BB Tamil 9: "எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன்; ஆனா.!"- டைட்டில் வின்னர் த...
BB Tamil 9: "எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன்; ஆனா.!"- டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் எமோஷனல்
கடந்த அக்டோபர் மாதம் ஒளிப்பரப்பாக தொடங்கிய 'பிக் பாஸ்' சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று (ஜன.18) நடைபெற்றது.
இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் என மொத்தம் 20 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.

பிரஜின், சாண்ட்ரா, அமித், திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் என்ட்ரி கொடுத்திருந்தனர்.
எவிக்ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேற, கம்ருதீன், பார்வதி இருவரும் கடைசிக் கட்டத்தில் ரெட் கார்டு மூலம் வெளியேறினர்.
தவிர பணப்பெட்டி டாஸ்க்கில் கானா வினோத் பணத்தை எடுத்து சென்றார். கடைசியாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா கணேஷ் ஆகிய 4 பேர் இறுதிச் சுற்றுக்கு வந்திருந்தார்கள்.
இந்நிலையில் இன்று வெளியான 'பிக்பாஸ்' சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் அரோரா நான்காவது இடத்தையும் விக்ரம் மூன்றாம் இடத்தையும், சபரி இரண்டாம் இடத்தையும் பிடிக்க திவ்யா கணேஷ் முதல் இடத்தைப் பிடித்து டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றிருக்கிறார்.
பட்டத்தை வென்ற திவ்யா கணேஷ் மேடையில் பேசுகையில், " என்னுடைய முதல் டிராபி இது. நிறைய சேனல்ஸ்-ல வேலை பாத்திருக்கிறேன். எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன், எல்லாத்துலையும் நாமினி ஆவேன். ஆனா விருது கிடைக்காது.

இந்த பிக் பாஸ் ஷோகுள்ள வரும்போது என் பேமிலியும், ப்ரெண்ட்ஸூம் போக வேணாம்'னு தான் சொன்னாங்க. ஆனா எனக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. நான் டிராபியை எதிர்ப்பார்த்து வரல. மக்கள் எனக்கு அன்பு கொடுத்தாங்க. இந்த வீட்டில நான் நானா இருந்ததுக்கு கிடைச்ச டிராபி தான் இது. ரொம்ப சந்தோஷமா இருக்கு" எமோஷனலாகப் பேசினார்.

















