செய்திகள் :

ஸ்டாலின் 'Care Taker' முதல்வரா? - விஜய் சொல்வது சரியா?

post image

தவெக தலைவர் விஜய் இன்று திருநெல்வேலியில் பிரசாரம் செய்திருந்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசுகையில், இது 'Care Taker' அரசாங்கம் என்று பேசியிருந்தார். விஜய் இப்போதைய அரசை காபந்து அரசு என பொருள்பட பேசுவது சரியா?

Vijay
Vijay

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிமிடத்திலிருந்தே தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும். அதன்படி, ஆட்சியில் இருக்கும் அரசின் அதிகாரங்களுக்கும் கட்டுப்பாடுகள் வந்துவிடும். அரசு அலுவலகங்களில் முதலமைச்சரின் படங்கள் அகற்றப்படும். அரசு எந்த கொள்கை முடிவையும் எடுக்க முடியாது.

புதிய திட்டங்களை தொடங்கவோ அடிக்கல் நாட்டவோ முடியாது. எந்த சலுகைகளையும் அறிவிக்க முடியாது. ஆனாலும், முதல்வர் முதல்வர்தான். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட 'Protocol' முழுமையாக கடைபிடிக்கப்படும். மேலும், ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டின் மே 7 ஆம் தேதிதான் முதல்வராக பொறுப்பேற்றார். அதனால் இப்போதைய அமைச்சரவைக்கு மே 7 ஆம் தேதி வரைக்கும் காலம் இருக்கிறது.

Vijay
Vijay

அதுவரைக்கும் ஸ்டாலின் தான் முதல்வர். இப்போதைய அமைச்சர்களும் அதே பதவியில்தான் நீடிப்பார்கள். எதாவது, அவசரச்சூழல் ஏற்படும் போது தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடும் மேற்பார்வையோடு முதல்வரும் அமைச்சரும் அதிகாரிகளோடு இணைந்து பணியாற்றவும் முடியும். அதனால்தான் இந்த அரசாங்கத்தையும் முதல்வரையும் 'Care Taker' என்றோ காபந்து என்றோ கூற முடியாது.

Care Taker அல்லது காபந்து என்பதற்கு பொருளே வேறு. தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ஒரு முதல்வர் ராஜினாமா செய்து புதிய முதல்வர் பதவியேற்கும் வரையில் ஒரு இடைப்பட்ட காலம் இருக்கும். அந்த இடைப்பட்ட காலத்தில் இப்போதைய முதல்வரே பொறுப்பில் இருப்பார். அதைத்தான் 'காபந்து அரசு' அல்லது 'Care Taker CM' எனக் கூறலாம். இப்போது இருப்பது காபந்து அரசாங்கம் அல்ல. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி அதிகாரங்கள் இல்லாமல் இருக்கும் அரசு இது.

`20 வேட்புமனுக்கள் நிராகரிப்பு; கடத்தல் மிரட்டல்; திட்டமிட்ட சதி'- த.வா.க வேல்முருகன் குற்றச்சாட்டு

இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக - திமுக என இரு கூட்டணியையும் புறக்கணித்து, தனித்துக் களம் காண்கிறது. அதற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்திருக்கிறது. இந்த நிலையில், தமிழக வ... மேலும் பார்க்க

`கண் முன் ட்ரோன் தாக்குதல்கள்; பதுங்க பேஸ்மென்ட் ஏரியா!' - ஈரான் போர் அனுபவம் பகிரும் தமிழர்

சென்னை கோடம்பாக்கத்தில் 'அக்கா கடை' என்கிற பெயரில் மளிகைக் கடை வைத்திருப்பவர் காளிராஜன் . சிவகாசியைச் சேர்ந்த இவர், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து சிறிய அளவில் அந்த மளிகைக் கடையைத் தொட... மேலும் பார்க்க

மெட்ரோ அரசியல்: 'மக்கள் வரிப்பணமும் டெல்லியின் மிரட்டலும்' - விளாசும் பி.டி.ஆர்

பா.ஜ.க வேட்பாளார்கள் வேட்புமனு தாக்கல் செய்ய மத்திய அமைச்சர்களும், சில மாநில முதல்வர்களும் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தனர். அந்த வகையில் மதுரை தெற்கு தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக ராம ஸ்ரீனிவாசன் போட்டிய... மேலும் பார்க்க

திருவொற்றியூர் அ.தி.மு.க பிரசாரத்தில் கைகலப்பு - வேட்பாளர் மகன் மீது சரமாரி குற்றச்சாட்டு

சென்னை திருவொற்றியூர், பாலகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். இவர் அ.தி.மு.க மாணவர் அணியில் திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளராக இருந்து வருகிறார். இந்தத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் குப்பன... மேலும் பார்க்க

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: திமுக Vs அதிமுக - அதிகபட்ச தொகுதிகளை வென்றது எப்போது? | Vote Vibes

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. பல கட்சிகள் தேர்தல் களத்தில் கால் பதித்திருந்தாலும், தமிழகத்தின் பிரதான கட்சிகளாக விளங்குவது திமுக-வும், அதிமுக-வும் தான். இந்த இரு பெரும் கட்சிகளும் எந்தத்... மேலும் பார்க்க