செய்திகள் :

வேளாண் பட்ஜெட்: முதல்வரின் ஆலோசனையும் - விவசாயிகளின் எதிர்பார்ப்பும்!

post image

கடந்த மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற விவசாயிகள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பேசிய வேளாண் அமைச்சர் ஆர்.வினோத், விவசாயிகளின் குரலுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என உறுதி அளித்தார். குறிப்பாக AI, டிரோன் பயன்பாடு மற்றும் காலநிலை முன்னறிவிப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என்றும், 2026-27 நிதியாண்டிற்கு 131.36 லட்சம் மெட்ரிக் டன் உணவுதானிய உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 05) முதலமைச்சர் விஜய் தலைமையில், வேளாண் அமைச்சர் ஆர்.வினோத் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் மற்றும் விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதார விலை, நில உரிமையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 விதைப்பு கால நிதி மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு ‘உழவர் உரிமை அட்டை’ மூலம் ரூ.10,000 வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், பனைமர பாதுகாப்பு, வேளாண் வானிலை அறிவியல் மையம், 100% பயிர்க்காப்பீடு, சொட்டு நீர் பாசன மானியம் 90% ஆக உயர்வு, 5 லட்சம் விவசாயக் குளங்கள், தஞ்சாவூரில் நம்மாழ்வார் இயற்கை விவசாயக் கல்லூரி மற்றும் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவிப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம், விவசாயிகள் தரப்பிலிருந்து முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

`மூன்று தமிழர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஆணவத்தோடு டி.கே.சிவக்குமார் பேசுவதா?' - சீமான் கண்டனம்

`கர்நாடக வனப்பகுதியில் மூன்று அப்பாவித்தமிழர்களை ஈவிரக்கமற்றுச் சுட்டுக்கொன்றுவிட்டு, எங்கள் மாநிலத்தின் விவகாரத்தில் தலையிடாது, உங்கள் வேலையைப் பாருங்கள் எனத் துளியும் குற்றவுணர்ச்சியோ, பொறுப்புணர்ச்... மேலும் பார்க்க

"அந்தத் தண்ணீரைக் குடிக்கிறாங்க, கோயிலுக்கு அபிஷேகம் பண்றாங்க" - கூவம் நதி குறித்து சௌமியா அன்புமணி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை, நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற விவாதத்தின்போதுபேசிய பாமக எம்எல்ஏ சௌமியா அன்ப... மேலும் பார்க்க

"தவெக 10 சீட்டுக்கு மேல் ஜெயித்தால்..." - சவாலில் தோற்றதால் மீசையை மழித்த அதிமுக மாசெ

அ.தி‌.மு.க-வின் நீலகிரி மாவட்ட செயலாளராகத் தற்போது பதவி வகித்து வருகிறார் வழக்கறிஞர் பால‌. நந்தகுமார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2012-ம் ஆண்டு நீலகிரி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க