செய்திகள் :

11 ஆண்டுகள் பயணம்... 2 உலகக் கோப்பை வெற்றி - சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த மார்க் வுட்!

post image

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளரான மார்க் வுட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்காக மொத்தமாக 11 ஆண்டுகள் மார்க் வுட் விளையாடியிருக்கிறார்.

2015-ல் அறிமுகமாகி 38 டெஸ்ட் போட்டிகளில் 119 விக்கெட்டுகளையும், 70 ஒருநாள் போட்டிகளில் 80 விக்கெட்டுகளையும், 38 டி20 போட்டிகளில் 54 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார்.

மார்க் வுட்
மார்க் வுட்

தவிர இரண்டு உலகக் கோப்பைகளை இங்கிலாந்து அணிக்காக வென்று கொடுத்திருக்கிறார்.

நான்கு ஆஷஸ் தொடர்களில் வெல்லவும் உதவியிருக்கிறார். மார்க் வுட் கடந்த 2015-ல் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார். வலது கை வேகப் பந்துவீச்சாளரான இவர் 150+ கி.மீ./மணி வேகத்தில் பந்துவீசும் ஆற்றல் கொண்டவர்.

தொடர் காயங்கள் காரணமாக, மருத்துவ ஆலோசனையின் பேரில் டெஸ்ட் மற்றும் 50 ஓவர் கிரிக்கெட்டில் தொடர முடியாது என்பதால், இங்கிலாந்து அணிக்காக விளையாடிய பெருமையுடன் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதாக மார்க் வுட் தெரிவித்திருக்கிறார்.

ஜாகீர் கான்: ஸ்டார் வீரர் டு Mentor டு ஹெட் கோச் - நீண்ட அனுபவம் CSK அணிக்கு கைகொடுக்குமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்ட காலப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகிய நிலையில், அவரது இடத்தை இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நிரப்புகிறார். 2027 ஐபிஎல் சீசன் முதல் சிஎஸ்கே அ... மேலும் பார்க்க

Asian Games 2026: Shooting-ல் Mass... MMA-வில் வரலாற்றுச் சாதனை! 6 பதக்கங்களுடன் இந்தியா! நாளை?

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் இரண்டாவது பதக்க நாளில் இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்கு பதக்கங்களைக் குவித்துள்ளது. ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் (10m Air Rifle) தனிநபர் பிரிவில் இர... மேலும் பார்க்க

Asian Games: 0.2 விநாடியில் நழுவிய இறுதிப்போட்டி வாய்ப்பு; மகன் வேதாந்த்தைப் பாராட்டிய நடிகர் மாதவன்

சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் பொதுவாக வெள்ளித்திரையையே தங்களின் முதல் களமாகத் தேர்ந்தெடுக்கும் சூழலில், கடின உழைப்பும் உடல்தகுதியும் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்கும் விளையாட்டுத் துறையைத் தேர்ந்த... மேலும் பார்க்க

HYROX போட்டி: வெற்றியை கொண்டாட முடியாத வீராங்கனை; மைதானத்தை சுத்தம் செய்த நிர்வாகம் - என்ன நடந்தது?

2017-ஆம் ஆண்டு ஜெர்மனியில் தொடங்கப்பட்ட ‘ஹைராக்ஸ்’ (Hyrox) உடற்பயிற்சி போட்டி, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகளவில் வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 1 கிலோமீட்டர் ஓ... மேலும் பார்க்க

மகளிர் T20I: `அதிக ரன்கள் குவித்தவர்...' - வரலாற்றுச் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தானா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்... மேலும் பார்க்க

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்; தமிழக வீராங்கனை இளவேனில் சாதனை

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இளவேனில் வாலறிவன் சோனம் மாஸ்கர், விதர்சா வினோத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,898 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் மூலம... மேலும் பார்க்க