செய்திகள் :

`விவசாயிகள் ஏற்றுமதியாளராக மாற வேண்டும்’ - மாம்பழங்களை மதிப்புக்கூட்ட வேலூர் கலெக்டர் வலியுறுத்தல்

post image

வேலூர் மாவட்டத்தில் சுமார் 5,924 ஹெக்டர் பரப்பளவில் `மா’ பயிர்ச் சாகுபடி செய்யப்படுகிறது. மகசூல் அதிகமான காலங்களில் விளைப் பொருள்களின் விலை ஏற்றத்தாழ்வால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், மா விவசாயிகளின் கோரிக்கைகளின்படி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நிர்வாகத்தின்கீழ் விரிஞ்சிபுரத்தில் செயல்படும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் புதிய ரகம் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. மாம்பழத்தில் இருந்து மாம்பழப் பொடி தயாரிப்பு போன்றவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் செயல்முறையாக விளக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல், மா சந்தைக்கான மதிப்பு கூட்டுப் பொருள்கள், மதிப்பு கூட்டுதலுக்கு ஏற்ற மாம்பழங்களை தேர்வு செய்தல் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

வேலூர் கலெக்டர் லீலா அலெக்ஸ்

இந்த பயிற்சியை தொடங்கி வைத்து பேசிய கலெக்டர் லீலா அலெக்ஸ், ``வேலூர் மாவட்டத்தில் மாம்பழ உற்பத்தி மற்றும் அது தொடர்பான பிரச்னைகள் பற்றி விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டத்தில் பேசியுள்ளோம். 50,000 மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், அதை எப்படி முறையாக, லாபகரமானதாக மாற்றவும், அதற்கு உண்டான நடைமுறையை பற்றி அறிந்துகொள்ளவும் உங்களுக்கு ஒரு பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு உற்பத்தியாளராக நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஏற்றுமதி தரத்துக்குக் கொண்டு சென்று லாபகரமானதாக எப்படி மாற்ற வேண்டும்? என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த விவசாயக் கூட்டங்களில் மாம்பழக் கூழ், மாம்பழப் பொடி, ஊறுகாய், ஜாம் போன்ற மதிப்பு கூட்டுப் பொருள்கள் பற்றி பேசியுள்ளோம்.

ஒரு உற்பத்தியாளராக இருக்கிற நம் விவசாயிகளை எப்படி ஒரு வியாபாரியாக, ஒரு ஏற்றுமதியாளராக மாற்றுவது? என்று நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் போது தான், நம் வேதியியல் விஞ்ஞானிகள் நமக்கு நிறைய யோசனைகளைக் கொடுத்தார்கள். இந்த யோசனைகளை நம் விவசாய சமூகத்திடம் கொண்டுப் போய், அவர்களை உற்பத்தியாளரிலிருந்து ஒரு வியாபாரியாகவும், ஏற்றுமதியாளராகவும் கொண்டு போவதுதான் மாவட்ட நிர்வாகத்தின் விருப்பம். அதற்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுங்கள். தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய விவசாய நிலத்தில் போய் அதைச் செயல்படுத்துங்கள். நம்முடைய விவசாயிகளை களத்தில் போய் பார்க்கும்போது மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. நீங்களும் நிறைய ஊக்குவிக்க வேண்டும். ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்கு சொல்லும்போது அது இன்னும் எளிதாகச் சென்றடையும்.

பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள்

அதனால், நீங்கள் உங்களது அனுபவங்களை மற்ற விவசாயிகளிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்வதற்கு வசதியாக இருக்கும். எனவே, அடுத்தடுத்த கூட்டங்களில் இதுபோல ஊக்கமளிக்கும் விவசாயிகளை அழைத்து, அவர்களின் உரைகளையும் கேட்க நாம் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார். முன்னதாக, வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிரிடப்பட்டுள்ள உயர் விளைச்சல் ரகங்களான வம்பன் 11 ரக உளுந்து, நெல் கோ 51 ரக நெற் பயிர்களையும் பார்வையிட்ட கலெக்டர் லீலா அலெக்ஸ், அதன் உற்பத்தி செயல்முறைகளையும் கேட்டறிந்து வேளாண்மை துறைக்கு விதை உற்பத்தி செய்யவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, காட்டு பன்றிகளின் சேதாரத்தில் இருந்து பயிர்களை பாதுகாக்கும் `காட்டுப் பன்றி விரட்டி’ செயல் முறை விளக்க திடலையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, வேளாண்மை இணை இயக்குநர் ஸ்ரீ வித்யா உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

"அந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது..!"- அயலக மாணவர் விவகாரத்தில் ஸ்டாலின் கண்டனம்

அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைக்கவில்லை என மாணவர் பாரதிதாசன் மீண்டும் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போத... மேலும் பார்க்க

`நடிகராக இருக்கும்போது ஆறுதல் சொல்வது; ஆட்சிக்கு வந்து அதிகாரிகளை காப்பாற்றுவதா?'- கே.பாலகிருஷ்ணன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பொறுப்பான அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு குற்றவியல் நடவடிக்கை ... மேலும் பார்க்க

'அடக்கி வாசிங்க; திமுகவின் ஆதரவால்தான் காங், விசிக, முஸ்லிம் லீக் வெற்றி பெற்றது' - அன்புமணி

பெரியார் பிறந்தநாளையொட்டி, தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அன்ப... மேலும் பார்க்க

கான்ஃபெரன்ஸ் காலில் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம்: உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட மனோஜ் ஜராங்கே

மகாராஷ்டிராவில் பெரும்பான்மையாக வாழும் மராத்தா சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி அடிக்கடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் மனோஜ் ஜராங்கே, மீண்டும் கடந்த 20 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். மா... மேலும் பார்க்க

US Fed வங்கியின் வட்டி விகித உயர்வை விரும்பாத ட்ரம்ப்; Upset-ல் பிற நாடுகளை குற்றம்சாட்டுவது என்ன?

நேற்று அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் 0.25% வட்டி விகித உயர்வை அறிவித்தது. இந்த வட்டி விகித உயர்வு வட்டியை 3.75-4% ரேஞ்சிற்குள் கொண்டுள்ளது. ஆனால், இந்த வரி விகித உயர்வு அமெரிக்க அதிபர்... மேலும் பார்க்க

``இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்" - ஜி.கே.வாசன்

"தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பதை நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்" என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல்தருமப... மேலும் பார்க்க