செய்திகள் :

35% மேல் நஷ்டம் தந்த இன்டர்நேஷனல் ஃபண்டுகள்! நீங்களும் இவற்றில் முதலீடு செய்திருக்கிறீர்களா?

post image

கடந்த ஓராண்டு காலமாக நல்ல ஏற்றத்தில் இருந்தன இன்டர்நேஷனல் மியூச்சுவல் ஃபண்டுகள். ஆனால், கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்கப் பங்குச் சந்தை இறக்கம் அடைந்ததைத் தொடர்ந்து, இன்டர்நேஷனல் மியூச்சுவல் ஃபண்டுகளில் சில 35% மேல் நஷ்டம் தந்துள்ளன.

என்விடியா

நிப்பான் இந்தியா தைவான் ஈக்விட்டி ஃபண்ட் நிறுவனம் 38% வரை விலை இறக்கம் கண்டு நஷ்டத்தைத் தந்துள்ளது. என்வீடியா நிறுவனர் தைவானைச் சேர்ந்தவர் என்பதால், தைவானில் செமி கன்டக்டர் உள்பட பல நிறுவனங்கள் அதிவேக வளர்ச்சி கண்டு வந்தன. ஆனால், என்வீடியா நிறுவனம் சர்ச்சையில் சிக்கியதால்,தைவான் பங்குச் சந்தை குறிப்பிடத்தகுந்த அளவு இறக்கம் கண்டுள்ளது. இதனால்தான் இந்த ஃபண்டுகளின் விலையும் குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அடுத்து, ஹெச்.எஸ்.பி.சி நிறுவனத்தின் பிரேசில் ஃபண்ட் 30% வரை இறக்கம் கண்டுள்ளது. ஆக்சிஸ் கிரேட்டர் சைனா ஈக்விட்டி ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டம் 19% இறக்கம் கண்டுள்ளது. மிரே அசெட் ஹேங்க் செங் டெக் இ.டி.எஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டம் 6% நஷ்டத்தையும், மோதிலால் ஆஸ்வால் நாஸ்டாக் 100 ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டம் 4% கடந்த ஒரு மாத காலத்தில் தந்துள்ளது.

SEBI - செபி
SEBI - செபி

இன்டர்நேஷனல் ஃபண்டுகளின் மதிப்பீடு மிக அதிகமாக உள்ளது. இதற்கு மேல் இதில் முதலீடு செய்தால், எந்த நேரத்திலும் சந்தை சரிந்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் வர வாய்ப்பு இருக்கிறது என்பதால், இந்த ஃபண்டுகளில் புதிதாக முதலீடு செய்ய ஆறு மாதங்களுக்கு முன்பே தடை விதித்தது செபி. இந்தத் தடை வந்தபிறகும் அமெரிக்க மற்றும் தைவான் சந்தை மேலே செல்வதைப் பார்த்து, பல முதலீட்டாளர்கள் நல்ல வாய்ப்பு போச்சே என்று வருத்தப்பட்டனர்.

ஆனால், செபியின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு இன்டர்நேஷனல் ஃபண்டுகளில் செய்திருந்த முதலீட்டைக் குறைத்துக்கொண்டவர்கள் அல்லது முதலீட்டை முற்றிலுமாக விற்றுவிட்டு வெளியே வந்தவர்கள் தப்பித்தார்கள். அப்படிச் செய்யாத முதலீட்டாளர்கள் இப்போது 35% வரை நஷ்டம் கண்டிருக்கிறார்கள்.

கிஃப்ட் சிட்டி
கிஃப்ட் சிட்டி

அமெரிக்கப் பங்குச் சந்தையில் இப்போது முதலீடு செய்வதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், டாலர் மூலம் முதலீடு செய்யும் கிஃப்ட் சிட்டி ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்யலாம். இதன் மூலம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தடை எதுவும் இல்லை. அமெரிக்க டாலரில் முதலீடு செய்து அமெரிக்க டாலராகவே முதலீட்டைத் திரும்பப் பெறுவதுதான் கிஃப்ட் சிட்டி ஃபண்ட் திட்டங்களின் தனிச் சிறப்பாகும்.

