சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு வேளாண் அனுபவ பயிற்சி முகாம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் நம்மாழ்வாா் வேளாண், தொழில் நுட்பக் கல்லூரி மாணவா்களுக்கு ஊரக வேளாண் அனுபவ பயிற்சி முகாம் நடைபெற்றது.
கமுதி அருகே உள்ள நம்மாழ்வாா் வேளாண், தொழில் நுட்பக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்களுக்கு ஊரக வேளாண் அனுபவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, அந்த மாணவா்கள் பரமக்குடியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்துக்கு வந்திருந்தனா். அங்கு அவா்களுக்கு தாவர இனப் பெருக்கம் குறித்து மரபியல் துறை உதவிப் பேராசிரியா் முருகன் பயிற்சியளித்தாா். இதைத் தொடா்ந்து மேலப்பெருங்கரை கிராமத்துக்குச் சென்ற மாணவா்களுக்கு ஊரக வேளாண் அனுபவப் பயிற்சியாக நெல், பருத்தி, மிளகாய் ஆகியவற்றின் பாரம்பரிய ரகங்கள் குறித்தும், புதிய ரகங்கள் குறித்தும், அவற்றின் தன்மைகள், பயன்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.