செய்திகள் :

ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? - உறுதியளித்த மோடி

post image

புதுச்சேரியில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு சென்னை வந்த பிரதமர் மோடி, ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.

அப்போது, தமிழக பா.ஜ.க-வின் சீனியர் தலைவர் ஹெச்.ராஜாவையும் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதியையும் வரவழைத்துப் பேசியிருக்கிறார் மோடி.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

அந்தச் சந்திப்பு குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர், "பா.ஜ.க-வின் சீனியர்களுள் ஒருவரான ஹெச்.ராஜா, சில வாரங்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மயங்கி விழுந்தார்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு, உடல்நலம் பெற்று சமீபத்தில் வீடு திரும்பினார் ஹெச்.ராஜா.

காரைக்குடி தொகுதியில் அவர் போட்டியிட விரும்பிய நிலையில், உடல்நிலை காரணமாக தேர்தல் களத்தில் இறங்கவில்லை. இந்தச்சூழலில்தான், சென்னை வந்த பிரதமர் மோடி, ஹெச்.ராஜாவை நேரில் வரச் சொன்னார்.

ஹெச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்த பிரதமர், ''இந்தக் கட்சிக்காக உங்களுடைய உழைப்பு அளப்பரியது. அதற்குரிய மரியாதையை நான் செய்ய வேண்டுமென விரும்புகிறேன். இந்தத் தேர்தல் முடிந்தவுடன், உங்களுக்கு ஆளுநர் பதவியளிக்க தீர்மானித்திருக்கிறோம்.

நாட்டுக்கான உங்களுடைய பணி தொடர வேண்டும்'' என்று வாழ்த்தியிருக்கிறார். பிரதமரிடமிருந்து இப்படியொரு ஸ்வீட்டான செய்தி வருமென ஹெச்.ராஜாவும் எதிர்பார்க்கவில்லை.

 பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அவரோடு சமகாலத்தில் பயணித்த இல.கணேசன், தமிழிசை செளந்திரராஜன், சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் ஆளுநர் பதவியை அலங்கரித்துவிட்டனர். ஆனால், ஹெச்.ராஜாவுக்குத்தான் எந்தப் பொறுப்பும் வழங்கப்படாமலேயே இருந்தது. உடல்நிலை காரணமாக, இனி தீவிர அரசியலில் ஈடுபட முடியுமா என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது. இந்தச்சூழலில், ஆளுநர் பதவி கிடைக்குமென பிரதமர் உறுதியளிக்கவும், ராஜாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.

தற்போது பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களாக இருக்கும் நான்கு பேரில், மொடக்குறிச்சி சரஸ்வதிக்கு மட்டும் சீட் கிடைக்கவில்லை. அதே தொகுதியில் அவருடைய மருமகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதனால், பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார் சரஸ்வதி" என்றனர்.

கரூர்: "சட்டை அவரோடது தான்; ஆனால், மாப்பிள்ளை அவரில்லை.!" - திமுக வேட்பாளரை கிண்டல் செய்த அண்ணாமலை

கரூர், வெங்கமேடு பகுதியில் அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.இதில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள... மேலும் பார்க்க

பிரசாரத்துக்கு விடுமுறை எடுக்கும் விஜய் - கவலையில் தவெக வேட்பாளர்கள்?

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் ஓய இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கிறது. எல்லா கட்சித் தலைவர்களும் அதிகமான தொகுதிகளை கவர் செய்ய சுற்றி சுழன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தவெக தலைவர் விஜய் மட்டு... மேலும் பார்க்க

தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

வருகிற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை மாற்றி வருகிறது இந்திய தேர்தல் ஆணையம்.அதன் ஒரு பகுதியாக, இப்போது தமிழ்நாடு உள்துறை செயலாளர் மாற்றப்பட்டுள... மேலும் பார்க்க

"பா.ஜ.க-வுக்கு பன்முகம் கிடையாது, கோர முகம் தான் இருக்கிறது"- செல்வபெருந்தகை கடும் தாக்கு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிள்ளியூர் வேட்பாளர் ராஜேஷ்குமார், குளச்சல் வேட்பாளர் தாரகை கத்பர்ட், விளவங்கோடு வேட்பாளர் டி.டி.பிரவீன் ஆகியோரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவ... மேலும் பார்க்க

முழுமையாக திறக்கப்படாத ஹார்முஸ் ஜலசந்தி - ஈரான் 'இதை' மறந்ததே காரணம்!

மூன்று நாள்களாக ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது.இருந்தும் ஈரான் அனுமதித்த கப்பல்கள் மட்டும் ஹார்முஸைக் கடந்து வருகிறது‌.ஆனால், அந்தக் கப்பல்களையும் வழக்கமான பாதையில் அல்லாமல், ஹார்முஸிலேயே வேறு பா... மேலும் பார்க்க

TVK Vijay: "அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.!"- தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்க... மேலும் பார்க்க