பொதுவாக, ஒரு முதலீட்டாளர் இன்டர்நேஷனல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் எனில், முதலீட்டுப் பரவலாக்கம் என்கிற நோக்கத்தில்தான் முதலீடு செய்ய வேண்டும். ஒரு முதலீட்டாளர் ஒரு லட்சம் ரூபாயை இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் போகிறார் எனில், அதில் 10% - 20% மட்டுமே இன்டர்நேஷனல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதிகமான முதலீட்டை இன்டர்நேஷனல் ஃபண்டுகளில் செய்தால், மிக அதிகமான நஷ்டத்தை அடைய வேண்டி இருக்கும்.

இந்த இன்டர்நேஷனல் ஃபண்டுகள் உங்களிடம் இருக்கிறதா என்பதை அவசியம் பாருங்கள்!

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டுமா?

லாபம்

மியூச்சுவல் ஃபண்டில் SIP மற்றும் Lump sum முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் லாபம் நிறுவனத்தின் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!

ஏ.ஆர்.குமார் - 89259 44568

சபரிநாதன் - 89259 44569

தங்கலட்சுமி - 95007 77894

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

Vikatan Wealth Pvt Ltd - ARN - 310095

குழந்தையின் எதிர்காலத்திற்காக எவ்வளவு சேமிக்க வேண்டும்? நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முதலீடுகள்!

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தர விரும்புகிறார்கள். அதற்காக உழைக்கிறார்கள், சேமிக்கிறார்கள், பல தியாகங்களையும் செய்கிறார்கள். ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை ... மேலும் பார்க்க

SIP: உச்சத்தைத் தொட்ட Stoppage Ratio... என்ன காரணம்?!

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் பல லட்சம் புதிய முதலீட்டாளர்கள் புதிதாக எஸ்.ஐ.பி கணக்கைத் தொடங்கிக் கொண்டு இருப்பதும், ஏற்கெனவே முதலீடு செய்துவரும் முதலீட்டாளர்கள் தங்கள் எஸ்.ஐ.... மேலும் பார்க்க

மினிமல் பேலன்ஸ் முதல் பணம் வரை... Post Office கணக்கு, PPF, RD-ல் என்னென்ன மாற்றங்கள்?

அஞ்சல் துறை சமீபத்தில் அஞ்சலக சேமிப்பு வங்கியின் (POSB) திருத்தப்பட்ட கோர் பேங்கிங் சொல்யூஷன் (CBS) கையேட்டை வெளியிட்டுள்ளது. அந்தக் கையேட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய விதிகள்: 1. குறைந்தபட்ச இருப்புத் ... மேலும் பார்க்க

2027-ல் ₹5,00,000 மெடிக்கல் இன்ஷூரன்ஸ், ₹50,00,000 லைஃப் கவர்! - உங்கள் குடும்பத்துக்குப் போதுமா?

"என்னிடம் ₹5 லட்சம் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் ₹50 லட்சம் லைஃப் இன்சூரன்ஸ் உள்ளது, இது போதுமானது!" என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் ஒரு நிதி ஆபத்தில் இருக்கிறீர்கள் எ... மேலும் பார்க்க

இனி PF கணக்கில் இருந்து 90 சதவிகிதம் வரை பணம் எடுத்துக்கலாம்! வேறு என்ன மாற்றம்?

நேற்று (நவம்பர் 19) ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தற்போது பி.எஃப்.-இல் இருந்து பகுதி அளவு பி.எஃப். பணம் எடுக்கும் நடைமுறையில் சில மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.அவை என்ன?> த... மேலும் பார்க்க

40+ வயதில் முதலீட்டைத் தொடங்க இருக்கீங்களா? NRI-களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

"முதலீடு செய்யத் தாமதமாகிவிட்டதே!" என்ற கவலை உங்களுக்கு இருக்கிறதா? வெளிநாட்டில் (NRI) பணிபுரியும் பலருக்கும், குடும்பப் பொறுப்புகள், கடன்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் காரணமாக 20 அல்லது 30 வயதில் மு... மேலும் பார்க்க