செய்திகள் :

விவாகரத்து பெற்ற மனைவிக்கு இறுதிச்சடங்கு; மும்பையில் ஒன்று கூடிய ஆண்களின் கோரிக்கைகள் என்னென்ன?

post image

தற்போது பித்ரு பக்‌ஷா எனப்படும் 16 நாள் சடங்குகள் நடந்து வருகிறது. இந்த 16 நாட்களில் இறந்த உறவுகளுக்கு திதி அல்லது திவசம் கொடுக்கப்படுவது வழக்கம்.

ஒவ்வொருவரும் தங்களது இறந்த உறவுகளுக்காக ஆறுகள், கடல்கள் மற்றும் நீர்நிலைகளில் இது போன்ற சடங்குகளைச் செய்வது வழக்கம். மும்பையின் தென்பகுதியில் உள்ள பானகங்கா குளத்தில் ஒவ்வொரு அமாவாசையன்றும் இறந்தவர்களுக்காக உறவினர்கள் திதி கொடுப்பது வழக்கம். பானகங்கா தீர்த்தம் என்பது ராமர் வனவாசம் சென்ற காலத்தில் உருவாக்கியது என்று கூறப்படுவதுண்டு.

இந்தப் பானகங்கா தீர்த்தத்தில் 40க்கும் மேற்பட்ட ஆண்கள் கூடினர். அவர்கள் அனைவரும் திருமண உறவுகளால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களது மனைவிகள் அவர்களை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். இதையடுத்து பிரிந்து சென்ற தங்களின் மனைவிக்கு 40க்கும் மேற்பட்ட ஆண்கள் ஒன்று சேர்ந்து பானகங்கா தீர்த்தத்தில் திதி கொடுத்தனர்.

ஆண்களின் உரிமைகளுக்காகப் பாடுபடும் தி வாஸ்தவ் அறக்கட்டளையின் நிறுவனர் அமித் தேஷ்பாண்டே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இதற்கு 'நாட்டியம்ச பிண்டம்' எனப் பெயரிட்டு சடங்குகளை வழிநடத்தினார்.

இது குறித்து தேஷ்பாண்டே கூறுகையில், ''பிரிந்த உறவுகளுக்கு இந்த அடையாள இறுதிச்சடங்குகளைச் செய்வதன் மூலம், கடந்தகால மன உளைச்சலில் இருந்து விடுபடவும், தங்கள் வாழ்க்கையை முன்னேற்றவும் ஆண்கள் உதவி பெறுகிறார்கள். திருமணம் மற்றும் விவாகரத்து சட்டபூர்வமான நிகழ்வுகள் என்றாலும், இந்து திருமண சடங்குகளுடன் தொடர்புடைய ஒரு குறிப்பிட்ட தெளிவின்மை உள்ளது.

இந்து மத நூல்கள் விவாகரத்து பற்றி குறிப்பிடவில்லை, மேலும் இந்தச் சடங்குகள் ஒரு மத சபதத்திற்கு முறையான முடிவைக் குறிக்கின்றன" என்று தேஷ்பாண்டே கூறினார்.

இந்த அறக்கட்டளை குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தில் இருந்து ஆண்களுக்குப் பாதுகாப்பு பெறுதல், பாலின வேறுபாடுகளை நீக்குதல், பெண் என்ற குறிப்புகளை 'மனைவி' என்று மாற்றுவது உட்பட பல்வேறு கோரிக்கைக்காக இந்த அமைப்பு போராடி வருகிறது.

மேலும் ஆண்களை பாலியல் வன்கொடுமை, கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்க தனிச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

மரண தண்டனை கைதி Christa Pike: `இருமுறை மரண ஊசி... ஆனாலும் உயிரிழக்கவில்லை' - அதிர்ந்த அதிகாரிகள்

அமெரிக்காவின் Tennessee மாநிலத்தில் மரண தண்டனை கைதி Christa Pike-க்கு மரண ஊசி மூலம் தண்டனையை நிறைவேற்ற முயன்றபோது நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு முறை மரண ஊசி செலுத்தப்பட்டு... மேலும் பார்க்க

'மனைவி கேட்ட ரூ.1 கோடி, மகனின் மருத்துவ செலவால் கடன்' - 43வது மாடியிலிருந்து குதித்த பொறியாளர்

டெல்லி அருகில் உள்ள குருகிராம் என்ற இடத்தில் வசித்து வந்தவர் சாம்பவ் ஜெயின் (28). சாப்ட்வேர் எஞ்சினியராக இவர் நொய்டாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி இருந்தார். அந்த ஹோட்டலின் 43 வது மாடியில... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் மகாத்மா காந்தி குறித்து ஆட்சேபகரமான ரீல்ஸ் - பெண் சோசியல் மீடியா பிரபலம் கைது

இந்தியாவில் அனைத்து ரூபாய் நோட்டுக்களிலும் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம் பெற்று இருக்கும். ஆனால் மகாத்மா காந்தியின் புகைப்படம் 500 ரூபாய் நோட்டில் வித்தியாசமான முறையில் இடம் பெற்று இருப்பது போன்ற... மேலும் பார்க்க

'26 வருட பணி; சிந்தூர் ஆபரேஷன் வரை பங்களிப்பு!' - ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி(60). இவர், இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்து வாகா எல்லையில் தொடங்கி பத்தான்கோட், ரஜோரியின் பனிமலை, ம... மேலும் பார்க்க

`SIR, வாக்குப்பதிவு இயந்திர முறையை நீக்க வேண்டும்'- மும்பை பேரணியில் தாக்கரே சகோதரர்கள் கோரிக்கை!

மும்பையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோரி இன்று சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் இணைந்து மிகப்பெ... மேலும் பார்க்க

வீவ்ஸ் & வொண்டர்ஸ்’26 : RmKV-யின் புதிய கலெக்சன் அறிமுகம்!

நூற்றாண்டுக்கும் மேலாக, தனித்துவமான பட்டுப் புடவைகளுக்காகவும், கைத்தறித் துறைக்கான சிறப்பான அர்ப்பணிப்பிற்காகவும் ஆரெம்கேவி சில்க்ஸ் புகழ்பெற்று விளங்குகிறது. இந்த மரபைத் தொடர்ந்து, புகழ்பெற்ற ஹம்ச தம... மேலும் பார்க்க