42 தனியார் விடுதிகளுக்கு சீல்; வருவாய்த்துறையினர் நடவடிக்கை - பின்னணி என்ன?

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக தனியார் தங்கும் விடுதிகள் செயல்படுவதாகவும், இதன் காரணமாக சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகவும் ஒல... மேலும் பார்க்க

``மதுரைக்கு ரூ.4,000; நெல்லைக்கு ரூ.4,500: ஆம்னிப் பேருந்துகளின் கட்டணக் கொள்ளை" - அன்புமணி காட்டம்!

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட கொண்டாட்ட தினங்களில் நகரத்தில் வசிப்போர் அவரவரின் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அதற்காக பேருந்துகளும், ரயில்களும் கூட்ட நெரிசலால் அலைமோதும். ஒரு மாதத்துக்கு முன்பே டிக்கெட... மேலும் பார்க்க

"காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம்; அதைத் திமுகதான் எதிர்த்ததாம்!" - திருச்சி வேலுசாமி காட்டம்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுசாமி 'பராசக்தி' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் விஷயங்கள் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார். அப்படத்தில் காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்ததாம், அதைத் திமுகத... மேலும் பார்க்க